தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

நான் இரண்டு கார்களுக்கு சேதம் ஏற்படுத்திவிட்டேன், ஆனால் இதைவிட மோசமாக இருந்திருக்கலாம்…
நான் இதற்கு முன் இந்தக் கதையைப் பகிர்ந்திருக்கிறேன், இப்போதும் நினைத்தால் எனக்குப் கூச்சமாக இருக்கிறது:
நான் ஒருமுறை எங்களுடைய ஒரு காரை... எங்களுடைய இன்னொரு காரைக் கொண்டு இடித்துவிட்டேன். எனக்குத் புரிகிறது. இது மோசமான செயல் என்று. 🫣
என் வாழ்க்கையில் மிகவும் வெட்கமான தருணங்களில் இதுவும் ஒன்று. அந்தக் கணத்தில் பொறுமையைக் கடைப்பிடித்த என் அப்பாவுக்கு ஒரு பெரிய நன்றி. அவர் அப்படிப்பட்ட கருணையுடன் என்னை மன்னித்தார்.
ஆனால் உண்மையிலேயே? இதைவிட மோசமாக இருந்திருக்கலாம்.
நான் அவருடைய செல்வத்தில் மூன்றில் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டு, ஒரு வெளிநாட்டுக்குச் சென்று, பார்ட்டிகள் மற்றும் போலி நண்பர்களுக்காக அனைத்தையும் செலவழித்திருக்கலாம்— கெட்ட குமாரன் உவமையில் வரும் இளைய மகனைப் போல.
அதை மன்னிப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும், இல்லையா?
ஆனாலும், இயேசுவின் கதையில் வரும் அந்தத் தந்தை அதையே செய்கிறார்; அவர் தன் மகனை மன்னித்து, அகலத் திறந்த கரங்களுடன் அவனை மீண்டும் வரவேற்கிறார்.
இந்த உவமையில் (லூக்கா 15:11-32 TAOVBSI) தகப்பனின் அனைத்து பதில் கூறுகளிலும் பெரும் முக்கியத்துவம் உள்ளது, மேலும் நாம் பாவம் செய்யும்போது அவருடைய குமாரர்களும் குமாரத்திகளுமாகிய நம்மை, அவர் எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் அது காட்டுகிறது:
- ஓடிவந்து அவனைச் சந்தித்தார். மகன் வெட்கத்துடன் நடந்து வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான், அவன் நிராகரிப்பை எதிர்பார்த்தான். ஆனால் தந்தை, அனைத்து சமூக வழக்கங்களையும் மீறி, அவனை நோக்கி ஓடினார். அந்தக் கலாச்சாரத்தில், கண்ணியமான மனிதர்கள் ஓடமாட்டார்கள். ஆனால் இந்தத் தந்தை தோற்றத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை - தன் மகனை மீட்டெடுக்க அவர் வெட்கத்தை தன்மேல் எடுத்துக்கொண்டார். (ரோமர் 10:11TAOVBSI).
- அவன்மீது அங்கியைப் போர்த்தினார். அவருடைய அழுக்கான, கிழிந்த, கந்தலான துணிகளையும் வெட்கத்தையும் மூடி, அவனுடைய கண்ணியத்தை மீட்டெடுத்ததைக் குறிக்கிறது (ஏசாயா 61:10TAOVBSI).
- அவனுக்கு ஒரு மோதிரம் கொடுத்தார். அனைத்தையும் இழந்த பிறகு மகனுக்குக் கிடைத்த முதல் உடைமை அது. அவன் மீண்டும் செல்வத்தில் நிலைநிறுத்தப்பட்டு, வறுமையிலிருந்து மீட்கப்பட்டான் (சங்கீதம் 34:10TAOVBSI).
- கொழுத்த கன்றுகுட்டியைத் தயார் செய்தார். களைத்து, பசியுடன் வீடு திரும்பிய தன் மகனின் சரீரத் தேவைகளைக் கவனித்து, அவனுக்கு உணவளித்தார் (சங்கீதம் 146:7TAOVBSI).
- ஒரு விருந்து ஏற்பாடு செய்தார். அவன் செய்த எல்லாக் காரியங்களும் தவறாக இருந்தாலும், தந்தை தன் மகனைக் கொண்டாடி, பகிரங்கமாக அவனை கனப்படுத்தினார் (செப்பனியா 3:17TAOVBSI).
- அவனை முத்தமிட்டு, அவன் கால்களில் செருப்புகளைப் போட்டார். நீங்கள் ஒரு அந்நியரையோ, அடிமையையோ அல்லது வேலைக்காரரையோ முத்தமிட மாட்டீர்கள், ஆனால் ஒரு உறவினரை முத்தமிடுவீர்கள். அதேபோல், செருப்புகளுக்கும் பொருந்தும்; மகன்களும் மகள்களும் மட்டுமே செருப்புகளை அணிவார்கள். அவனை ஒரு மகனாக மீண்டும் வரவேற்றதன் மூலம், தந்தை பெரிய கருணையைக் காட்டினார், மேலும் தன் சொத்துக்களையும் செல்வத்தையும் மீண்டும் அவனுக்குக் கிடைக்க செய்தார். முதல் சொத்தை வீணடித்த போதிலும் அவன் இன்னொரு சொத்துக்கு உரிமையுடையவன் ஆனான்.😲 அவர் அவனை நம்பி அவனுக்கு மற்றொரு வாய்ப்பைக் கொடுத்தார் (ரோமர் 8:17 TAOVBSI).
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மனந்திரும்ப வேண்டிய விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா? பாவங்கள், கெட்ட பழக்கங்கள், அழிவுகரமான சிந்தனை முறைகள்? அவற்றிலிருந்து ஓடி, உங்கள் பரலோகத் தந்தையின் அன்பான கரங்களுக்குள் ஓடிவர இன்றே தேர்ந்தெடுங்கள். நான் உங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறேன்; அவர் அகலத் திறந்த கரங்களுடன் காத்திருக்கிறார்.
நீங்கள் ஒரு அதிசயம்!
Jenny Mendes
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net

