பளு அதிகம் இல்லாத பயணம் செய்

தியானத்திற்கு

அவமானத்தை விட்டுவிடுவதுநான் தெளிவாக நினைவுக்கூறுகிறேன். எனக்கு மறியாதைக்குரிய ஒருவரை எனக்காக ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டேன். எதைக்குறித்து என்று அவர்கள் கேட்டப்போது, எனக்கு நினைவுக்கு வந்தது என்னில் ஏதோ தவறு உள்ளதாக நான் உணர்ந்தது தான். என் ஆழ்மனதில், உள்ளகத்தில் எதோ தவறு. நான் வளர்ந்தவனாயிருந்தும், என்னிடம் வார்த்தைகள் இல்லை.அவமானமாக இருந்தது.தெளிவுப்படுத்த, அது குற்றஉணர்வு இல்லை. குற்றஉணர்வு நீ ஒரு தவறு செய்துவிட்டாய் என்று உணர்வது. அவமானம் என்பது நானே ஒரு தவறு என்று உணருவது. பெரிய வித்யாசம் உண்டு.நிஜமான நம்மை மறைக்க வேண்டும் என்பதை அவமானம் நமக்கு உணர்த்துகிறது, ஏனென்றால் நிஜமான நம்மை யாரும் பார்க்க விரும்புவதில்லை. நிஜமான நம்மை தான் தேவன் பார்க்கிறார் என்ற எண்ணம் நம்மை பயமுறுத்துகிறது. நீண்ட காலத்திற்கு முன்பு என்னிடம் சொல்லப்பட்ட மற்றும் செய்யப்பட்ட விஷயங்களால் நான் அனுபவிப்பது இதுதான். அந்த வார்த்தைகளும் செயல்களும் என்னுள் பதிந்து என் சுய உருவத்தில் தவறான லென்ஸாக மாறியது.இங்கே சில உண்மை: தேவன் நம் ஒவ்வொருவரின் நிஜத்தையும் பார்க்கிறார், அவர் நம்மீது அன்பு கொண்டு தனது கைகளைத் திறக்கிறார். அவர் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகிய நம்மைப் பார்க்கும்போது, நம்முடைய அவமானத்தின் இடத்தைப் பிடிக்க இயேசு இறந்ததால் அவர் களங்கமற்ற மகள்களையும் மகன்களையும் பார்க்கிறார். நான், நாம், அவமானத்தை விட்டுவிட்டு, அவர் நம்மீது வைக்கும் மதிப்பை ஏற்றுக்கொள்ள முடியும்.எல்லாம் நன்றாக இருக்கும், ஆனால் இதுதான் நான் கற்றுக்கொண்டது. அவமானத்தை விட்டுவிடுவது "ஒரு முறை செய்து முடித்த" ஒரு வகையான ஒப்பந்தம் அல்ல. என்னைப் பொறுத்தவரை, நான் நம்பிய ஒவ்வொரு குறிப்பிட்ட பொய்யையும் நான் உணர்ந்து நிராகரிப்பதால், அவமானம் அடுக்குகள் அகற்றப்படுவது போல் அகற்றப்படும். பின்னர், ஒவ்வொரு பொய்யையும் மாற்றுவதற்காக தேவனின் வார்த்தையிலிருந்து குறிப்பிட்ட உண்மைகளைக் கண்டுபிடித்து அவிழ்த்துவிடும்போது, அவமானத்தின் ஒவ்வொரு பகுதியையும் என்னிடமிருந்து வெகு தொலைவிற்கு ஒரு-வழி விமானத்தில் அனுப்பிவிடுகிறேன். அவமானத்தை விட்டுவிடுவது விரைவானதோ, எளிதானதோ, அல்லது எளிமையானதோ அல்ல, ஆனால் அது லேசானது. உங்களைப் பற்றி நீங்கள் நம்பிய குப்பைகளை தேவன் வாங்குவதில்லை, ஆனால் நீங்கள் அவரை அனுமதித்தால் அவர் அதை உங்களுக்காக எடுத்துச் செல்வார்.  அமண்டா, அவமானத்தை வெளியே எடுத்தார்செயல்:நீங்கள் நம்பிய பொய்களை அடையாளம் கண்டு வாழத் தொடங்கி தேவனிடம் உண்மைகளை அறிவிக்கவும்.www.life.church/declarations