அப்போது இறைபிரசன்னக் கூடாரத்தை ஒரு மேகம் மூடியது. கர்த்தரின் மகிமை இறைபிரசன்னக் கூடாரத்தை நிரப்பியது. மேகம் இறைபிரசன்னக் கூடாரத்தின் மேல் தங்கியிருந்தபடியாலும், கர்த்தரின் மகிமை இறைபிரசன்னக் கூடாரத்தை நிரப்பியிருந்தபடியாலும் மோசேயினால் இறைபிரசன்னக் கூடாரத்துக்குள் நுழைய முடியாதிருந்தது.