அதற்கு அவர், “ஏனெனில் உங்கள் விசுவாசக் குறைவுதான் காரணம். உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கின்றேன், உங்களுக்குக் கடுகுவிதையளவு விசுவாசம் இருந்தால், இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து அங்கே நகர்ந்து போ’ என்று உங்களால் சொல்ல முடியும். அதுவும் அவ்வாறே நகர்ந்து போகும். உங்களால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது.