லூக்கா 4:9-12
லூக்கா 4:9-12 TRV
பின்பு பிசாசு அவரை எருசலேம் நகரத்திற்கு அழைத்துச் சென்று, ஆலயத்தின் உச்சியிலே நிறுத்தி, “நீர் இறைவனின் மகனெனில், இங்கிருந்து கீழே குதித்திடுவீராக. ஏனெனில், “ ‘உம்மை கவனமாய் பாதுகாக்கும்படி, இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லின்மீது மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கைகளினால் தாங்கிக்கொள்வார்கள்’ என்று எழுதப்பட்டிருக்கின்றதே” என்றான். அதற்கு இயேசு, “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை சோதிக்க வேண்டாம்’ என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.