ஒரு சீஷனாக இருப்பது எப்படிமாதிரி

நீங்கள் ஒரு சிறிய கிறிஸ்து!
"கிறிஸ்தவர்கள்" என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
இது "சிறிய கிறிஸ்து" என்று பொருள்படும் ‘கிறிஸ்டியானோஸ்’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இது முதலில் பயன்படுத்தப்பட்டபோது, அது ஒரு நபரை அவமானப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஜனங்கள் சீஷர்களைப் பரியாசம் பண்ணி, "அங்கே பாருங்கள்! அந்த சிறிய கிறிஸ்துக்கள் அங்கே இருக்கிறார்கள்" என்று கூறுவார்கள்.
ஆனால் பரியாசம் பண்ணுவதற்காகச் சொல்லப்பட்ட ஒரு வார்த்தை, ஒரு ஆழமான சத்தியமாக மாறியது, ஆம், கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவைப் போலவே இருக்க விரும்புகிறோம் - என்ன ஒரு அழகான வரலாற்று திருப்புமுனை!
"இயேசுவுக்குள் வாழ்வதாகக் கூறும் எவரும் இயேசுவைப் போலவே வாழ வேண்டும்." (1 யோவான் 2:6, TAOVBSI)
இந்த வார்த்தை முதலில் அந்தியோகியாவில் பயன்படுத்தப்பட்டது:
"... அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம் பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று." (அப்போஸ்தலர் 11:26, TAOVBSI)
ஆரம்பகால விசுவாசிகளின் வாழ்க்கை முறை கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும், மிகவும் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் இருந்ததால், இந்தப் பெயர் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொண்டதை நடைமுறைப்படுத்தினர், மேலும் அவருடைய பணியை நிறைவேற்ற நாம் எப்படி அழைக்கப்பட்டோமோ, அப்படியே அவருடைய பணியை நிறைவேற்றினர்:
"ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்." (கொலோசெயர் 1:25,27, TAOVBSI).
கிறிஸ்து நம்மில் இருக்கும்போது, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாம் மகிமையின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறோம். இது ஆச்சரியமானது, இல்லையா?
நாம் அவரை எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவரைப் போல மாறிவிடுகிறோம்.
இன்று நீங்கள் இயேசுவுக்கு அருகில் நெருங்கி வரவும், ஒவ்வொரு நாளும் அவரை நன்கு அறிந்துகொள்ளவும், அவரைப் பிரதிபலிக்கவும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு மகிமையின் நம்பிக்கையைப் பரப்பவும் வேண்டும் என்று நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்!
நீங்கள் ஒரு அதிசயம்!
Cameron Mendes
இந்த திட்டத்தைப் பற்றி

நாமெல்லோரும் சீஷர்களாகவும் மற்றும் சீஷர்களை உருவாக்குபவர்களாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். ஆனால், "சீஷன்" என்ற பட்டத்தின் உண்மையான அர்த்தம் என்ன? வேதாகமத்தில் உள்ள இயேசுவின் சீஷர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? இந்த வாசிப்புத் திட்டம் சீஷத்துவத்தில் வளருவதற்கான ஒரு பயணத்தில் உங்களைக் கொண்டு செல்லும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ta.jesus.net/a-miracle-every-day/miracle
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சத்தியம் மறுரூபப்படுத்தும்

பயத்தை விட விசுவாசம்

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்

குற்ற உணர்வுப் பாதை - குற்ற உணர்வுப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம்

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை

சங்கீதம் 25 ன் வாயிலாக ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், ஆராதியுங்கள் மற்றும் தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவரை சந்தியுங்கள்

ஆண்டவர் – நமது பூரண தகப்பன்
