திட்ட விவரம்

பிடிவாதம் - லிசா பெவரேவுடன்மாதிரி

Adamant With Lisa Bevere

6 ல் 2 நாள்


இருளினால் தொடப்படாமல் யாருமே வளர முடியாது. நாம் எல்லோருமே நம்மை சுற்றிலும் நம்மைக் குறித்து தீர்ப்பு செய்யும் மற்றும் முத்திரை குத்தும் குரல்களை ஓரளவாவது கேட்கிறோம். எல்லோரும் இல்லையென்றாலும், நம்மில் அநேகர் தவறான அடையாளங்களை உண்மை என்று உறுதிசெய்து நமக்கு நாமே முத்திரை குத்திக்கொள்வதும் உண்டு.


தேவன் நம்மைக் கிட்டிச்சேர்வது, நம்மைக் கண்டிப்பதற்காக அல்ல, மாறாக நம்மை நெருக்கமாக அவரிடம் கூட்டிச்சேர்த்து, நாம் உண்மையில் யார் என்பதைத் தெரியப்ப்படுத்தும் அவருடைய குரலை நாம் கேட்பதற்காகவே.


உண்மை இதுதான்: நாம் நம்முடைய கடந்த கால இருள் அல்ல. மேலும் நாம் நம்முடைய தவறுகள், பாலினம், அல்லது எந்தவொரு வெளியரங்கமான காரியத்தினால் வரையறுக்கப் படுவதில்லை. மாறாக, நாம் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்ட ஆவிகளாயிருக்கிறோம், நமக்கு சுவாசத்தைக் கொடுத்தவரோடு நெருங்கியிருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறோம்.


நம்முடைய அடையாளத்தைத் தவறான காரியங்களோடு இணைக்கும் போது நாம் அவற்றை இழந்து போகிறோம். ஆகவேதான் நம்மோடுகூட நாம் எடுத்துசெல்லுகின்ற மட்டுப்படுத்தும் முத்திரைகளை தேவன் எடுத்துப் போடுகிறார். அவருடைய ஆவி நமக்குள் ஆழமாகக் கிரியை செய்து, நம்மிலுள்ள பழையவைகளை நீக்கிப்போட்டு, இதுவரை நம்மில் காணப்படாதவைகளை வெளியரங்கமாக்குகிறது.


பயம் மற்றும் பாதுகாப்பின்மை தேவன் உங்கள் வாழ்க்கையில் செயல்படுவதை நீங்கள் நிராகரிக்கும்படி செய்கிறது. ஆனால் இன்று, பாழாய்போயிற்றென்று நீங்கள் நினைத்த இடங்களை நோக்கி தேவன் பேசிக்கொண்டிருக்கிறார், அவைகளை மீண்டும் ஒரு தோட்டமாக மாற்றும்படியாக அவர் முன்வருகிறார்.


ஆனால் தேவன் நம்முடைய வாழ்வின் இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரித்தெடுக்க நாம் விருப்பமுள்ளவர்களாய் இருக்கவேண்டும். உங்கள் மீது பேசப்பட்டப் பொய்கள் நிலைத்திருக்க தேவன் அனுமதிக்கமாட்டார். நீங்கள் உங்கள் மீது பேசிய காரியங்கள் இறுதி சொல்லாக இருக்கும்படியும் அவர் விடமாட்டார். பதிலாக, உங்களிலுள்ள புதிதானதொன்றை தனிப்பட்டவிதமாய் வெளிப்படுத்தும்படியாக அவர் உங்களிடம் நெருங்கி வருகிறார். அது உங்கள் வேதனையின் ஒவ்வொரு பகுதிக்கும் பூரண ஆரோக்கியத்தைக் கொண்டு வருகிறதாயிருக்கிறது, மேலும் தேவன் நீங்கள் யாரென்று சொல்லுகிறாரோ அந்த உண்மையில் நீங்கள் வாழும்படியான சுதந்திரத்தை அளிக்கிறதாயிருக்கிறது.


தேவன் மிகவும் பிடிவாதமான நெருக்கமுள்ளவர். அவர் உங்கள் வேதனையை மாற்றும்படி அதனூடாகக் கடந்துசெல்கிறார், ஆனால் அதை செய்யும்படியாக நீங்கள் அவரை அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும்?


நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Adamant With Lisa Bevere

உண்மை என்றால் என்ன? கலாச்சாரமானது உண்மை என்பது ஒரு நதி என்றும், காலப்போக்கில் அது எல்லாவற்றையும் தாண்டி பாய்கிறது என்றும் நமக்கு ஒரு பொய்யை போதித்து வருகிறது. ஆனால் உண்மை என்பது அது நதி அல்ல-அது பாறை. பொங்கி எழும் உங்கள்...

More

இத்திட்டத்தை வழங்கியமைக்காக ஜான் மற்றும் லிசா பெவெரே அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தகவல் அறிய, http://iamadamant.com க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்