ஒரு சீஷனாக இருப்பது எப்படிமாதிரி

ஆறாவது ரகசிய அன்பின் மொழி
ஐந்து அன்பு மொழிகளைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது கேரி சாப்மேன் என்பவரின் கருத்தாகும், மேலும் அன்பை வெளிப்படுத்தவும் பெறவும் ஒவ்வொருவருக்கும் விருப்பமான "மொழி" உள்ளது என்பது இதன் கருத்தாகும். ஐந்து மொழிகள்:
- உறுதிப்படுத்தும் வார்த்தைகள்
- தரமான நேரம்
- பரிசுகளைப் பெறுதல்
- ஊழியப் பணி
- சரீரப்பிரகாரமான தொடுதல்
எனது மொழியானது உறுதிப்படுத்தும் வார்த்தைகள், ஆனாலும், நீங்கள் என் மனைவியிடம் கேட்டால், என்னிடம் பேசுவதற்கு ஆறாவதாக ஒரு அன்பு மொழி உள்ளது என்றே அவள் கூறுவாள்: அது சாப்பாடு.🤪
சீஷர்களாகிய நாம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு, குறிப்பாகத் தேவையில் உள்ளவர்களுக்கு உறுதியளிக்கும் மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேச வேண்டும் என்று வேதாகமம் நம்மை ஊக்குவிக்கிறது. ஏசாயா கூறுகிறார்:
"இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்." (ஏசாயா 50:4, TAOVBSI)
சீஷர்களாக, நாம் ஆண்டவருடைய சத்தத்துக்கு செவிகொடுக்கும்படி உணர்வுள்ளவர்களாக இருக்க அழைக்கப்படுகிறோம். குறிப்பாக, அவர் யாரையாவது ஊக்குவிக்கும்படி நம்மை ஏவும்போது, நாம் தயாராக இருக்க வேண்டும். ‘இன்று நான் யாரையாவது ஊக்கப்படுத்த வேண்டுமா?’ என்று ஆண்டவரிடத்தில் கேட்பதன் மூலம் உங்கள் நாளைத் தொடங்குங்கள். உங்கள் நாள் முழுவதும், பரிசுத்த ஆவியானவரின் ஏவுதல்களைப் பெற்றுக்கொள்ளும்படிக்குக் கவனமாய் இருங்கள் - "அவளுக்கு ஒரு செய்தி அனுப்பு" அல்லது "அவனை அழை" என்பன போன்ற சிறிய சிந்தனைகளை கவனியுங்கள்.
நான் இதை எண்ணற்ற முறை அனுபவித்திருக்கிறேன், பொதுவாக அந்த நபர்களுக்கு அந்த செய்தி அல்லது உதவி ஏற்ற நேரத்தில் சென்றடைவது மிகவும் ஆச்சரியமானது.
உங்கள் இதயத்தில் ஒரு நபருக்காக ஆண்டவரிடமிருந்து ஒரு ஏவுதலை உணர்ந்தால், தயங்காதீர்கள்! ஒரு சாதாரண அழைப்பு அல்லது செய்தி மிகப்பெரிய வித்தியாசத்தை அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தக் கூடும்... நான் சொல்வதை நம்புங்கள்!
நாம் ஜெபிப்போம்:
“பரலோகத் தகப்பனே, உமது அழகான சத்தத்திற்கு என் காதுகளையும், உமது வழிகளின் மகத்துவத்திற்கு என் இருதயத்தையும் திறந்தருளும். நீர் என்னிடம் செய்யும்படி கேட்கும் காரியங்களுக்கு, நான் செவிகொடுக்கவும் பதிலளிக்கவும் தீர்மானிக்கிறேன். எனக்குத் தேவையான விருப்பம், அறிவு, தாழ்மை மற்றும் தைரியம் ஆகியவற்றை தந்தருளும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.”
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

நாமெல்லோரும் சீஷர்களாகவும் மற்றும் சீஷர்களை உருவாக்குபவர்களாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். ஆனால், "சீஷன்" என்ற பட்டத்தின் உண்மையான அர்த்தம் என்ன? வேதாகமத்தில் உள்ள இயேசுவின் சீஷர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? இந்த வாசிப்புத் திட்டம் சீஷத்துவத்தில் வளருவதற்கான ஒரு பயணத்தில் உங்களைக் கொண்டு செல்லும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ta.jesus.net/a-miracle-every-day/miracle
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சத்தியம் மறுரூபப்படுத்தும்

பயத்தை விட விசுவாசம்

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்

குற்ற உணர்வுப் பாதை - குற்ற உணர்வுப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம்

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை

சங்கீதம் 25 ன் வாயிலாக ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், ஆராதியுங்கள் மற்றும் தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவரை சந்தியுங்கள்

ஆண்டவர் – நமது பூரண தகப்பன்
