1
லூக்கா 10:19
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
பாம்புகளையும் தேள்களையும் மிதிப்பதற்கும், பகைவனுடைய அனைத்து வல்லமையையும் வெற்றிகொள்வதற்கும் நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்; எதுவும் உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது.
ប្រៀបធៀប
រុករក லூக்கா 10:19
2
லூக்கா 10:41-42
அதற்கு ஆண்டவர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ பல காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பிப் போய் இருக்கின்றாய். ஆனாலும் அவசியமானது ஒன்றே. மரியாள் தன்னிடமிருந்து எடுபடாத சிறப்பானதைத் தெரிந்தெடுத்திருக்கிறாள்” என்றார்.
រុករក லூக்கா 10:41-42
3
லூக்கா 10:27
அதற்கு அவன், “ ‘உன் இறைவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்துடனும், உன் முழு ஆத்துமாவுடனும், உன் முழு பலத்துடனும், உன் முழு மனதோடும் அன்பு செய்வாயாக.’ அத்துடன், ‘நீ உன்னில் அன்பாய் இருப்பது போல் உன் அயலவனிலும் அன்பாய் இரு’ என்பதே” எனப் பதிலளித்தான்.
រុករក லூக்கா 10:27
4
லூக்கா 10:2
அவர் அவர்களிடம் சொன்னதாவது: “அறுவடை மிகுதியாய் இருக்கின்றது, ஆனால் வேலையாட்களோ மிகச் சிலராய் இருக்கின்றார்கள். ஆகவே அறுவடை செய்ய வேலையாட்களை அனுப்பும்படி, அறுவடையின் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள்.
រុករក லூக்கா 10:2
5
லூக்கா 10:36-37
“இந்த மூன்று பேரிலும், கொள்ளையர் கையில் அகப்பட்ட அந்த மனிதனுக்கு, அயலவனாய் இருந்தது யாரென்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு நீதிச்சட்ட நிபுணன், “அவன்மீது இரக்கம் காட்டியவனே” என்றான். அப்போது இயேசு அவனிடம், “நீயும் போய் அவ்வாறே செய்” என்றார்.
រុករក லூக்கா 10:36-37
6
லூக்கா 10:3
புறப்பட்டுப் போங்கள்! ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புவது போல, நான் உங்களை அனுப்புகிறேன்.
រុករក லூக்கா 10:3
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ