யாத்திராகமம் 11

11
தலைமகன்மார் மீதான பத்தாம் வாதை
1அப்போது கர்த்தர் மோசேயிடம் சொன்னதாவது, “நான் பார்வோன்மீதும், எகிப்தின்மீதும் இன்னுமொரு வாதையைக் கொண்டுவருவேன். அதன் பின்னர் அவன் உங்களை இங்கிருந்து போகவிடுவான். அதுவுமன்றி, உங்களை முழுமையாகத் துரத்தியும் விடுவான். 2அப்போது ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தங்களுடைய அயலவர்களிடத்தில் தங்க நகைகளையும், வெள்ளி நகைகளையும் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் என்று நீ இஸ்ரயேல் மக்களுக்குச் சொல்” என்றார். 3கர்த்தர் இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்தார். அதுவுமன்றி, எகிப்தில் பார்வோனின் அலுவலர்களாலும், எகிப்திய மக்களாலும் மோசே பெரிதும் மதிக்கப்பட்டார்.
4அப்போது மோசே பார்வோனிடம் சென்று, “கர்த்தர் சொல்வது இதுவே: ‘நள்ளிரவு வேளையளவில் நான் எகிப்து நாடெங்கும் கடந்து செல்வேன். 5எகிப்தில் ஒவ்வொரு மூத்த மகனும் இறப்பான். அரியணையில் இருக்கும் பார்வோனின் தலைமகனில் இருந்து, திரிகை ஆட்டும் அடிமைப் பெண்ணின் தலைமகன் வரையுள்ள முதல் பிறந்த அனைத்து மகன்மாரும் மரணிப்பார்கள்; அத்துடன் கால்நடைகளின் முதல் பிறப்புக்கள் அனைத்தும் இறந்துபோகும். 6எகிப்து நாடெங்கும் இதுவரை ஏற்பட்டிராத, இனியும் ஏற்படாத மிகப்பெரிய வேதனையின் அழுகுரல் உண்டாகும்; 7ஆனால் இஸ்ரயேலர் மத்தியிலுள்ள ஒரு மனிதனுக்கோ மிருகத்துக்கோ எதிராக, ஒரு நாய்கூட குரைக்க மாட்டாது.’ இதனால் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரயேலருக்கும் இடையே வேறுபாடு ஏற்படுத்துவார் என்பதை நீர் அறிந்துகொள்வீர். 8அப்போது உம்முடைய அலுவலர்கள் அனைவரும் என் முன்பாக வந்து பணிந்து, ‘நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் எங்களைவிட்டுப் போங்கள்!’ என்று சொல்வார்கள். அதன் பின்னர் நான் புறப்படுவேன்” என்று சொல்லி கடுங்கோபத்துடன் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்.
9அப்போது கர்த்தர் மோசேயிடம், “பார்வோன் நீங்கள் சொல்வதைக் கேட்க மறுப்பான். இதனால் எகிப்தில் என்னுடைய அதிசயங்கள் அதிகரிக்கும்” என்றார். 10இப்படியாக மோசேயும் ஆரோனும் இந்த அதிசயங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள்; ஆனாலும் பார்வோனின் இருதயத்தைக் கர்த்தர் கடினப்படுத்தினார், அவன் இஸ்ரயேலரைத் தன் நாட்டிலிருந்து செல்வதற்கு விடவில்லை.

ទើបបានជ្រើសរើសហើយ៖

யாத்திராகமம் 11: TRV

គំនូស​ចំណាំ

ចែក​រំលែក

ចម្លង

None

ចង់ឱ្យគំនូសពណ៌ដែលបានរក្សាទុករបស់អ្នក មាននៅលើគ្រប់ឧបករណ៍ទាំងអស់មែនទេ? ចុះឈ្មោះប្រើ ឬចុះឈ្មោះចូល