திட்ட விவரம்

நோக்கத்திற்கு இணங்க நிற்பதுமாதிரி

Step into Purpose

5 ல் 2 நாள்

காத்திருப்பதன் நோக்கம்



நாம் மைக்கிரோவேவ் தலைமுறையில் ஜீவிக்கிறோம். எல்லாம் உடனடியாக நடக்க வேண்டும். நாம் காத்திருக்க விரும்புவதில்லை, முடிவுகள் உடனடியாக வேண்டும். இதேபோல தான் நம்முடைய நோக்கங்களையும் கருதுகிறோம்.



நாம் தேவன் நம்மை ஒரு நோக்கத்தோடு அழைத்திருக்கிறார் என்று ஒருவேளை நம்பலாம்-அநேகரை ஆராதனைக்கு வழிநடத்துவது, ஒரு பிரபலமான வர்த்தகம் நடத்தவும், அதிக பணம் சம்பாதிக்கவும், நம்முடைய அன்பை தெரிந்தெடுத்து திருமணம் செய்யவும், உலகம் எங்கும் பிரயாணித்து சுவிசேஷத்தை பிரசங்ககிக்கவும்...அந்த பட்டியல் சென்று கொண்டே இருக்கும். இந்த காரியங்கள் நடக்க நம்பி ஆசைப்படுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் இந்த நிலையை அடைவதற்கு, நேரமும் காத்திருப்பதும் தேவை படுகிறது!



இஸ்ரவேலின் ராஜாவாக சாமுவேலால் தாவீது அபிஷேகம் செய்யப்பட்டபோது வெறும் 15 வயதாக இருந்ததாக சொல்லப்படுகிறது, ஆனாலும் தாவீது 30 வயது ஆகும் மட்டும் தாவீது அந்த நிலையை எடுக்கவில்லை (2 சாமுவேல் 5:4)! இந்த காத்திருக்கும் காலத்தில், தேவன் தாவீது ராஜாவாகும் படியாக அவரை ஆயத்தப்படுத்தினார். தாவீது தன் ஜீவியத்தில் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்களை வனாந்திரத்தில் தான் கற்றுக்கொண்டார், அங்குதான் தேவனை மாத்திரமே அவரால் சார்ந்து இருக்க முடிந்தது.



சங்கீதங்களை வாசிக்கும்போது தாவீது உள் சென்ற துக்கங்களை நாம் உணர முடியும், அவர் சிந்தின கண்ணீர், அதோடுகூட தேவனின் உண்மை தன்மையை அவர் கற்றுக்கொண்டதையும், அவர் அன்பை புரிந்துகொண்டதையும், தேவனில் தாவீது எவ்வாறு பெலனையும் அடைக்கலத்தையும் கண்டுகொண்டார் என்றும் காண்கிறோம். சங்கீதம் 25 வாசி. இந்த சூழ்நிலைகள் மூலம் செல்வதன் மூலம், தாவீது மகாபெரிய, தேவபயம் நிறைந்த மனிதனாக தேவன் இஸ்ரவேலுக்கு ராஜாவாகவும் வடிவமைக்க பட்டார்.



தாவீதை போலவே, காத்திருக்கும் காலம் சுலபமாக இருப்பதில்லை, அனால் தேவன் நமக்கென்று கொண்டிருக்கும் நிலைக்கு நம்மை அவர் வடிவமைக்கும் நேரமாகவும் இருக்கிறது! பொறுமையாக இரு, தேவன் உனக்கென்று கொண்டிருக்கும் எல்லா திட்டங்களுக்கும் உன்னை கொண்டுசேர்க்கும் மட்டும் அவர் உன்னோடு ஒவ்வொரு படியிலும் கூடவே இருப்பார்.






யோசுவா சிஜி எழுதியது


நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Step into Purpose

என்னுடைய நோக்கம் என்ன? நான் என் ஜீவனை கொண்டு என்ன செய்ய எதிர்பார்க்கப்படுகிறது? எனக்காக தேவனுடைய திட்டம் என்ன? இவைகளெல்லாம் நாம் நம் ஜீவியத்தில் எதோ ஒரு வேளையில் கேட்கும் கேள்விகள். உங்கள் நோக்கத்தை குறித்து இந்த திட்டத்...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக C3 சபை சிட்னி-க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய: https://www.c3college.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்