YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 90 OF 100

இவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்

மனோரீதியான சிந்தனைப் பயிற்சி, யோகா, நியூ-ஏஜ் என்பவைகளைக் குறித்து நாம் இக்காலத்தில் அதிகமாக கேள்விப்படுவதால், அநேக விசுவாசிகள் “தியானம்” என்ற சொல்லையே தவிர்த்து விடுகின்றனர். “தியானம்” என்றாலே, அசுத்த ஆவிகளுடன் தொடர்புடையதும், அந்நிய தெய்வங்களை வணங்குவதையும் குறித்து செயல் என்று விசுவாசிகள் பயப்படுகின்றனர். ஆனால் வேதம், நம்மை எந்த அளவிற்கு வேதத்தின் அடிப்படையில் “நாம் தியானிக்கவேண்டும்” என்று வலியுறுத்துவதை, விசுவாசிகள் உணருகிறதில்லை.

வேதத்தின் அடிப்படையில் உள்ள தியானத்தை, நாம் எத்தனையோ விதங்களில் விவரிக்கலாம். அதிலே மிகவும் பிரயோஜனமானதாக, வேதத்தில் சொல்லப்பட்ட ஒரு விதத்தைநான் உங்களுக்கு சொல்லுகிறேன். மேலே கூறியுள்ள வசனங்களும், அதைப்போலவே இன்னும் அநேக வசனங்களும், தியானத்தின் முக்கியத்துவத்தை நமக்கு வேதத்தி லிருந்து கூறுகிறது.

முதலாவதாக, வேகமாக நாம் வேதத்தை வாசிப்பதற்கு பதிலாக, “நிறுத்தி நிதானமாக வாசித்து, அதில் கூறியிருக்கும் கருத்தை சிந்திப்பதாகும்.” வேதம், தியானத்தை ஒரு ஆழ்ந்த சிந்தனையாக கூறுகிறது. வேதத்தை தியானிப்பது, முக்கியமாக அர்ப்பணிக்கப்பட்ட விசுவாசிகளுக்கு தான் மிகவும் அவசியம். ஏதோ வேதத்தை டக்கென்று திறந்து, கண்களில் பட்ட வசனத்தை எடுத்து அல்லது வாக்குத்தத்த வசனங்களை படிப்பது தியானமாக கூறப்படவில்லை. இதை நான் எதிர்க்கவில்லை. ஆனால் தியானம்; ஆழ்ந்த, கருத்தூன்றிய கவனத்தை கொண்டதாகும்.

இரண்டாவதாக, வேதத்தின் வசனங்கள் தியானத்தை, “ஒரு தொடர்ந்து செய்யும், பழக்கமாக” காட்டுகிறது. மேலே உள்ள வசனம், “அது நாள் முழுதும் என் தியானம்,” என்று சொல்லுகிறது. யோசுவா 1:8ல் இரவும் பகலும் நியாயப்பிரமாணத்தை தியானிக்கவேண்டும் என்று யோசுவாவுக்கு கர்த்தர் சொன்னார். வேதத்தில் தியானத்தைக் குறித்துப் பேசியவர்கள், அதை மிகவும் முக்கியமாக கருதி, தங்கள் மனதை முழுவதுமாக அதிலே செயல்படுத்தினார்கள். சங்கீதம் 1:2ல் “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்,” என்று பார்க்கிறோம். 

மூன்றாவதாக, தியானத்திற்கு “பலன் உண்டு.” ஏதோ ஒரு மத சடங்கு என்று நாம் கருதிவிடக்கூடாது. எங்கெல்லாம் தியானிப்பதைக் குறித்து எழுதப்பட்டிருக்கிறதோ, அங்கெல்லாம் அதன் விளைவாக, பலனாக என்ன நடக்கும் என்றும் கூறுகிறது. மறுபடியும் யோசுவா 1:8ஐ நாம் பார்க்கும் போது, “...அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய்.”

முதலாம் சங்கீதத்திலும், கர்த்தருக்கு பயப்படுகிற மனுஷனைக் குறித்து விவரிக்கும்போது, கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும், பகலும் தியானமாயிருக்கிற மனுஷனைக் குறித்து சொல்லும் போது, “...அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்” (வ.3).

இதையெல்லாம் நான் சுட்டிக்காட்டினாலும், நாம் தியானத்தைக் குறித்து இன்று அதிகமாக பேசவோ, போதிப்பதோ இல்லை. அது கடினமான வேலை. அதற்கு நேரம் தேவை. தியானத்திற்கு, சிதறடிக்கப்படாத கவனம் தேவை.

உங்கள் மனதின் போராட்டத்தில் நீங்கள் வெற்றி பெற விரும்பினால், “தியானம்” நீங்கள் உபயோகிக்க ஒரு வல்லமையான கருவியாகும். நீங்கள் தேவ வார்த்தையின் பகுதிகளில் கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் அவற்றை வாசித்து, திரும்ப திரும்ப சத்தமாக சொல்லி, உங்கள் முன்பாக வைக்கவேண்டும். சிலர் வேத வசனத்தை திரும்ப, திரும்ப சொல்லி, அதன் அர்த்தம் அவர்கள் மனதை நிறைத்து, அவர்கள் சிந்தனையில் ஒரு பகுதியாகும் வரை செயல்படுவார்கள். இதன் கருத்து என்னவென்றால், தேவனுடைய வார்த்தையை உங்கள் மனதிலோ, சிந்தையிலே நீங்கள் பதிக்காதவரை நடைமுறையில் அதை அப்பியாசப்படுத்த உங்களால் முடியாது.

தியானம், ஒரு “கட்டளையாகும்.” ஏனெனில், அது உங்களுக்கு ஜீவன் தருகிறதாயிருக்கிறது. உங்கள் நல்ல நடத்தையானது மற்றவர்களுக்கு உங்கள் மூலம் வாழ்வளிக்க உதவும்.

தியானத்தைக் குறித்து நான் சொல்லிக்கொண்டே போக முடியும். ஏனென்றால், கர்த்தர் எனக்கு காட்டும் வசனங்களுக்கு முடிவே இராது. தேவனுடைய வார்த்தையானது விலையேறப்பெற்ற பொக்கிஷங்களடங்கிய பெட்டகமாயிருக்கிறது. நமக்கு ஜீவனையும் வல்லமையையும் தந்து, நமக்கு தேவன் வெளிப்படுத்த விரும்பும் இதன் சத்தியங்களை ஆழ்ந்து சிந்தித்து, படித்து, அதைக் குறித்து யோசித்து மனதிலே செயல்பட முடிவெடுத்து, தேவ வார்த்தையை முணுமுணுத்து, தெளிவாக வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கிறது. நாம் தேவனுடைய வார்த்தையை கவனத்தோடு தியானிக்கும் போது, தம்மை அவர் நமக்கு வெளிப்படுத்தக் கூடியவராயிருக்கிறார். ஒரு நாள் முழுவதும், நீங்கள் உங்கள் அன்றாட வேலைகளை செய்துகொண்டிருக்கும்போதே; உங்களுக்குள் இருக்கும் கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு நினைவூட்ட, பரிசுத்த ஆவியானவரின் உதவியை கேளுங்கள். அப்பொழுது, நீங்கள் வசனங்களை தியானிப்பது உங்களுக்கு சுலபமாக இருக்கும்.

நீங்கள் இப்படி பழக்கப்படுத்திக்கொள்ளும்போது, கர்த்தருடைய வல்லமை உங்கள் வாழ்க்கையில் பிரவாகிப்பதைக் கண்டு நீங்கள் திகைத்துப் போவீர்கள். நீங்கள் எந்த அளவு கர்த்தருடைய வார்த்தையை அதிகமாக தியானிக்கிறீர்களோ, அந்த அளவு உங்கள் உபத்திரவக் காலங்களில் தேவ பெலனைப் பெற்றவர்களாக செயல்படுவீர்கள்.

இதன்மூலமாக, நாம் பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தால் நிறைந்தவர்களாக - தியானத்தின் மூலம் கர்த்தரோடு நாம் பாடல், துதி ஆராதனை செய்ய முடியும். அவரோடு நேரத்தை செலவு செய்து, அவர் சந்நிதியில் நம்மை நாமே மறந்து இருப்போமானால், நாம் வளருவோம். மற்றவர்களை உற்சாகப்படுத்துவோம், நம் மனதில் எதிரியானவன் கொண்டு வரும் போராட்டங்களையும் மேற்கொள்ளுவோம். 


பரலோக தேவனே, ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தையாகிய பொக்கிஷத்தோடு நான் என் நேரத்தை செலவு செய் எனக்கு உதவிச் செய்யும். நான் தூய்மையான, பரிசுத்தமான நினைவுகளால் என் மனதை நிறைக்கும்போது பலமான, மேலான சீஷனாக நான் மாற முடியும் என்று காட்டினதற்காக உமக்கு நன்றி. ஆமென்.

Scripture

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More