நோக்கத்திற்கு இணங்க நிற்பதுமாதிரி

Step into Purpose

5 ல் 3 நாள்

எளிமையாக்க பட்ட நோக்கம்

"நோக்கம்" என்ற வார்த்தை நான் சபையில் வளர்ந்த போது என்னை குழப்பிய ஒன்று.

தேவன் என்னை எவ்வாறு உபயோகிக்க விரும்புகிறார்? நான் எப்போது அதை கண்டறிவேன்? அதன் மட்டும் நான் என்ன செய்ய வேண்டும்? நான் அநேக முறை இந்த கேள்விகளை கேட்டு பதிலில்லாமல் அதைரியபட்டதுண்டு.

இது ஒரு தொடர் போராட்டமாக இருந்தது, என்னை ஜீவிய மாற்றம் அடைய செய்த ஒரு வேத வாக்கியத்தை நான் கண்டது வரைக்கும் - “ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்..” (1 கொரிந்தியர். 10:31)

வெளிப்பாடு எனக்குள்ளாக வந்தது.

ஆம், தேவன் நாம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திட்டங்களை கொண்டிருக்கிறார். ஆம், உங்களுக்கான நோக்கம் மற்றவர்களின் நோக்கத்திற்கு வித்தியாசமானது. ஆனால் இவை யாவும் ஒரு, மிகப்பெரிய, கூட்டான, உள்ளான நோக்கத்திற்கு நேரானவை: தேவனுக்கு மகிமையை கொண்டுவர.

தேவன் ஒரு சுய-மகிமையை விரும்பவில்லை! அவருடைய மகிமைக்கான அழைப்பு நம் மீது அவர் கொண்டிருக்கும் மிகப்பெரிய அன்பில் இருந்து வருகிறது. அவர் நன்மையை புரிந்து, அவருக்கு விலைமதிப்பை காட்டும்போது, நாம் வெளிப்படை பெற்று அவருடைய அன்பை நாம் இன்னும் ஆழமான முறையில் புரிந்து கொள்வோம் என்று அவர் அறிவார். இந்த அன்பு எல்லாவற்றையும் மாற்றிவிடும்.

தேவன் நாம் அவரை மகிமைப்படுத்தினாலும் மகிமை படுத்தாவிட்டாலும் கூட நம்மை நேசிக்கிறார், ஆனால் அவர் வாஞ்சை நாம் அவர் அன்பை முழுமையாக புரிந்துகொள்ளவேண்டும் என்று மாத்திரமே இருக்கிறது. தேவனுக்கே மகிமை! அதுதான் நம் நோக்கம்.

அண்ணா வைட்டு எழுதியது

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Step into Purpose

என்னுடைய நோக்கம் என்ன? நான் என் ஜீவனை கொண்டு என்ன செய்ய எதிர்பார்க்கப்படுகிறது? எனக்காக தேவனுடைய திட்டம் என்ன? இவைகளெல்லாம் நாம் நம் ஜீவியத்தில் எதோ ஒரு வேளையில் கேட்கும் கேள்விகள். உங்கள் நோக்கத்தை குறித்து இந்த திட்டத்தில் சில கேள்விகளை நாம் பதிலளிக்க போகிறோம். இந்த தலைப்பில் சில காரியங்களை பதிலளிக்க முயலும் எங்கள் C3 கல்லூரி மாணவர்களோடு சேர்ந்து வாசியுங்கள்.

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக C3 சபை சிட்னி-க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.c3college.com க்கு செல்லவும்