நோயல்: அனைவருக்கும் கிறிஸ்துமஸ்மாதிரி

Noel: Christmas Is For Everyone

12 ல் 1 நாள்

எவ்வளவு அழகான பெயர்

Danny Saavedra

“ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.”—யோவான் 1:1–3 (NIV)

ஒருவருடன் அறிமுகமாகும் போது அவர்களைப்பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ளும் முதல் காரியம் என்ன? அவர்களது பெயர்! ஏன்? ஏனென்றால் பெயர்களைக் கொண்டு மக்களை நினைவு கூறுகிறோம், அவர்களை அடையாளம் கண்டுக்கொள்கிறோம், யாரிடம் பேசுகிறோம் என்றும் யாரை சுட்டிக்காட்டுகிறோம் என்றும் அறிந்துக்கொள்கிறோம்.

அந்நாட்களில், பெயர்களுக்கு அர்த்தம் இருந்தது. இந்நாட்களில், அழகாக இருக்கும் பெயர், பிரபலமான பெயர் எது என்று அவர்கள் நினைக்கிறார்களோ அதை தங்கள் பிள்ளைகளுக்கு வைக்கின்றனர். அந்த பெயர் எப்படி உருவானது, எப்படியெல்லாம் வழங்கப்பட்டது, அதன் கலாச்சார முக்கியத்துவமும் பாரம்பரியமும் என்ன என்றெல்லாம் பார்பதில்லை. பழங்காலத்தில், பெயர்கள் சிறப்புக் காரணங்களுக்காகக் கொடுக்கப்பட்டன. ஈசாக்கு ("அவன் சிரிக்கிறான்") என்ற பெயர் வைத்ததன் காரணம், வயது முதிர்ந்த காலத்தில், தேவன் அவர்களுக்கு ஒரு மகனைக் கொடுப்பார் என்று சொல்லப்பட்டப் போது, ஆபிரகாமும் சாராளும் சிரித்தனர். யாக்கோபு ("அவன் குதிங்காலை பிடிக்கிறான்") என்ற பெயர் அவனுக்கு வைத்ததன் காரணம், அவன் ஏசாவின் "குதிங்காலைப் பிடித்துக்கொண்டு" பிறந்தான். (ஆதியாகமம் 25:26 NIV). 

வேதாகமத்தில் உள்ள பெயர்கள் உண்மையாகவே முக்கியத்துவம் உள்ளவை, ஏனென்றால் அவை அந்த நபரைப் பற்றி நமக்கு சொல்லுகின்றன. குறிப்பாக, தேவனுடைய பல பெயர்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. எல் ஷடாய் முதல் யெகோவா ரா வரை, தேவனுடைய ஒவ்வொரு பெயரும் அவரைப் பற்றிய ஒன்றை நமக்கு வெளிப்படுத்துகின்றன. தேவனுக்குக் கொடுக்கப்பட்ட எல்லா பெயர்களிலும், மிக சுவாரசியமான, உன்னதமான பெயர் யோவான் 1:1 இல் குறிப்பிடப்பட்டிருக்கிரதாக தான் இருக்க வேண்டும்: “ஆதியிலே வார்த்தை இருந்தது. . .”

வார்த்தை என்பதற்கு இங்கு நாம் காணும் கிரேக்க வார்த்தை லோகோஸ். லோகோஸ் என்பது ஒரு வல்லமையான, பல பாகங்களைக் கொண்ட, அழகான ஒரு கருத்து. அதற்கு பின் இருக்கும் கிரேக்க தத்துவத்தை விளக்குவதற்கான எளிய வழி, லோகோஸ் என்பது ஒன்றன் பின் இருக்கும் காரணம் அல்லது சொல்லப்படாத காரணம். சிந்தனையில் ஒருங்கிணைத்து வார்த்தைகளில் வெளிப்படுத்தப் படுபவற்றின் சேகரிப்பை தான் இந்த வார்த்தை வருணிக்கிறது. எல்லா பொருட்களிலும் உள்ளடக்கமாக இருக்கும் உலகளாவிய காரணம் என்றும் இருப்பவை எல்லாவற்றையும் தக்கவைக்கும் விதிகளாகவும் இது கருதப்படுகிறது.

எபிரேய கலாசாரத்தில், இந்த கருத்து தேவ சித்தத்தின் வல்லமையை குறிக்கிறது. தேவனுடைய படைப்பாற்றல் கொண்ட செயலையும் சித்தத்தையும் வருணிக்க மெம்ரா என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தை "பேசுதல்" என்ற அரமைக் வார்த்தையிலிருந்து வருவித்தது. 

இப்படி இந்த கருத்தை புரிந்துக் கொள்ளும்போதும், யோவான் 1:1 இல் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தையும் நம்மை ஆதியாகமம் 1 இல் காணப்படும் படைப்பின் சம்பவத்திற்கு நம்மை எடுத்து செல்லுகிறது. தேவன் பேசுவதன் மூலம் பிரபஞ்சம் உருவானதை நாம் அங்கு பார்க்கிறோம். எபிரெயர் 11:3 இதனை இப்படியாக மேலும் விவரிக்கிறது, “உலகங்கள் தேவனுடைய வார்த்தையால் உண்டாக்கப்பட்டதென்றும், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.” 

எனவே, யோவான் 1:1 “ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாய் இருந்தது" என்று சொல்லும்போது, தேவக்குமாரனாகிய இயேசு கிறிஸ்து தேவ வார்த்தையின் உயிருள்ள உருவகமாக இருக்கிறார் என்று யோவான் சொல்கிறார். அவர் சதை கொண்ட கடவுளாக இருக்கிறார், காணப்படாத கடவுளின் உருவமாக (ஐகான்: உச்சக்கட்ட வெளிப்பாடாக, பிரதிபலிப்பாக, உருவமைப்பாக; கண்ணாடி உருவமாக) இருக்கிறார் (கொலோசெயர் 1:15); ஆதியிலே தேவ சித்தத்தை பேசி அதனை வரவழைத்தவர் (ஆதியாகமம் 1:1–2; சங்கீதம் 33:9; எபிரெயர் 11:3). உலகத்திற்கு வெளிப்படுத்தப்பட்ட பிதாவாகிய தேவனின் குணமாக, இதயமாக, சித்தமாக, சிந்தையாக இருக்கிறார். கிரேக்கர்கள் நம்புகிறப்படி, எல்லா பொருட்களிலும் உள்ளடக்கமாக இருக்கும் உலகளாவிய காரணம் இவர் (யோவான் 1:3); இருப்பவை அனைத்தையும் தக்கவைக்கும் விதிகள் (கொலோசெயர் 1:15–17). 

வார்த்தை, பிரபஞ்சம் அனைத்தையும் ஒன்றாக வைத்திருக்கும் அவர் மூலம் படைப்பு முழுவதும் உண்டானது, அவர் "மாம்சமாகி நம் மத்தியில் தம் வாசஸ்தலத்தை ஏற்படுத்தியிருக்கிறார்" என்று யோவான் 1:14 சொல்கிறது. இந்த கிறிஸ்துமஸ் காலம் இதை பற்றியது தான். தேவன் மனிதனானார்! தேவன் நம்மை அதிகம் நேசிக்கிறார் என்பதால் தான், அவர் பரலோகம் விட்டு வந்து நாம் பரலோகத்திற்குள் செல்ல வழி ஏற்படுத்தி, அவரோடு நாம் நித்தியத்தை செலவிட வழி செய்தார்! இதனால் தான் மத்தேயு 1:23 இல், "அவர் இம்மானுவேல் எனப்படுவார்" (அதற்கு "தேவன் நம்மோடு" என்று அர்த்தம்) என்று தேவத்தூதன் யோசேப்பிடம் அறிவிப்பதை காண்கிறோம். பிதாவின் சிந்தைகளையும் அவரது இதயத்தையும், அதாவது அவருடைய வார்த்தையை, உலகத்திற்கு வெளிப்படுத்த, நம்மை இரட்சிக்க, தேவக்குமாரன் அனுப்பப்பட்டார். இதனால் தான் தேவத்தூதர் யோசேப்பிடம் அவருக்கு இயேசு என்று பெயரிட சொல்கிறார். (ஏஷுவா: தேவனே இரட்சிப்பு) “ஏனென்றால் அவர் தம் மக்களை தங்கள் பாவங்களிலிருந்து ரட்சிப்பார்" (மத்தேயு1:21 NIV).

நாம் இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராகும் போது, இம்மானுவேல், நம் இயேசு, நித்திய வார்த்தை, நம் ராஜா, ரட்சகர், நாம் தேவனை ஆழமாக அறிந்துக் கொள்ள, அவர் பிரசனத்தை நெருக்கமாக உணர, இரட்சிக்கப்பட அவர் உலகிற்கு வந்தார். நாம் "தேவனுடைய பிள்ளைகள் ஆகும் உரிமையை நமக்கு இலவசமாக கொடுக்க வந்தார் (யோவான் 1:12). ஏன் தேவன் வர வேண்டும் என்று நாம் நாளை கற்போம்...

இந்த திட்டத்தைப் பற்றி

Noel: Christmas Is For Everyone

அடுத்த 12 நாட்களில் நாம் கிறிஸ்துமஸ் கதையின் வழியாக பயணம் செய்யவிருக்கிறோம். இது வரை சொல்லப்பட்ட மிகப்பெரிய கதையாக இது இருப்பதோடு, கிறிஸ்துமஸ் எப்படி உண்மையாகவே எல்லாருக்காகவும் உண்டானது என்பதையும் கண்டறிய போகிறோம்!

More

இந்த திட்டத்தை வழங்கியதற்காக Calvary Chapel Ft. Lauderdale க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய http://CalvaryFTL.org க்கு செல்லவும்