யோவேல் 3

3
பிறநாடுகள் நியாயம் தீர்க்கப்படுதல்
1கர்த்தர் கூறுவதாவது:#3:1 கர்த்தர் கூறுவதாவது – விளக்கத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளது “இதோ, அந்நாட்களில், அவை நிகழும் காலத்தில்,
யூதாவையும் எருசலேமையும் நான் முன்பிருந்த நிலைக்குத் திருப்புவேன்.
2அப்பொழுது, நான் எதிரிகளான அனைத்து இனங்களையும் ஒன்றுசேர்த்து,
அவர்களை கர்த்தரின் நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்குக்கு#3:2 கர்த்தரின் நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்குக்கு யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு இதை வசனம் 12 லும் காணலாம். இறங்கிவரச் செய்வேன்.
அங்கே என் உரிமைச் சொத்தான இஸ்ரயேல் மக்களுக்கு இழைக்கப்பட்டவற்றுக்காக,
அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்குவேன்;
ஏனெனில் அவர்கள்#3:2 அவர்கள் எதிரிகள் என் மக்களைப் பிற இனங்கள் மத்தியில் சிதறடித்து,
என் நாட்டை தங்களிடையே பங்கிட்டுக் கொண்டார்கள்.
3சீட்டுக்குலுக்கி எனது மக்களை அடிமைகளாகக் கொடுத்தார்கள்.
தாங்கள் விலைமாதர்களிடம் செல்வதற்காக சிறுவர்களை விற்றுப் பணம் பெற்றார்கள்.
சிறுமிகளை விற்றுத் திராட்சைரசம் வாங்கிக் குடித்தார்கள்.
4“தீரு, சீதோன் பட்டணங்களே, பெலிஸ்தியரின் அனைத்து பிரதேசங்களே, எனக்கு விரோதமாய் உங்களுக்கு என்ன இருக்கின்றது? நான் செய்த எதற்காவது நீங்கள் என்னைப் பழிவாங்குகின்றீர்களா? அவ்வாறு நீங்கள் என்னைப் பழிவாங்கினால், நீங்கள் செய்தவற்றை நான் உங்கள் சொந்தத் தலைமீது தாமதமின்றி விரைவாகத் திருப்புவேன். 5ஏனெனில், என் வெள்ளியையும் என் தங்கத்தையும் எடுத்துக்கொண்டு, என் சிறந்த திரவியங்களையும் அள்ளிக்கொண்டு, அவற்றை உங்கள் கோயில்களுக்குக் கொண்டு சென்றீர்கள். 6யூதா மற்றும் எருசலேம் மக்களை அவர்களது தாய்நாட்டிலிருந்து தொலைவுக்கு அனுப்புவதற்காக நீங்கள் அவர்களை கிரேக்கருக்கு விற்றுவிட்டீர்கள்.
7“இதோ, நீங்கள் விற்ற இடங்களிலிருந்து அவர்களை மீண்டும் எழுப்பப்#3:7 எழுப்ப சிறையிருப்பிலிருந்து மீட்டுக் கொண்டுவரப் போகின்றேன் என்று பொருள் போகின்றேன். நீங்கள் செய்ததை உங்கள் தலைகள்மீது திருப்புவேன். 8உங்கள் மகன்மாரையும் மகள்மாரையும் யூதா மக்களுக்கு விற்று விடுவேன். யூதா மக்கள் அவர்களைத் தூரநாட்டிலுள்ள சபேயருக்கு#3:8 சபேயருக்கு – அரேபிய இனத்தைச் சேர்ந்த வியாபாரிகள் என கருதப்படுகிறது. விற்பார்கள்.” இதை கர்த்தரே சொன்னார்.
9இனங்களிடையே இதை அறிவியுங்கள்;
யுத்தத்துக்குத் தயாராகுங்கள்;
இராணுவ வீரரை எழுப்புங்கள்;
போர்வீரர்கள் அனைவரும் நெருங்கிப்போய் தாக்கட்டும்.
10உங்கள் மண்வெட்டிகளை வாள்கள் ஆகவும்,
உங்கள் அரிவாள்களை ஈட்டிகள் ஆகவும் அடியுங்கள்.
பலவீனன், “நான் பலமுள்ளவன்!”
என்று சொல்லட்டும்.
11சுற்றுப்புறம் எங்குமுள்ள இனங்களே, நீங்கள் எல்லோரும் விரைந்து வந்து,
அங்கே ஒன்றுகூடுங்கள்.
கர்த்தரே உமது படைவீரர்களைக் கொண்டுவந்திடுவீராக!
12“இனங்கள் எழுந்திடட்டும்;
கர்த்தரின் நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கை நோக்கி முன்னேறிப் போகட்டும்.
அங்கே நான், சுற்றுப்புறம் எங்குமுள்ள இனங்கள் அனைத்தையும்
நியாயம் தீர்ப்பதற்காக அமருவேன்.
13விளைச்சல் முதிர்ந்துள்ளது,
அரிவாளை நீட்டி அறுங்கள்.
திராட்சை ஆலைகள் நிரம்பியுள்ளன,
வந்து திராட்சைப்பழங்களை மிதியுங்கள்.
இரசத் தொட்டிகளும் நிறைந்து பொங்கி வழிகின்றன,
அவர்களின் கொடுமை இத்தனை பெரியது!”
14தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில்
மக்கள் கூட்டம்கூட்டமாய் இருக்கின்றனர்.
தீர்ப்பு வழங்கும் பள்ளத்தாக்கில்
கர்த்தரின் நியாயத்தீர்ப்பின் நாள் சமீபித்துள்ளது.
15சூரியனும் சந்திரனும் இருளடையும்,
நட்சத்திரங்கள் இனி வெளிச்சம் கொடுக்காதிருக்கும்.
16கர்த்தர் சீயோன் மலையிலிருந்து கர்ச்சித்து,
எருசலேமிலிருந்து முழங்குவார்;
வானமும் பூமியும் அதிரும்.
ஆனால் கர்த்தர் தம் மக்களுக்குப் புகலிடமும்
இஸ்ரயேல் மக்களுக்கு அரணான கோட்டையுமாய் இருப்பார்.
இறைவனின் மக்களுக்கு ஆசீர்வாதம்
17“அப்போது என் பரிசுத்த மலையாகிய சீயோனில் வாழ்கின்ற
உங்கள் இறைவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
எருசலேம் பரிசுத்தமான ஒரு நகரமாயிருக்கும்;
இனி ஒருபோதும் பிறநாட்டார் அதன்மீது படையெடுத்து
அதைக் கடந்து செல்லப் போவதில்லை.
18“அந்நாட்களில் மலைகளில் புதிய திராட்சைரசம் பொழியும்,
குன்றுகள் பாலாய் வழிந்தோடும்;
யூதாவின் நீரோடைகளிலெல்லாம் தண்ணீர் நிரம்பியோடும்.
கர்த்தரின் ஆலயத்திலிருந்து நீரூற்று ஒன்று கிளம்பி,
வரண்ட சித்தீம் பள்ளத்தாக்குக்கு தண்ணீர் பாய்ச்சும்.
19யூதா நாட்டில் குற்றமற்றவர்களைக் கொன்று அவர்களின் இரத்தத்தைச் சிந்தி,
அவர்களுக்குச் செய்த கொடுமையின் பொருட்டு
எகிப்து பாழாகும்,
ஏதோம் பாழடைந்து பாலைநிலமாகும்.
20யூதா என்றென்றுமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும்
குடியிருக்கும் இடமாக இருக்கும்.
21அவர்களுடைய இரத்தப் பழியை நான் தண்டிக்காமல் விடுவேனோ?
விடமாட்டேன், நான் தண்டிப்பேன்.”
கர்த்தர் சீயோனில் குடியிருக்கிறார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

யோவேல் 3: TRV

சிறப்புக்கூறு

நகல்

ஒப்பீடு

பகிர்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்