ஆதியாகமம் 10

10
இனங்களின் அட்டவணை
1பெருவெள்ளத்தின் பின்பு, நோவாவின் மகன்மார்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்கள் மகன்மாரைப் பெற்றெடுத்தார்கள். அவர்களின் வழிவந்தவர்களின் குடும்ப வரலாறு பின்வருமாறு:#10:1 பொதுவாக ஆண் பிள்ளைகளின் வழித்தோன்றல்களே சந்ததி என கணக்கில் கொள்ளப்பட்டது.
யாப்பேத்தியர்
2யாப்பேத்தின் மகன்மார்#10:2 மகன்மார் என்றால் தலைமுறை அல்லது மக்கள் குழுக்கள் என்றும் பொருள்படும்.:
கோமேர், மாகோக், மாதாய், யாவான், தூபால், மேசேக், தீராஸ் ஆகியோர் ஆவர்.
3கோமேரின் மகன்மார்:
அஸ்கேனாஸ், ரீப்பாத்து, தொகர்மா.
4யாவானின் மகன்மார்:
எலீஷா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். 5இவர்களிலிருந்து கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் தலைமுறைகளின்படியே, அவரவருக்குரிய சொந்த மொழிகளுடன் தங்கள் பிரதேசங்களுக்குள் பரவினார்கள்.
காமியர்
6காமின் மகன்மார்:
கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் ஆகியோர் ஆவர்.
7கூஷின் மகன்மார்:
சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா ஆகியோர் ஆவர்.
ராமாவின் மகன்மார்:
சேபா, தேதான் ஆகியோர் ஆவர்.
8கூஷின் மகன் நிம்ரோத்; இவன் பூமியில் வலிமையுள்ள வீரனாக விளங்கினான். 9அவன் கர்த்தரின் பார்வையில் மிகவும் வலிமைவாய்ந்த வேட்டைக்காரனாய் இருந்தான்; அதனால், “கர்த்தர் முன்னிலையில் வலிமையுள்ள வேட்டைக்காரன் நிம்ரோத்தைப் போல” என்ற வழக்கச்சொல் உண்டாயிற்று. 10#10:10 சிநெயார் – பாபிலோனியாவின் மற்றொரு பெயர். அவன் சிநெயார் நாட்டில் அரசாட்சி செய்ய ஆரம்பித்த இடங்கள் எவையெனில் பாபேல், ஏரேக், அக்காத், கல்னே ஆகியன. 11அவன் அந்நாட்டிலிருந்து அசீரியாவுக்குப் போய், அங்கே நினிவே, ரெகொபோத்-ஈர், காலாகு என்னும் பட்டணங்களைக் கட்டினான். 12நினிவேக்கும், காலாகுக்கும் இடையில் மிகப்பெரிய நகரமான ரெசேன் பட்டணத்தையும் கட்டினான்; இது பிரதான நகரம்.
13மிஸ்ராயீமின் வழிவந்த சந்ததியினர்:
லூதீமியர், ஆனாமியர், லெகாபியர், நப்தூகியர், 14பத்ரூசீயர், பெலிஸ்தியரின் சந்ததிக்கு தலைவனான கஸ்லூகியர், கப்தொரியர் ஆகியோர் ஆவர்.
15கானானின் வழிவந்த சந்ததியினர்:
மூத்த மகன் சீதோன், ஏத்தியர், 16எபூசியர், எமோரியர், கிர்காசியர், 17ஏவியர், அர்கீயர், சீனியர், 18அர்வாதியர், செமாரியர், காமாத்தியர் ஆகியோர் ஆவர்.
பின்பு கானானின் சந்ததியினர் பரவிக் குடியேறினர். 19கானானியரின் எல்லை சீதோன் தொடங்கி கேரார் வழியாகக் காசா வரையிலும், அத்துடன் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாக லாசா வரையிலும் பரந்து இருந்தது.
20அவரவர் சந்ததிகளின்படியும், மொழிகளின்படியும் தங்கள் நாடுகளுக்குள்ளும் எல்லைகளுக்குள்ளும் குடியிருந்த காமின் மகன்மார் இவர்களே.
சேமியர்
21யாப்பேத்தின் மூத்த சகோதரனான சேமுக்கு மகன்மார் பிறந்தார்கள்; ஏபேரின் மகன்மார் எல்லோருக்கும் சேம் முற்பிதாவாய் இருந்தான்.
22சேமின் மகன்மார்:
ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் ஆகியோர் ஆவர்.
23ஆராமின் மகன்மார்:
ஊஸ், கூல், கேத்தெர், மாஸ் ஆகியோர் ஆவர்.
24அர்பக்சாத் சேலாவைப் பெற்றெடுத்தான்,
சேலா ஏபேரைப் பெற்றெடுத்தான்.
25ஏபேருக்கு இரண்டு மகன்மார் பிறந்தார்கள்.
ஒருவன் பெயர் பேலேகு#10:25 பேலேகு பிரிவு என்று அர்த்தம், ஏனெனில், அவன் காலத்தில் பூமி பிரிக்கப்பட்டது. அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
26யொக்தான் என்பவன்,
அல்மோதாத், செலேப், அசர்மாவேத், யேராகு, 27அதோராம், ஊசால், திக்லா, 28ஓபால், அபிமாயேல், சேபா, 29ஓப்பீர், ஆவிலா, யோபாப் ஆகியோரைப் பெற்றெடுத்தான். இவர்களே யொக்தானின் மகன்மார்.
30இவர்கள் குடியிருந்த இடமானது மேசா பிரதேசத்திலிருந்து, கிழக்கு மலைப் பகுதியிலுள்ள செப்பார் பிரதேசம் வரை பரவியிருந்தது.
31அவரவர் தலைமுறையின்படியும், மொழிகளின்படியும் தங்கள் பிரதேசங்களிலும் நாடுகளிலும் வாழ்ந்த சேமுடைய சந்ததியினர் இவர்களே.
32நோவாவுடைய மகன்மாரின் வழிவந்த இனங்களின் குடும்ப வரலாறு இவைகளே. இவர்களிலிருந்தே பெருவெள்ளத்தின் பின்னர் பூமியெங்கும் மனித இனம் பரவியது.

ទើបបានជ្រើសរើសហើយ៖

ஆதியாகமம் 10: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល