கைல் ஐடல்மென் உடன் கெட்ட குமாரனின் உருமாற்றம்மாதிரி

“நேர்மை- நம்முடன் ஒரு நேர்மையான பேச்சு”
லூக்கா 15: 17 ல் ஆஹாவின் இரண்டாவது மூலப்பொருளை (நீசத்தனமான உண்மை) காண்கிறோம்: “அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்:…”
சுற்றி வேறு யாரும் இல்லை. அங்கு அவனும் பன்றிகளும் மட்டுமே. சில நேரங்களில் நாம் பேசும் கடினமான உரையாடல் நம்மை நாமே கண்ணாடியில் பார்த்து, நம்மைப் பற்றிய உண்மையை பேசுவதே, அதில் நீசத்தனமான நேர்மை வெளிப்படுகிறது. நம்மைப் பற்றிய உண்மையை நாமே சொல்ல வேண்டும் என்று ஆஹா கோருகிறது.
கெட்டக் குமாரன் தனக்குத் தகுதியானதைப் பற்றி தன்னுடன் நேர்மையாக இருந்தான். அந்த வகையான நேர்மை கடினம். நீசத்தனமான நேர்மை இல்லாமல் விழிப்புணர்வை நாம் விரும்புகிறோம்.
ஒருவேளை அது இந்த மனைவியின் குணம் போல இருக்கும், தனது விமர்சன மனப்பான்மையுடன் எழுந்தாலும், “தான் மிகவும் எதிர்மறையாக இருப்பது தவறு" என்பதை மறுக்கும் தன்மை கொண்டவராக அல்லது தனது கணவருக்கு தன்னுடைய ஊக்கமும் ஆதரவும் தேவை என்று தெரியும், ஆனாலும் புகார் கூறி விமர்சித்து இருத்தல். ”
அல்லது இந்த கணவனைப் போ, தனது பாலியல் பாவத்தை உணர்ந்தாலும், “தனது பாலியல் பிரச்சினை திருமணத்தில் ஒரு பிளவை உருவாக்கி, தனது மனைவியின் நேராய் தனது இதயக் கடினத்தை” சொல்ல மறுக்கும் தன்மை.
நீசத்தனமான நேர்மையைத் தவிர்ப்பது நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தும் தளத்தில் ஒரு தடையாக அமையும். மனந்திரும்புதல் இல்லாமல் உணர்வடைதல் இருக்கும்போது, ஆஹா நடக்காது. கெட்ட குமாரனுக்கு நினைவு வந்தபோது, அவன் தன்னை உண்மையாக நேர்மையான வழியில் கையாண்டான். விழிப்புணர்வு நேர்மைக்கு வழிவகுக்க வேண்டும். நம்பிக்கை ஒப்புதல் வாக்குமூலத்திற்கு வழிவகுக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, நம்முடைய பரலோகத் தந்தை அனைத்தையும் பார்க்கிறார், அறிந்திருக்கிறார், எனவே இது பிடிபடுவதற்கான கேள்வி அல்ல. நான் பேசும் இந்த நேர்மை ஒரு எளிய ஒப்புதலுக்கு மேலானது; இது ஒரு வகையான மனமுறிவு. ஆமாம், உங்களை கையும்-களவுமாக பிடித்த நபரிடம் நீங்கள் வருந்துகிறீர்கள் என்று சொல்லுவது மட்டுமல்லாது, அதையும் தாண்டி செல்ல வேண்டும். வேறு யாரும் இல்லாத தருவாயில் உங்களைப் பற்றிய உண்மையை நேர்மையாக நீங்களே சொல்ல வேண்டும். நீங்கள் வருந்துகிறீர்கள் என்பதை முதலில் நீங்கள் அறிந்து உணர்வடைய வேண்டும்.
இதுவே வருத்தத்திற்கும் மனந்திரும்புதலுக்கும் உள்ள வித்தியாசம்.
* உங்களின் நீசத்தனமான நேர்மையின் மூலம் ஒரு விழிப்புணர்வைப் கண்டடைந்தீர்களா? உங்களது உடைந்த தன்மையையும், அது எந்த அளவுக்கு தேவன் விரும்பாதது என்பதை அறிந்தும் நேர்மையாக இருக்கிறீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கைல் ஐடல்மான் என்பவருடைய "ஆஹா" என்னும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட, இத்திட்டதுடன் சேருங்கள், இதில் அவர் தேவனிடம் நம்மை நெருங்கி வரக்கூடிய 3 கூறுகளை கண்டுபிடிப்பதால் இதனை அறியும் நாமும், நம் வாழ்க்கையை நன்மைக்காக மாற்ற முடியும். எல்லாவற்றையும் மாற்றும் தேவனின் தருணத்திற்கு நீங்கள் தயாரா?
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக டேவிட் சி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய https://davidccook.org/books/ க்கு செல்லவும்.