தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்மாதிரி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

30 ல் 28 நாள்

உங்களுக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டுள்ளது! 💪

தனித்துவமான உவமைகள் பற்றிய நமது தொடரின் கடைசி நாளான இன்று, பத்துத் தாலந்துகளின் உவமையை (மத்தேயு 25:14-30, TAOVBSI) நாம் முடிக்கிறோம். என்னவொரு அற்புதமான பயணம் இது! 🙌

கடந்த வாரம் நாம் கற்றுக்கொண்டது என்னவென்றால், இயேசுவின் கதையில் வரும் ஊழியக்காரர்களைப் போலவே, நமக்கும் ஒரு வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

பவுல் அதை இவ்வாறு விவரிக்கிறார்:

“ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்.” - எபேசியர் 2:10 TAOVBSI.

சரி, நாம் செய்ய உருவாக்கப்பட்ட இந்த "நற்கிரியைகள்" யாவை? அதற்கு பதிலளிக்க, மீண்டும் ஒருமுறை அந்த உவமையின் சூழலைப் பார்ப்போம்.

தாலந்துகளின் உவமையும், பத்து கன்னிகைகளின் உவமையும் ஒன்றிணைந்து, இயேசு தம் சீடர்களுக்குக் கடைசி நாட்களைப் பற்றி அளித்த ஒரு போதனையின் பெரிய பகுதியாகும் (மத்தேயு 24 மற்றும் 25 TAOVBSI).

அவர் கடைசி நாட்களின் அடையாளங்களைப் பட்டியலிட்டு தொடங்குகிறார், பின்னர் நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்த இரண்டு உவமைகளையும் பகிர்கிறார், கடைசியில் இரட்சிப்புக்கான அளவுகோல்களைப் பட்டியலிடுகிறார்.

மிகவும் பிரபலமான ஒரு பகுதியில், இயேசு நீதிமான்களின் செயல்களை விவரிக்கிறார்:

“பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.” என்பார். (மத்தேயு 25:35-40, TAOVBSI)

இவைகளே ☝️அந்தப் பணிகள்!

தேவன் நமக்குக் கொடுத்திருக்கும் தாலந்துகள், வளங்கள் மற்றும் செல்வாக்கு ஆகியவை நமது சொந்த நலனுக்காக மட்டும் அல்ல. தேவனுடைய ராஜ்ஜியம் என்பது எப்போதும் நம்மைச் சுற்றியுள்ளவர்களை ஆசீர்வதிப்பதைப் பற்றியதுதான்.

ஒவ்வொரு உவமை, ஒவ்வொரு கட்டளை, ஒவ்வொரு அழைப்பு போன்ற எல்லாவற்றின் மையத்திலும் - இந்த கட்டளை உள்ளது:

“உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக… உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக…” - (மத்தேயு 22:37 TAOVBSI)

நாம் ஜெபிப்போம்!

பரம பிதாவே, எனக்கு நீர் கொடுத்தவற்றை என் அருகிலுள்ளவர்களை ஆசீர்வதிக்க நான் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காட்டுவீராக. நீர் எனக்குக் கொடுத்ததை மற்றவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் ஒரு நல்ல பணியாளாக இருக்க எனக்கு உதவிசெய்யும். என் வாழ்க்கையில் உம்முடைய ஆசீர்வாதங்களுக்காக நன்றி. இயேசுவின் நாமத்தில், ஆமென்.

இன்று, ஊக்கம் தேவைப்படும் ஒருவருக்கு இந்த மின்னஞ்சலை அனுப்புவது உங்களுக்கு மிகவும் எளிதான ஒரு காரியமாக இருக்கலாம்! 😉

நீங்கள் ஒரு அதிசயம்!

Cameron Mendes

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

இயேசு கிறிஸ்து பெரும்பாலும் போதிப்பதற்கு உவமைகளையே பயன்படுத்தினார். அதற்குக் காரணம் உண்டு: இந்த எளிய, ஆனால் ஆழமான கதைகள், ஆழ்ந்த ஆவிக்குரிய உண்மைகளையும், என்றென்றும் நிலைத்திருக்கக்கூடிய வாழ்க்கைப் பாடங்களையும், அவருடைய சீடர்கள் மற்றும் பொது மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருந்தன. இந்தக் கதைகள் சொல்லப்பட்ட வரலாற்று மற்றும் கலாச்சாரப் பின்னணியை நாம் ஆராய்ந்து புரிந்துகொள்ள முயற்சி செய்யும்போது —அதை முதலில் கேட்டவர்களுக்கு அவை எந்தப் பொருளை உணர்த்தியதோ, அதே வகையில் நாமும் அதை புரிந்து உணர்ந்துகொள்ள நமக்கு உதவும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net