ஆண்டவர் சர்வவல்லவர்மாதிரி

பொய்கள் மற்றும் துரோகம்!
உண்மையைக் காண்பது மிகவும் அரிதாகி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக, மூலை முடுக்கெல்லாம் ஆன்லைன் டேட்டிங் மற்றும் சோதனைகள் அதிகரித்து வருவதால், துரோகம் மற்றும் கைவிடப்பட்ட சம்பவங்கள் பொதுவாக ஆங்காங்கே நிகழ்கின்றன.
"மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?" (நீதிமொழிகள் 20:6)
உண்மை என்பது அரிதானது அல்ல; அது தெய்வீகமானது. தாவீது ராஜா ஆண்டவரின் உண்மைத்தன்மையை உணர்ந்து அனுபவித்தார், “நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்து திரிகிறதையும் நான் காணவில்லை." (சங்கீதம் 37:25)
ஆண்டவர் உங்கள் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பை எப்படி நிரூபிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
- அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவதன் மூலம் நிரூபிக்கிறார். (எபிரெயர் 10:23)
- உங்கள் வாழ்க்கையின் சகல நாட்களிலும் உங்களுக்கு அருகில் இருப்பதாக வாக்களிப்பதன் மூலம் நிரூபிக்கிறார். (மத்தேயு 28:20)
- உங்களுக்காக வைராக்கியமுள்ளவராக இருப்பதன் மூலம் நிரூபிக்கிறார். (எபிரெயர் 13:5)
- உங்களுடன் நித்திய உடன்படிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் நிரூபிக்கிறார் (ஏசாயா 61:8)
- நீங்கள் உண்மையில்லாதவர்களாய் இருந்தாலும், அவர் மாறாதவராய் இருப்பதன் மூலம் நிரூபிக்கிறார் (2 தீமோத்தேயு 2:13)
- உங்களை மன்னிப்பதன் மூலம் நிரூபிக்கிறார் (1 யோவான் 1:9)
உங்களுக்குத் துரோகம் செய்தவர்களால் நீங்கள் எப்போதாவது காயமடைந்திருக்கிறீர்களா? துரோகம், புறக்கணிப்பு அல்லது கைவிடப்பட்ட நிலைமையினால் உண்டான வடுக்களை நீங்கள் சுமந்துகொண்டிருக்கிறீர்களா? இன்று, ஆண்டவர் தம்முடைய மாறாத உண்மையான அன்பை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறார்!
“கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம்." (உபாகமம் 31:8)
நீங்கள் எப்போதும் அவரை நம்பலாம். ஆண்டவர் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டார். உங்கள் மீதான அவரது அன்பு ஒருபோதும் தணியாது. உங்களுக்கான அவரது அர்ப்பணிப்புகள் நித்தியமானவை. அவர் உங்களை ஒருபோதும் வீழ்ந்துபோக விடமாட்டார்.
என்னுடன் சேர்ந்து ஜெபிக்க உங்களை அழைக்கிறேன்... “பரலோகத் தகப்பனே, என்னில் குறையிருந்தாலும், எனக்கு உண்மையுள்ளவராக இருந்ததற்கு நன்றி. தொடர்ந்து நல்லவராக இருப்பதற்கும், உமது வாக்குத்தத்தங்கள் அனைத்தையும் நிறைவேற்றியதற்கும் நன்றி. சில சமயங்களில் நான் நிலையற்று இருந்ததற்காக நான் உம்மிடம் மன்னிப்புக் கேட்கிறேன், மேலும் உம்மைப்போல் மாற எனக்கு உமது உதவி தேவை. இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.”
நீங்கள் ஒரு அதிசயம்.
Cameron Mendes
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த 7 நாள் வாசிப்புத் திட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் எவ்வாறெல்லாம் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும், ஆண்டவரின் வல்லமையின் வெவ்வேறு அம்சத்தைப் பற்றி சிந்தித்து, உங்கள் விசுவாசத்தை மேலும் வளர்த்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-God-is-powerful
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மேடைகள் vs தூண்கள்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

வனாந்தர அதிசயம்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருடைய கணக்கு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
