திட்ட விவரம்

விசுவாசம் தளரும் போது: சந்தேகத்தின் நிழலில் தேவனைக் கண்டடைய 10 நாட்கள்மாதிரி

When Faith Fails: 10 Days Of Finding God In The Shadow Of Doubt

10 ல் 7 நாள்

யாத்திராகமம் புஸ்த்தகத்தில், தேவன் மோசேயிடம் தன்னுடைய காலணிகளை கழற்றி போட சொன்னபோது, மோசே “பரிசுத்த நிலத்தில் ” நின்றுகொண்டிருந்ததே அதற்குக் காரணம். அது அவருக்கு எவ்வளவு ஆச்சரியமாக இருந்திருக்கும்! மோசே பாலைவனத்தை நன்கு அறிந்திருத்தவர். அவர் நாற்பது வருடங்களாக ஒரு மேய்ப்பராக அதில் நடந்திருந்தவர். மோசே அதே இடத்தில் வேலை செய்தவர். அவரது மனதில் அது பொதுவான, தூசி, அழுக்கு, செம்மறி ஆடுகள் நிறைந்த நிலமாக இருந்தது. ஆனால் தேவனுக்கு அது பரிசுத்த நிலமாய் இருந்தது என்று கூறினார்

இப்போது நீங்கள் இருக்கிற நிலம் பரிசுத்தமாக நிரம்பி இருந்தால் எப்படியிருக்கும்? உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விவரமும் தேவனுடைய மௌனத்தினால் ஊடுருவி இருந்தால் எப்படியிருக்கும்? உங்களைச் சுற்றியுள்ள வளிமண்டலம் அவருடைய குரலால் தூண்டப்பட்டால் எப்படியிருக்கும்?



தேவன் சொல்வதென்றால். நீங்கள் எதிர்பார்ப்பது போல ஏதுஉம் இருக்காது.



தேவன் பிற மக்கள் மூலமாகவும் பேசுகிறார். ஒருவேளை உங்களுக்கு எரிச்சலை உண்டாக்குபவர் மூலமாகவும் பேசுகிறார்.



கலைகள், நல்ல புத்தகங்கள், இசை, கவிதை, பாடல்கள் மற்றும் புகைப்படம் மூலமாகவும் தேவன் பேசுகிறார்



தேவன் கனவுகள் மூலமாகவும் பேச முடியும். . . .



படைப்பின் மூலமாகவும் பேசுகிறார், நாம் அவர் செய்ததின் அழகை சுவாசிக்கிறோம்.



அவர் நம்பிக்கை மூலம் பேசுகிறார் மற்றும் ஏதோ தவறு என்று வெறுக்கும் உணர்வு மூலம் பேசுகிறார். (சில நேரங்களில் பிரச்சினை தேவனின் மௌனம் அல்ல, ஆனால் செவிடாக்குவது நம் பாவம். பாவம் நம் வாழ்க்கையில் மிகப் பெரிய குரலாக இருக்க விரும்புகிறது. ஆனால் அதை விடக்கூடாது.)



அவர் நமது வலி மூலம் பேசுகிறார்.



அவர் நமது இழப்பில் பேசுகிறார்.



அவர் நமது சந்தேகத்திலும் பேசுகிறார்.



தேவனுக்கு சாதாரண நிலம் என்று எதுவும் இல்லை. எல்லாம் பரிசுத்தமானது. இந்த தருணதில், இப்போது, நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ, அது பரிசுத்தமானது . உங்கள் காலணிகளை அகற்றி, உங்களை தாழ்த்தி தேவனை நோக்கி அமரும்படி தேவன் உங்களை அழைக்கிறார்.





தேவன் இப்பொழுது இங்கே இருக்கிறார்





தேவனின் நடத்துதல் உங்கள் வாழ்நாள் முழுவதும் உள்ளன

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

When Faith Fails: 10 Days Of Finding God In The Shadow Of Doubt

ஒருவர் விசுவாசத்தோடும் சந்தேகத்தோடும் போராடும்போது தனிமையாகவும் தனிமைப்படுத்தப்பட்டவராகவும் உணரக்கூடும். சிலர் மெளனமாக கஷ்டங்களை சகிக்கின்றனர், ஆனால் மற்றவர்களோ சந்தேகம் விசுவாசத்தோடு பொருந்தாது என்று நினைத்து விசுவாசத்த...

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக ஹார்பர்காலின்ஸ்-க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய: http://bit.ly/2Pn4Z0a க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்