விசுவாசம் தளரும் போது: சந்தேகத்தின் நிழலில் தேவனைக் கண்டடைய 10 நாட்கள்மாதிரி

கர்த்தரின் சபை ஒரு குடும்பமாக வாழவேண்டும் என்பதே தேவனுடைய இருதயத்தின் நோக்கமாக இப்போதும் எப்போதும் இருக்கிறது. திருச்சபை என்பதில் நாம் போராட்டங்களையும் , ஆச்சரியங்களையும், வழிபடுதளையும் சந்தேகங்களையும் ஒன்றாக சந்திக்கிறோம். தேவாலயம் தான் நம்முடைய கடந்த காலத்தின் அனைத்து காயங்களுடனும் வந்து குணப்படுதலையும் ஏற்றுக்கொள்ளப்படுதலையும் கிருபையையும் பெற்றுக்கொள்ளும் இடம். உடைந்த மக்கள் தாங்கள் தனியாக இல்லை என்பதைக் கண்டறியும் இடம் திருச்சபை. அப்போஸ்தலர் 2-ம் அதிகாரத்தில் சபையின் மீது முதன்முதலில் தேவன் அவருடைய ஆவியை ஊற்றியது அவருடைய தரிசனம். அது தான் உங்கள் மீதும் அவர் கொண்டுள்ள தரிசனமாக இருக்கிறது.
பல சபைகளும் இந்த தரிசனத்தின்படி சரியாக செயல்படவில்லை என்பது நிதர்சனமே. பல காரியங்களும் மாற்றபட வேண்டியவையாக இருப்பதும் உண்மையே, ஆனாலும் நீங்களே அந்த மாற்றமாக இருக்கலாம்.
நீங்களே திருச்சபையாக இருக்கிறீர்கள்.
சபை என்பது ஒரு கட்டிடம் அல்ல மாறாக அது இயேசுவின் வழியை ஒன்றாக பின்பற்றி வரும் மக்களின் ஒரு ஐக்கிய ஒருங்கிணைப்பு. அது நம்முடைய விசுவாசத்தின் நல்ல, அழாகான மற்றும் குழப்பமான காரியங்களில் ஒருவருக்கொருவர் சார்ந்து இருப்பது. நம்முடைய சந்தேகங்களில் ஒருவருக்கொருவர் கரங்களை கோர்த்து கடந்து செல்வது.
மத்தேயு 26ம் அதிகாரத்தில், இயேசு இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அவர் தன் நண்பர்களுடன் ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்தார். அவர்கள் பாடினார்கள். பிரார்த்தனை செய்தார்கள். பின்பு அவர் ஒரு அப்பத்தை எடுத்து அதை உடைத்தார்; அவர் ஒரு கோப்பை மதுவை எடுத்து பகிர்ந்து கொண்டார். அவர், “இது என் உடல்; இது என் இரத்தம். என்னை நினைவுகூரும் வகையில் இதை உண்ணுங்கள், பருகுங்கள்” என்றார். அந்நேரம் அந்த மேசையைச் சுற்றி தீவிரமான பிரச்சினைகள், சந்தேகங்கள், குறைபாடுகள் மற்றும் நம்பிக்கையுடன் போராடும் பலதரப்பட்ட மக்கள் அமர்ந்திருந்தனர்.
ஆனால் இயேசு அவர்கள் அனைவரையும் வரவேற்றார். உடைந்த உடலை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவர்கள் அனைவருக்குமே மேசையில் இடம் கொடுத்தார்.
உங்களுக்கான அப்படிப்பட்ட ஐக்கியம் எங்கே? உங்கள் வாழ்க்கையின் மறைவான இடங்களுக்குள் நீங்கள் அனுமதித்த உங்கள் மேஜையைச் சுற்றியுள்ளவர்கள் யார்? எப்படிப்பட்ட வழிகளில் உங்கள் உடைந்த வாழ்க்கையின் காரியங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்?
உங்கள் சந்தேகத்தை நீங்கள் மட்டும் தாங்க வேண்டியதில்லை. . . .
சந்தேகத்தோடு போராடிவருகிறீர்கள் என்றால் ஒரு ஐக்கியதோடு இணைந்திருப்பது அவசியம்.
இது உங்களுக்காக மட்டுமன்றி பிறருக்காகவும் தான். நீங்கள் சந்தேகத்துடன் போராடவில்லையென்றாலும், உங்களுக்கு அருகில் இருப்பவர்களில் ஒருவர் அவ்வாறு இருக்கலாம். அவர்களுக்கு நீங்கள் தேவை. உங்களுடைய பிரார்த்தனைக்காகவும், அவர்களுடைய கஷ்டங்களை கேட்பதற்காகவும், ஊக்கமளிப்புக்காகவும் அவர்கள் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஊக்குவித்தல் எனும் வார்த்தையின் நேரடி அர்த்தம் “தைரியத்தைக் கொடுப்பது” என்பதே. விசுவாசத்தில் குழம்பியிருக்கும் ஒருவருடன் உங்களுடைய தைரியத்தைப் பகிர்ந்துகொள்ளும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. சந்தேகப்படும் ஒரு நண்பரிடம் நீங்கள் சொல்லக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த விஷயங்களில் ஒன்று, "இதிலும் நான் உன்னை நேசிக்கிறேன்." என்பது. அவர்களுக்கு நீங்கள் தேவை. அவர்களுக்கு உங்கள் துணை தேவை. அவர்களுக்கு உங்கள் பலம் தேவை. அவர்களுக்கு உங்கள் காயங்களும் கூட தேவை.
இந்த திட்டத்தைப் பற்றி

ஒருவர் விசுவாசத்தோடும் சந்தேகத்தோடும் போராடும்போது தனிமையாகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் உணரக்கூடும். சிலர் மெளனமாக கஷ்டங்களை சகிக்கின்றனர், ஆனால் மற்றவர்களோ சந்தேகம் விசுவாசத்தோடு பொருந்தாது என்று நினைத்து விசுவாசத்தையே கைவிட்டுவிடுகின்றனர். டோமினிக் டன் என்பவர் இது மிகவும் கவலைக்குரியது என்றும் மிக தவறானது என்றும் நம்புகிறார். கேள்வி கேட்பது இயல்பானது மாத்திரம் அல்ல, ஒரு வளமான மற்றும் திடமான விசுவாசத்திற்கு வழிவகுக்கக் கூடியது என்றும் வேதாகமத்திலிருந்தும் புத்தகங்களிலிருந்தும் சுட்டிக் காட்டுகிறார். இந்த 10-நாள் வாசிப்புத்திட்டத்தில் விசுவாசம் மற்றும் சந்தேகத்தைப் பற்றி ஆராயுங்கள்.
More