அவ்வாறிருக்கும்போது, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிவுசெய்யப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ? நான் உங்களுக்குச் சொல்கின்றேன், அவர்களுக்கு அவர் விரைவாக நீதி வழங்குவார். ஆயினும் மனுமகன் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ?” என்றார்.