சகரியா 3
3
தலைமை மதகுருவுக்கான தூய ஆடைகள்
1அதன் பின்னர் தலைமை மதகுருவான யோசுவா, கர்த்தருடைய தூதனின் முன்னிலையில் நிற்பதை கர்த்தர் எனக்குக் காட்டினார். யோசுவாவின்மீது குற்றம் சாட்டுவதற்கு சாத்தான் அவனுடைய வலதுபக்கத்தில் நின்று கொண்டிருந்தான். 2கர்த்தரின் தூதன்#3:2 கர்த்தரின் தூதன் – சில மொழிபெயர்ப்புகளில் கர்த்தர் என்றுள்ளது. சாத்தானிடம், “சாத்தானே! கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக. எருசலேம் பட்டணத்தைத் தெரிவுசெய்த கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இந்த யோசுவா நெருப்பிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்ட எரியும் கொள்ளியல்லவா!” என்றான்.
3அப்போது யோசுவா, தூதன் முன்பாக அழுக்கான ஆடை அணிந்தவனாக நின்றான். 4தூதன் அவனுக்கு முன்பாக நிற்கின்றவர்களிடம், “இவனுடைய அழுக்கு ஆடைகளைக் களைந்து விடுங்கள்” என்றான்.
அதன் பின்னர் அவன் யோசுவாவிடம், “இதோ பார், நான் உன் பாவங்களை அகற்றி, விலை உயர்ந்த ஆடைகளை உனக்கு அணிவிப்பேன்” என்றான்.
5அப்போது நான், “அவனுடைய தலைமீது சுத்தமான தலைப்பாகையை வைப்பார்களாக” என்றேன். எனவே அவர்கள்#3:5 அவர்கள் – தூதனுக்கு முன்பாக நிற்கின்றவர்கள் கர்த்தரின் தூதன் அங்கே நிற்கையில் ஒரு சுத்தமான தலைப்பாகையை யோசுவாவின் தலைமீது வைத்து, ஆடைகளை அணிவித்தார்கள்.
6அவ்வேளையில் யோசுவாவிடம் கர்த்தருடைய தூதன் உறுதியாகக் கூறியதாவது, 7சேனைகளின் கர்த்தர் அறிவிப்பது இதுவே: “நீ என் வழிகளில் நடந்து எனது விதிமுறைகளைக் கைக்கொள்வாயானால், நீ என் வீட்டை#3:7 வீட்டை – ஆலயம் நிர்வகித்து, என் முற்றங்களுக்கும் பொறுப்பாக இருப்பாய். இங்கு நிற்கின்றவர்கள் மத்தியில் நான் உனக்கும் ஒரு இடத்தைத் தருவேன்.
8“தலைமை மதகுருவாகிய யோசுவாவே, நீயும் உன்னுடன் இருக்கும் மதகுருக்களும் கேளுங்கள்; இவர்கள் வரப்போகும் காரியங்களுக்கு அடையாளமாக இருக்கின்றார்கள். இதோ நான் கிளை எனப்படும் என் அடியவரைக் கொண்டுவரப் போகின்றேன். 9இதோ! நான் யோசுவாவின் முன்பாக நிறுத்திவைத்துள்ள கல்லைப் பாருங்கள். ஏழு கண்கள் இருக்கும் இந்த ஒரே கல்லில் நான் ஒரு கல்வெட்டினைப் பொறித்து, இந்தத் தேசத்தின் பாவங்களை ஒரேநாளில் அகற்றுவேன் என சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.
10“அந்தநாளில் நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது அயலவனை உங்கள் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து அமரும்படி அழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் அறிவிக்கின்றார்.”
Currently Selected:
சகரியா 3: TRV
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
பரிசுத்த வேதாகமம், இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™
பதிப்புரிமை © 2002, 2022, 2024 Biblica, Inc.
நிறுவனத்தின் அனுமதி பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் இந்த நிறுவனத்திற்கே உரியது.
Holy Bible, Tamil Readerʼs Version™
Copyright © 2002, 2022, 2024 by Biblica, Inc.
Used with permission. All rights reserved worldwide.