YouVersion Logo
Search Icon

மனதின் போர்களம்Sample

மனதின் போர்களம்

DAY 93 OF 100

காணும் கண்கள், கேட்கும் செவிகள்

இஸ்ரவேல் மக்களைக் குறித்து ஒரு காரியம் எனக்கு விளங்காத புதிராக இருக்கிறது. அவர்கள் மோசே செய்த அற்புதங்களைக் கண்டார்கள். அவர்கள் பத்து வாதைகளையும், மிருக ஜீவன்களும், கதிர்களும், முதல்பேரான பிள்ளைகள் எகிப்திலே மரித்ததையும், ஆனால், கோசேன் நாட்டிலே ஒரு முதல் பேறானவர்களையும் தொடாததையும், செங்கடல் இரண்டாகப் பிளந்ததையும் கண்டார்கள். பின்பு பார்வோனும், எகிப்திய சேனையும் அதில் மூழ்கி மாண்டதையும் கண்டார்கள். நாற்பது ஆண்டுகளாக அற்புதத்திற்கு மேல் அற்புதம் என்று அனுபவித்தார்கள்.

எனக்கு நானே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்கிறேன். பின் ஏன் அவர்கள் விசுவாசிக்கவில்லை? அவர்கள் அற்புதங்களையும் அடையாளங் களையும் கண்கூடாகப் பார்த்தார்கள். ஆனாலும், அவிசுவாசிகளாகவே இருந்தார்கள். யோசுவா, காலேப் ஆகிய இருவரையும் தவிர, யோர்தான் இரண்டாக பிளந்ததையும் கர்த்தரின் கிரியைகளையும் காணக்கூடாமல் அனைவரும் மாண்டனர்.

ஒருநாள் நான் இந்த வேதப்பகுதியை வாசித்து வியந்த போது, பதில் வெளிப்படையாக எனக்கு கிடைத்தது. நம்முடைய இயற்கையான கண்கள், மனித மூளையால் தேவனை அறிந்துகொள்ளமுடியாது. பரிசுத்த ஆவியானவரின் உதவியோடுதான் நாம் தேவனை அறிந்து, புரிந்து கொள்ளமுடியும். இஸ்ரவேல் மக்கள் வனாந்திரத்திலே தேவனுடைய அற்புதங்களைக் கண்ணாரக் கண்டார்கள். ஆனால் தேவனையோ, ருசித்து அனுபவிக்கவில்லை. அற்புதங்கள் கிரியை செய்வதைக் கண்டார்கள். ஆனால், தேவனை பற்றிக் கொள்ளவில்லை.

இந்தச் செய்தியைத்தான் பவுல் நமக்கு அளிக்கிறார். அவர் சொல்லுகிறார். தேவன் நமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறார். அதை விசுவாசித்துக் கீழ்படிகிறவர்களுக்கு, ஆவியானவர் மூலமாக, அவர் வெளிப்படுத்தினார் (வ.10). ஆவிக்குரிய காரியங்களுக்கு அதன் காரணங்களை பார்த்துக்கொண்டிருக்கும் வரை, நாம் அதைக்கடந்து ஒன்றையும் காண முடியாது. நமக்கு அவைகளை காணக்கூடிய கண்களோ, கேட்கக்கூடிய செவிகளோ கிடையாது.

இங்குதான் பிசாசு சிறந்த முறையில் கிரியைச் செய்கிறான். நாம் “ஆவியானவரின் கிரியையை” உணர முடியாதபடி, நம் கண்களை குருடாக்கி, நம்மை செவிடாக்கிவிடுவான். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்; ஒரு துதி ஆராதனை வேளையில், யாரோ ஒருவர், பயங்கர வலியோடு வேதனைப்படும் ஒரு பெண்ணுக்காக ஜெபித்து, அவள் உடனே சுகம் பெறுகிறாள். காணும் கண்களும், கேட்கு செவியும் உடையவர்கள் உடனே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லுவார்கள். பிசாசின் தந்திரமான பொய்யில் இன்னும் அகப்பட்டு மாட்டினவர்கள், “ஓ, இது வெறும் மனநலக் கோளாறுதான். அவளுக்கு வேறு ஒன்றுமில்லை,” என்று சொல்லுவார்கள்.

ஆவிக்குரிய குருட்டாட்டத்தில் இருப்பவரிடம் தர்க்கம்செய்து, கர்த்தருடைய கிரியைகளை காண்பதற்கு அவர்களை இசைய வைப்பது, பிரயோஜனமில்லை என்பதை அநேக ஆண்டுகளுக்கு முன்பாகவே நான் கற்றுக்கொண்டேன். பரிசுத்த ஆவியானவர் அவர்கள் ஆவிக்குரிய கண்களை திறந்தாலொழிய, மனிதர்களின் வாழ்க்கையில் கர்த்தர் கிரியை செய்வதை அவர்கள் காண்பதோ, கிரகிப்பதோ, அவர்களால் முடியாது. பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களே, ஆவியானவரின் வல்லமையோடு, ஆவிக்குரிய நிஜங்களை உண்மையாகவே கிரகித்துக் கொள்ளக்கூடியவர்களாயிருப்பார்கள். அவரில் அன்புகூர்ந்து, அவரை விசுவாசிப்பவர்களுக்கே, ஆவிக்குரிய சத்தியங்களை தேவன் வெளிப்படுத்துவார். ஆவியானவர் கிரியை நடப்பிப்பதை புரிந்து கொள்ளுபவர்களுக்கே, அந்த உறுதிப்பாட்டைத் தேவன் தருகிறார். ஆவியானவரின் வல்லமை நமக்குள் பெருகும்போது, நம்முடைய கண்களை குருடாக்கும் பிசாசின் தந்திரங்களை நாம் மேற்கொள்ளலாம்.


பிதாவே, எல்லா விதங்களிலும் நான் ஒளியூட்டப்பட எனக்கு உதவும். என் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் உம்மைக் காணவும், உம்முடைய வாக்குறுதியிலும், பிரசன்னத்திலும் நான் அகமகிழவும் எனக்கு உதவி செய்யும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.

About this Plan

மனதின் போர்களம்

ஜாய்ஸ் ம஫஬ரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்ககக஬த் தரும், உங்கள் ஫னகதப் புதுப்பிக்க உதவுகிறது ஫ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ஋ன்பகதக் கண்டறி஬ உதவுகிறது!

More