மனதின் போர்களம்Sample

அழைப்பிதழ்
நமக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது என்று வைத்துக்கொள்ளுவோம். அதைப் பிரித்து பிறகு, ஒரு அழகான, பெரிய கவரில் மிக நேர்த்தியாக நம்முடைய பெயர் எழுதப்பட்டிருப்பதை, உற்றுப் பார்க்கிறோம். உள்ளே அந்த அழைப்பிதழில் இவ்விதமாய் எழுதப்பட்டிருக்கிறது.
“துயரம், கவலை மற்றும் குழப்பம் நிறைந்த வாழ்க்கையை அனுபவிக்க, தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.”
நம்மில் யாராவது இப்படிப்பட்ட கடுமையான அழைப்பிற்கு “சரி” என்று சொல்லுவோமா? வலி, வேதனையில்லாத அப்படிப்பட்ட வாழ்க்கையைத்தானே நாம் விரும்புவோம்? ஆனாலும், பலர் இப்படிப்பட்ட வாழ்க்கையைத்தான் தெரிந்துக்கொள்ளுகின்றனர். நாம் வேண்டுமென்றே இப்படி தீர்மானிப்பதில்லை. ஆனாலும், சாத்தானின் அழைப்பிற்கு - தற்காலிகமாக சில நேரங்களில் சரண் அடைகிறோம். பிசாசானவன் விடாமுயற்சியுடன் இருப்பதால், அவனுடைய தாக்குதல் தொடருகிறதாயும், கொடூரமானதாயும் இருக்கிறது! தனக்கிருக்கும் ஒவ்வொரு ஆயுதத்தையும் பயன்படுத்தி, தினந்தோறும், நம்முடைய எதிராளியானவன் நம்முடைய மனதை தாக்குகிறான்.
நாம் ஒரு யுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறோம். அந்த யுத்தம் சீற்றமுள்ளதும், ஓயாததுமாயிருக்கிறது. தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை தரித்துக்கொண்டு, வேத வசனத்தில் நிலைத்திருந்து, நாம் பொல்லாங்கன் முன்னேறி வருவதை தடுத்து நிறுத்தமுடியும்; ஆனாலும், இந்த யுத்தத்தை, முழுவதுமாக நம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியாது. நாம் உயிரோடிருக்கும் வரை, நம்முடைய மனது, சாத்தானின் போர்க்களமாகவே இருக்கிறது. நம்முடைய பிரச்சனைகளுக்கு பெரும்பாலும், நமது எண்ணங்களே காரணமாயிருப்பதால், அதன் விளைவாகவே நாம் பிரச்சனைகளை அனுபவிக்கிறோம். நம்மெல்லோருக்கும் தவறான எண்ணங்களைக் கொடுத்து, இதன் மூலமே சாத்தான் ஜெயிக்கிறான். நம்முடைய தலைமுறைக்காக செய்யப்பட்ட ஒரு புதிய தந்திரமல்ல இது; ஏதேன் தோட்டத்திலேயே தன்னுடைய ஏமாற்று வேலையை ஆரம்பித்தவன் அவன். சர்ப்பமானது ஸ்திரீயை நோக்கி “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்க வேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ” என்றது (ஆதி 3:1). அதுவே மனிதனுடைய மனதிற்கு வந்த முதல் தாக்குதலாய் இருக்கிறது. ஏவாள், சோதனைக்காரனை கடிந்துக் கொண்டிருக்க முடியும்; மாறாக, ஒரு குறிப்பிட்ட விருட்சத்தை தவிர்த்து, மற்ற விருட்சத்தின் கனிகளை எல்லாம் புசிக்கலாம் என்று தேவன் சொன்னதாக, அவள் கூறினாள். அவர்கள் சாகாதபடிக்கு, அதை தொடவும் கூட தேவன் அவர்களை அனுமதிக்கவில்லை.
“அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; நீங்கள் இதை புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதி 3:4,5).
இதுதான் முதல் தாக்குதல், இதுவே சாத்தானுக்கு முதல் வெற்றியாக அமைந்தது. எதிராளியானவன் நம்மை சோதித்து, தாக்க வரும் போது, நாம் அடிக்கடி தவறவிடுவது என்னவென்றால், அவன் தந்திரமாக நம்மிடத்தில் வருவதைத்தான்! “உலகத்திலே துயரம், கோபம், பகை, கொலை, தரித்திரம் மற்றும் அநியாயத்தை கொண்டுவரும்படி, இந்த கனியை புசி”, என்று அவன் ஸ்திரீயிடம் சொல்லியிருந்தால், என்னவாயிருக்கும்?
ஏவாள் அவனை எதிர்த்து விட்டு, ஓடியிருப்பாள். அவளுக்கு எது பிடிக்குமோ, அதற்கேற்ப அவன் பொய் சொன்னதினால், அவன் அவளை ஏமாற்ற முடிந்தது.
“நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப் போல் இருப்பீர்கள்”, என்று சாத்தான் வாக்குரைத்தான். இது அவளை எந்த அளவுக்கு கவர்ந்திருக்கும்! ஏதோ ஒரு கெட்ட காரியத்தை செய்யச் சொல்வது போல் ஏவாளை அவன் தூண்டாமல், நன்மையானதை செய்யச் சொல்வது போல வார்த்தைகளை பயன்படுத்தினான்.
பாவத்தின் கவர்ச்சியும், சாத்தானின் சூழ்ச்சியும் எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும். தீமையை செய்து, காயப்படுத்தி, அநியாயம் பண்ணும்படி சாத்தான் நம்மை சோதிக்காமல், நமக்கு ஆதாயம் இருப்பது போல் அவன் வலை வீசுவான். அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியை பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்” (ஆதி.3:6). ஏவாளிடத்தில் சாத்தானின் சோதனை வேலை செய்தது.
மனதின் முதல் போராட்டத்தில் ஏவாள் தோற்றுப்போனாள். அந்நேரத்திலிருந்து, நாமும் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமை நமக்குள் இருப்பதால், நம்மால் ஜெயிக்க முடியும் - நாம் ஜெயித்துக் கொண்டேயிருக்க முடியும்.
வெற்றியுள்ள தேவனே, தீமையை நன்மையைப் போலாக்கி, என் மனதைத் தாக்கும் சாத்தானின் கடும் தாக்குதல்களை எதிர்க்க எனக்கு உதவி செய்யும்; இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இதைக் கேட்கிறேன். ஆமென்.
Scripture
About this Plan

ஜாய்ஸ் மரின் நகடமுகற மவதபாட மபாதகனயுடன் உங்கள் நாகைத் ததாடங்குங்கள் .இப்படிப்பட்ட தினசரி பக்திக்கான மவத பாடங்கள் உங்களுக்கு நம்பிக்கககத் தரும், உங்கள் னகதப் புதுப்பிக்க உதவுகிறது ற்றும் ஒவ்தவாரு நாளும் நீங்கள் மநாக்கத்துடனும் ஆர்வத்துடனும் வாழ முடியும் ன்பகதக் கண்டறி உதவுகிறது!
More
Related Plans

One New Humanity: Mission in Ephesians

Identity Shaped by Grace

Virtuous: A Devotional for Women

Be Sustained While Waiting

God, Not the Glass -- Reset Your Mind and Spirit

The Way to True Happiness

The Art of Being Still

Conversation Starters - Film + Faith - Redemption, Revenge & Justice

____ for Christ - Salvation for All
