லேவியராகமம் 2
2
தானியபலி
1ஒருவன் கர்த்தருக்கு ஒரு தானியபலியைக் கொண்டுவரும்போது, அவனுடைய காணிக்கை மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். அவன் அதன்மீது எண்ணெய்#2:1 எண்ணெய் – இஸ்ரயேல் மக்கள் ஒலிவ எண்ணெயையே தமது சடங்குகளில் உபயோகித்தனர். ஊற்றி, நறுமணத்தூளைப் போட வேண்டும். 2அந்தப் பலியை ஆரோனின் மகன்மாரான மதகுருக்களிடம் கொண்டுவரும்போது, மதகுருக்கள் நறுமணத்தூளுடன் சேர்த்து, மெல்லிய மாவையும் எண்ணெயையும், ஒரு கைப்பிடியளவு எடுத்து, இதை ஒரு ஞாபகார்த்தப் பங்காக பலிபீடத்தின்மீது எரிக்க வேண்டும். இது கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு பலி. 3எஞ்சியுள்ள தானியபலியானது ஆரோனுக்கும் அவனது மகன்மாருக்கும் சொந்தமானது; கர்த்தருக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட பலிகளில் இது ஒரு மகா பரிசுத்தமான பங்காகும்.
4நீங்கள் அடுப்பில் சுடப்பட்ட ஒரு தானியபலியைக் கொண்டுவந்தால், அது மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாக இருக்கவேண்டும். அது புளிப்பூட்டப்படாமல் எண்ணெய் கலந்து சுடப்பட்ட அடை அப்பமாகவோ அல்லது புளிப்பில்லாமல் எண்ணெய் தடவி சுடப்பட்ட அதிரசமாகவோ இருக்கவேண்டும். 5நீ கொடுக்கும் தானியபலி தட்டையான இரும்பு வலைத் தட்டில் சுடப்படுமானால் அது புளிப்பூட்டப்படாமல் எண்ணெய் கலந்து, மெல்லிய மாவினால் செய்யப்பட வேண்டும். 6அதை நொறுக்கி அதன்மீது எண்ணெய் ஊற்று; இது ஒரு தானியபலி. 7உனது தானியபலி தட்டையான சட்டியில் சமைக்கப்பட்டதானால், அது மெல்லிய மாவினாலும் எண்ணெயினாலும் செய்யப்பட்டிருக்க வேண்டும். 8இந்தப் பொருட்களினால் செய்யப்பட்ட தானியபலியை கர்த்தரிடத்தில் கொண்டுவாருங்கள்; அதை நீங்கள் மதகுருவிடம் கொடுக்க வேண்டும். அவன் அதைப் பலிபீடத்துக்குக் கொண்டுபோவான். 9மதகுரு தானியபலியிலிருந்து ஞாபகார்த்தப் பங்கை தனியாக எடுத்து அதை பலிபீடத்தின்மீது எரிப்பான். இது கர்த்தருக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு பலி. 10எஞ்சியுள்ள தானியபலியானது ஆரோனுக்கும் அவனது மகன்மாருக்கும் சொந்தமானது; கர்த்தருக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட பலிகளில் இது ஒரு மகா பரிசுத்தமான பங்காகும்.
11கர்த்தரிடத்தில் நீங்கள் கொண்டுவரும் ஒவ்வொரு தானியபலியும் புளிப்பூட்டப்படாமல் செய்யப்பட வேண்டும். கர்த்தருக்கு நெருப்பினால் செலுத்தப்படும் பலியில், புளிப்பூட்டும் பதார்த்தத்தையோ தேனையோ எரிக்கக் கூடாது. 12நீங்கள் அவற்றை உங்கள் முதற்பலனின் காணிக்கையாக கர்த்தரிடம் கொண்டுவரலாம். ஆனால் அவை பலிபீடத்தின்மீது மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக செலுத்தப்படக் கூடாது. 13உங்கள் தானியபலிகளையெல்லாம் உப்பினால் சாரமாக்குங்கள். உங்கள் இறைவனின் உடன்படிக்கையின் உப்பை#2:13 உடன்படிக்கையின் உப்பை – இது நிரந்தர ஒப்பந்தத்தைக் குறிக்கின்றது. எண். 18:19; 2 நாளா. 13:5 உங்கள் தானியபலிகளிலிருந்து விலக்க வேண்டாம். உங்களுடைய எல்லாப் பலிகளோடும் உப்பைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
14முதற்பலன்களின் தானியபலியை கர்த்தரிடம் கொண்டுவருவதானால், நெருப்பில் வாட்டப்பட்டு கசக்கப்பட்ட புதிய தானியக் கதிர்களைச் செலுத்த வேண்டும். 15அதன்மீது எண்ணெயையும், நறுமணத்தூளையும் போடுங்கள். இது ஒரு தானியபலி. 16பின்னர் மதகுருக்கள் அதில் ஞாபகார்த்தப் பங்கை நறுமணத்தூளுடன் சேர்த்து, கசக்கப்பட்ட தானியத்தையும், எண்ணெயையும் எரிக்க வேண்டும். இது கர்த்தருக்கு நெருப்பினால் செலுத்தப்படும் பலி.
ទើបបានជ្រើសរើសហើយ៖
லேவியராகமம் 2: TRV
គំនូសចំណាំ
ចែករំលែក
ចម្លង
ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.