அதற்குப் பார்வோன் யோசேப்பிடம், “உன் தந்தையும் சகோதரர்களும் உன்னிடம் வந்திருக்கின்றார்கள். இதோ, எகிப்து நாடு உனக்கு முன்பாக இருக்கின்றது; உன் தந்தையையும் சகோதரர்களையும் நாட்டின் சிறந்த இடத்தில் குடியமர்த்து. அவர்கள் கோசேனில் குடியிருக்கட்டும். அவர்களில் திறமையுள்ளவர்கள் இருப்பார்களானால், அவர்கள் என் கால்நடைகளுக்குப் பொறுப்பாய் இருக்கட்டும்” என்றான்.