யோசுவாவின் புத்தகம் 1:8-11

யோசுவாவின் புத்தகம் 1:8-11 TAERV

சட்ட புத்தகத்தில் எழுதியிருப்பவற்றை எப்போதும் நினைவுகூர்ந்து, இரவும் பகலும் அதைப்படி. அப்போது அப்புத்தகத்தில் எழுதியிருப்பவைகளுக்கு நீ கீழ்ப்படிய முடியும். இதைச் செய்தால், நீ செய்கின்ற எல்லாக் காரியங்களிலும் ஞானமுள்ளவனாய் வெற்றி காண்பாய். நீ உறுதியும், தைரியமும் உடையவனாய் இருக்க வேண்டுமெனக் கட்டளையிட்டதை நினைவில் வைத்துக்கொள். எனவே பயப்படாதே, நீ போகுமிடங்களில் எல்லாம் தேவனாகிய கர்த்தர் உன்னோடிருப்பார்” என்றார். யோசுவா, ஜனங்களின் தலைவர்களுக்கு ஆணைகளைக் கொடுத்தான். அவன், “முகாம்களுக்குச் சென்று ஜனங்களிடம் தயாராகும்படி கூறுங்கள், மேலும் ஜனங்களிடம் ‘கொஞ்சம் உணவைத் தயாரியுங்கள். இன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் நாம் யோர்தான் நதியைக் கடக்கப் போகிறோம். தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற தேசத்திற்குப் போய் அதைச் சுதந்தரிப்போம்’ எனச் சொல்லுங்கள்” என்றும் சொன்னான்.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த யோசுவாவின் புத்தகம் 1:8-11

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1     -சகோதரன் சித்தார்த்தன் யோசுவாவின் புத்தகம் 1:8-11 பரிசுத்த பைபிள்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

3 நாட்களில்

AIRBUS A330 - விமானத்தில் நாம் யாவருமே- ”இப்பொழுதும், எப்பொழுதும் - பயணித்துக்கொண்டிருக்கிறோம்” என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? நாம் வாழும் புவியைத்தான் சொல்கின்றேன். இப்பொழுது பூமி தன்னைதான் சுற்றும் வேகம் ஒருமணி நேரத்திற்கு-1600கி.மீ. பூமியின் எடை 60 ட்ரில்லியன் டன். இந்த பருப்பொருள் -தினமும் 520 இலட்சம் கி.மீ. பயணிக்கின்றது. இதில் விசேஷம் என்னவென்றால், இதன்வேகம் சீராக – எப்பொழுதும் இருக்கின்றது என்பது தான். ஏனென்றால் இது பயணிக்கும் வேகம் குறைந்தாலும் பிரச்சினை; கூடினாலும் நமக்கு பிரச்சினை என்கின்றனர் விஞ்ஞானிகள். இந்த கனமான பருப்பொருள் பயணிக்க எரிசக்தியை-தொடர்ந்து தருவது எது? ஆதியாகமம் 1:1 ஆதியிலே தேவன் .... பூமியை சிருஷ்டித்தார் என்ற - வாக்குமாறாத - தேவனுடைய - வார்த்தை தான். பரிசுத்த வேதாகமத்தில்- தேவன் தமது ” வார்த்தை யினால்” என்ன அற்புதங்களை - நிறைவேற்றிக்கொண்டே இருக்கின்றார்- என்பதை நாம் காணும் போது - நம்முடைய விசுவாசம் நிச்சயம் பெலப்படும். (வி)சுவாசிக்க வாங்க! ________________________________________