ஆண்டவர் சர்வவல்லவர்மாதிரி

உங்களால் எண்ணிப்பார்க்க முடியுமா? 🧮
கடந்த சில நாட்களாக, ஆண்டவரது வல்லமையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி நாம் தியானித்தோம்… அவை ஏற்கனவே உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறதா?
இன்று, ஆண்டவரின் உதாரத்துவத்துக்கு உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். நம்மால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு, அபரிமிதமான ஆசீர்வாதங்களை நம்மீது பொழிந்தருளும் மிகவும் உதாரத்துவமான ஆண்டவருக்கு நாம் ஊழியம் செய்கிறோம்.
ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சில ஆசீர்வாதங்களை இங்கே காணலாம்:
- பரலோகத்தில் ஒரு வீடு மற்றும் நித்திய ஜீவனைக் கொடுத்திருக்கிறார் (யோவான் 3:16 மற்றும் யோவான் 14:2-3)
- நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பு கொடுத்திருக்கிறார் (1 யோவான் 1:9)
- நாம் ரசித்து மகிழ்வதற்கு அழகான படைப்புகளைக் கொடுத்திருக்கிறார். (யோபு 12:7-10)
- நாள்தோறும் புதிய இரக்கங்களை கொடுத்திருக்கிறார் (புலம்பல் 3:22-23)
- எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானத்தைக் கொடுத்திருக்கிறார். (பிலிப்பியர் 4:6-7)
- பரிசுத்த ஆவியானவரை ஒரு சகாயராகக் கொடுத்திருக்கிறார்; (யோவான் 15:26)
- ஆண்டவரின் வார்த்தையாகிய வேதாகமத்தைக் கொடுத்திருக்கிறார். (II தீமோத்தேயு 3:16-17)
- நிறைவான சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறார். (சங்கீதம் 16:11)
- பரிசுத்த ஆவியானவரின் வரங்களைக் கொடுத்திருக்கிறார் (1 கொரிந்தியர் 12)
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும், அதாவது உங்கள் வீடு, குடும்பம், வேலை மற்றும் உங்கள் எல்லா முயற்சிகளிலும் ஆண்டவர் உங்களுக்கு உதாரத்துவமுள்ளவராக இருக்க விரும்புகிறார் (உபாகமம் 28).
ஆண்டவரின் உதாரத்துவ மனப்பான்மையின் மிகவும் வல்லமை வாய்ந்த அம்சம் என்னவென்றால், அவர் இலவசமாகவும் நிபந்தனையின்றியும் உங்களுக்குக் கொடுக்கிறார் என்பதுதான்; உங்களால் அதை சம்பாதிக்க முடியாது.
"என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயது போலாகிறது." (சங்கீதம் 103:2-5)
உங்கள் ஆசீர்வாதங்களை எண்ணிப்பார்ப்பது ஆண்டவரின் உதாரத்துவ குணத்துக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு சிறந்த வழியாகும். என்னோடு கூட இணைந்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்.
இன்றே இதைச் செய்ய நான் உங்களை உற்சாகப்படுத்துகிறேன். நான் பகிர்ந்துகொண்ட பட்டியல் ஒரு சிறு துளி மட்டுந்தான். ஆண்டவர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் விசேஷித்த நன்மைகளை உங்களால் எண்ணிப்பார்க்க முடியுமா? அவைகளை ஒரு பட்டியலிட்டு அவருடைய உதாரத்துவம் வெளிப்படுவதைப் பாருங்கள்!
நீங்கள் ஒரு அதிசயம்.
Cameron Mendes
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த 7 நாள் வாசிப்புத் திட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் எவ்வாறெல்லாம் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும், ஆண்டவரின் வல்லமையின் வெவ்வேறு அம்சத்தைப் பற்றி சிந்தித்து, உங்கள் விசுவாசத்தை மேலும் வளர்த்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-God-is-powerful
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

மேடைகள் vs தூண்கள்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

வனாந்தர அதிசயம்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ஆண்டவருடைய கணக்கு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி
