திட்ட விவரம்

பிடிவாதம் - லிசா பெவரேவுடன்மாதிரி

Adamant With Lisa Bevere

6 ல் 5 நாள்


அநேக நேரங்களில் சபையானது அவிசுவாசிகளை அவர்களின் பாவ கிரியைகளின் நிமித்தம் ஆக்கினைக்குள்ளாக தீர்த்து பேசுவதில் வேகமாக இருக்கிறது. ஆனாலும் தேவனை அறியாதவர்கள் தேவனை அறியாதவர்கள் போல நடந்துகொள்வதில் ஆச்சர்யம் இல்லை. முதலாவது நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டிய ஒரு காரியம் - நாம் மறுரூபமாக்கப்பட்ட பரிசுத்த வாழ்வு வாழ்கிறோமா என்பது தான். நாம் தேவனோடு நடக்க நடக்க, பிறரிடமும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்தும் ஞானத்தை தேவனிடத்தில் கேட்கலாம். நமது மாற்றங்களே பிறருக்கு தேவனை வெளிப்படுத்தி, அவர்கள் வாழ்விலும் மாற்றங்களை வாஞ்சிக்க தூண்டும்.


ஒரு தேவபிள்ளையாக நாம் வைரத்தை போல கூர்மையாகவும், பூவை போல மென்மையாகவும் இருக்க கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறந்திருக்கிறோம்.


ரோமர் முதல் அதிகாரத்தில் பவுல் சொல்வது போல தேவனை அறிந்தும் தேவனை மகிமைப்படுத்தாமல் சிந்தனைகளாலே வீணரான மாய்மால மனிதர்கள் நிறைந்த உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் படைக்கப்பட்ட நோக்கத்தை நாம் ஆராய்வது இல்லை.


உங்களுக்கு நீங்களே கேட்டுப்பாருங்கள்! இந்த பொல்லாத உலகத்தை குறித்த நமது புலம்பல்கள் நம் வாழ்வை மாற்றியிருக்கிறதா? நாம் சார்ந்திருக்கிற ஒளியை காட்டிலும், இருளைக் குறித்து நாம் அறிந்திருப்பதே பேசுவதே அதிகம் என்பதே சோகமான உண்மை. நாம் ஆக்கினைக்குள்ளாக தீர்த்து பேசுவதால் நாம் விரும்புகிற பரிசுத்தமும் மறுரூபமும் நமது சமுதாயத்தில் வரப்போவது யில்லை. நம்முடைய சொந்த பிரச்சனைகளை நாம் முதலில் சரி செய்து, பின்னர் தேவனுடைய அன்பையும் இரக்கத்தையும் தேவையுள்ளோர்க்கு வெளிப்படுத்துவதே மாற்றத்தை வகுக்கும்.


தேவனுடைய இரக்கம் என்பது சத்தியத்திற்கு நம்மை அழைக்கும் அழைப்பிதழ், பாவத்தை ஊக்குவிவைப்பது அல்ல. எனவே தான் நமக்கு ஞானம் அவசியப்படுகிறது. பிறர் மனம் புண்படும் என்பதால் பாவத்தை பாவமில்லை என்று கூறிவிட்டு அதை தேவ இரக்கம் என்று எண்ணக்கூடாது. பாவத்தை பாவமென்று ஆக்கினைக்கு தீர்த்து பேசுவதை தவிர்த்து, அதிலிருந்து விடுபட நம்பிக்கையூட்டும் வகையில் சொல்ல வேண்டும்.


நமது சமுதாயத்தின் பரிசுத்தம் என்பது, நம்மை நாமே முழுமையாக தேவனுக்கு ஒப்புக்கொடுப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. நம்மிடம் இருந்து ஒரு மாற்றம் வெளிப்பட்டு அதன் மூலம் தாக்கத்தை பெறுவதற்கு ஒரு சந்ததியே ஆவலாய் காத்துக்கொண்டிருக்கிறது.


என் ஜனங்கள் தங்களை தாழ்த்தி என்னிடத்தில் முறையிட்டால் நான் சகலத்தையும் சரி செய்து, தேசத்திற்கு க்ஷேமத்தை கொடுப்பேன் என்று சொல்கிறார். அதன் அர்த்தம் விளங்குகிறதா?

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Adamant With Lisa Bevere

உண்மை என்றால் என்ன? கலாச்சாரமானது உண்மை என்பது ஒரு நதி என்றும், காலப்போக்கில் அது எல்லாவற்றையும் தாண்டி பாய்கிறது என்றும் நமக்கு ஒரு பொய்யை போதித்து வருகிறது. ஆனால் உண்மை என்பது அது நதி அல்ல-அது பாறை. பொங்கி எழும் உங்கள்...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஜான் மற்றும் லிசா பெவெரே அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, http://iamadamant.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்