1
ஆதியாகமம் 32:28
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
அப்போது அவர், “நீ இறைவனோடும் மனிதரோடும் போராடி வெற்றி பெற்றாய், எனவே உன் பெயர் இனிமேல் யாக்கோபு எனப்படாமல் இஸ்ரயேல் எனப்படும்” என்றார்.
ប្រៀបធៀប
រុករក ஆதியாகமம் 32:28
2
ஆதியாகமம் 32:26
அப்போது அவர் யாக்கோபிடம், “உன் பிடியை விலக்கி என்னைப் போக விடு; பொழுது விடிகின்றது” என்றார். அதற்கு யாக்கோபு, “நீர் என்னை ஆசீர்வதித்தாலன்றி உம்மைப் போகவிட மாட்டேன்” என்றான்.
រុករក ஆதியாகமம் 32:26
3
ஆதியாகமம் 32:24
அதன் பின்னர் யாக்கோபு தனிமையாக இருந்தான். அப்போது ஒருவர் வந்து, பொழுது விடியும்வரை அவனுடன் மல்யுத்தம் செய்தார்.
រុករក ஆதியாகமம் 32:24
4
ஆதியாகமம் 32:30
உடனே யாக்கோபு, “நான் இறைவனை நேருக்குநேராய்க் கண்டும், இன்னும் உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்துக்குப் பெனியேல் எனப் பெயரிட்டான்.
រុករក ஆதியாகமம் 32:30
5
ஆதியாகமம் 32:25
யாக்கோபை வெற்றிகொள்ள முடியாது என்பதைக் கண்ட அவர் அவனோடு தொடர்ந்து போராடுகையில், யாக்கோபின் இடுப்பு மூட்டுப்பகுதியைத் தொட்டார், தொட்டவுடனே இடுப்பு மூட்டு விலகியது.
រុករក ஆதியாகமம் 32:25
6
ஆதியாகமம் 32:27
அவர் அவனிடம், “உன் பெயர் என்ன, சொல்?” என்றார். அதற்கு அவன், “யாக்கோபு” என்றான்.
រុករក ஆதியாகமம் 32:27
7
ஆதியாகமம் 32:29
அப்போது யாக்கோபு அவரிடம், “தயவுசெய்து உம்முடைய பெயரை எனக்குச் சொல்வீராக” என்றான். அதற்கு அவர், “நீ ஏன் என் பெயரைக் கேட்கிறாய்?” என்று கூறி, அவனை ஆசீர்வதித்தார்.
រុករក ஆதியாகமம் 32:29
8
ஆதியாகமம் 32:10
உமது பணியாளனாகிய என்மீது நீர் காண்பித்த எல்லாவித நிலையான அன்புக்கும், நீர் எனது நம்பிக்கைக்குரியவராக இருந்ததற்கும் நான் தகுதியற்றவன். நான் யோர்தான் நதியைக் கடந்து இங்கு வந்தபோது, எனது கைத்தடி மட்டுமே என்னிடம் இருந்தது; ஆனால் இப்பொழுதோ என் உடைமைகள் இரண்டு முகாம்களை நிரப்பும் அளவுக்கு பெருகிவிட்டன.
រុករក ஆதியாகமம் 32:10
9
ஆதியாகமம் 32:32
யாக்கோபின் இடுப்பினது மூட்டின் அருகேயிருந்த தசைநார் தொடப்பட்டபடியால், இந்நாள்வரை எந்த மிருகத்தினதும் இடைமூட்டுடன் இணைந்திருக்கும் தசைநாரை இஸ்ரயேலர் உண்பதில்லை.
រុករក ஆதியாகமம் 32:32
10
ஆதியாகமம் 32:9
பின்னர் யாக்கோபு, “என் தந்தையான ஆபிரகாமின் இறைவனே, என் தந்தையான ஈசாக்கின் இறைவனே, ‘நீ உன் நாட்டுக்கும், உன் உறவினரிடத்துக்கும் போ; நான் உன் வாழ்வை வளம்பெறச் செய்வேன்’ என்று சொன்ன கர்த்தரே
រុករក ஆதியாகமம் 32:9
11
ஆதியாகமம் 32:11
இதோ, என் சகோதரன் ஏசாவின் கையிலிருந்து என்னைக் காப்பாற்றுமாறு கெஞ்சி மன்றாடுகின்றேன். ஏனெனில் அவன் வந்து, என்னோடு சேர்த்து என் பிள்ளைகளையும் அவர்களது தாய்மாரையும் தாக்குவான் என்று அஞ்சுகின்றேன்.
រុករក ஆதியாகமம் 32:11
គេហ៍
ព្រះគម្ពីរ
គម្រោងអាន
វីដេអូ