பளு அதிகம் இல்லாத பயணம் செய்

தியானத்திற்கு

குறைபாடுகளை மன்னித்து விடுவது


இந்த கதையில் நீங்களும் ஒரு கதாபாத்திரமாக இருக்கலாம். நாங்கள் எங்கள் காரை நிரப்பிக்கொண்டிருந்தோம், கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக சாலைமார்க்கமாக எங்கள் உறவினர்களை காண செல்ல தயாராகிக்கொண்டிருந்தோம். நான் அந்த அழுத்தத்தில் என் பிள்ளைகளிடமும் கணவரிடமும் கோபப்பட்டுக்கொண்டிருந்தேன். முடிவில் நான் உடைந்துபோகிறேன். என் கணவர் என் பக்கம் சாய்ந்து, "என்ன நடக்கிறது?' என்று கேட்க நான் பிரயாண மும்முரத்தில் என் இயல்புநிலையை தவறவிட்டேன் என்று உணர்ந்தேன்.


பயணம் செல்ல செல்ல, நானே என்னிடம் ஒரு ஏற்கனவே கேட்ட கேள்வியையே கேட்டுக்கொண்டேன், வருடத்தின் மிக சந்தோஷமான வேளையில் நான் ஏன் அழுத்தத்தில் தவிக்கிறேன்? பதில் உங்களுக்கே தெரியும். பாலகன் இயேசு, குடும்பம், நண்பர்கள், உணவுப்பதார்த்தங்கள், அன்பளிப்புகள், விளையாட்டு, இனிப்புகள் - இவைகளால் தான் இந்த நாட்கள் நிறைந்திருக்க வேண்டும். நம்முடைய அனுதின காரியங்களிலிருந்து மாற்றம் இருக்கவேண்டும். ஆனால் நான் ஏன் அழுத்தப்படுகிறேன்?


நான் யோசிக்க கூடாமல், தேவனிடம் என்ன நடக்கிறது, என்ன தவறு செய்கிறேன் என்று கேட்க முடிவெடுத்தேன். ஒரு வருடத்திற்கு முன்னால் என் குடும்ப அங்கத்தினர் ஒருவர் என்னை குற்றப்படுத்தி பேசின ஒரு வார்த்தை எனக்கு நினைவு வந்தது.


இதில் இருந்துதான் எல்லா அழுத்தமும் உருவாகியதா? இந்த கார் பயணம் நான் எவ்வளவு ஒரு குற்றப்படுத்திய வார்த்தைக்கு இடம் கொடுத்து என்னுடைய குறைபாடுகளுக்கு சரி என்று சான்றிதழ் கொடுத்திருக்கிறேன் என்று உணர்ந்தேன். இந்த பளுவை இம்மட்டும் தூக்கி சுமந்திருக்கிறேன் என்று உணர்ந்து கோபமடைந்தேன். என்னுடைய குடும்பத்தியும் அது பாதித்துவிட்டது என்று உணர்ந்து கோபமடைந்தேன். ஆனால் கோபமடைவதனால் என் அழுத்தம் குறைந்தபாடாக இல்லை.


முடிவில், என்னை காயப்படுத்திய நபருக்காக ஜெபிக்க துவங்கினேன். அது அவர்களை மாற்றாது, ஆனால் நிச்சயம் என்னை மாற்றும்., எண்ணில் நானே நினைத்துக்கொண்டேன். நான் முடிவெடுத்தேன் அந்த நபரும் ஒருவேளை என்னைப்போல காயப்பட்டுதான் இவ்வாறு பேசியிருப்பார், ஆகவே அவரை தேற்றவேண்டுமென்று. தேவனின் பாதை செல்வதர்க்கு சிறந்த பாதை.


அவரை மன்னிக்கவும் முடிவெடுத்தேன். இயேசு மன்னிக்க சொல்லியும் கொடுத்தார் மன்னித்தும் காட்டினார். அவர் என்னை மன்னித்தார். எலெழுவது முறை, மன்னிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்தார். மன்னிப்பு தேவைப்படும்போதெல்லாம் மன்னிக்க வேண்டூம் என்று சொன்னார்.


இந்த வருடம் நான் கோபத்தையும் காயத்தையும் சுமக்காததினால், எங்கள் வாகனம் லகுவாக இருக்கிறது. அதற்கு [பதிலாக, நான் அதை அவர் சமாதானத்தாலும், சமூகத்தாலும், வெளிச்சத்தாலும் நிரப்ப போகிறேன்.


உங்கள் ஜீவியத்தில் அழுத்தத்தை உண்டாக்கும் உறவு எது? இயேசு அந்த அழுத்தத்தை நீக்க எப்படி இடம்கொடுப்பீர்கள்?


கிறிஸ்டி, இந்த கிறிஸ்துமஸ் லகுவாக பிரயாணம் செய்யப்போகிறேன்


Consider: யாருக்காக அதிகமாக ஜெபிக்க போகிறீர்கள்? அவரை எப்படி உங்களால் மன்னிக்க முடியும்?