சூரியனும் சந்திரனும் இருளடையும்,
நட்சத்திரங்கள் இனி வெளிச்சம் கொடுக்காதிருக்கும்.
கர்த்தர் சீயோன் மலையிலிருந்து கர்ச்சித்து,
எருசலேமிலிருந்து முழங்குவார்;
வானமும் பூமியும் அதிரும்.
ஆனால் கர்த்தர் தம் மக்களுக்குப் புகலிடமும்
இஸ்ரயேல் மக்களுக்கு அரணான கோட்டையுமாய் இருப்பார்.