ஆண்டவர் சர்வவல்லவர்மாதிரி

ஆண்டவர் சர்வவல்லவர்

7 ல் 1 நாள்

நீங்கள் பலவீனமான ஒரு நபராக இருப்பதைப்போல உணர்கிறீர்களா?

"வல்லமைவாய்ந்த" என்ற வார்த்தை மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது, சில நேரங்களில் அது, அதன் அனைத்து அர்த்தத்தையும் அல்லது வல்லமையையும் இழந்துவிட்டதைப்போல நமக்குத் தோன்றும் அளவிற்கு அவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது 😉. பாடல்கள், மேற்கோள் குறிப்புகள் அல்லது திரைப்படங்கள் போன்றவை பெரும்பாலும் "வல்லமை வாய்ந்தவை" என்று குறிப்பிடப்படுகின்றன; அது உண்மையாக இருந்தாலும் கூட, நம் ஆண்டவரை விட வல்லமை வாய்ந்த ஒன்று வேறு எதுவும் இல்லை!

ஆண்டவரின் வல்லமைக்கு பல அம்சங்கள் உண்டு, இந்த வாரம் இதை என்னுடன் சேர்ந்து ஆராய நான் உங்களை அழைக்கிறேன்.

வேதாகமத்தின் முதல் புத்தகத்தில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு காரியத்திலிருந்து நாம் தியானிக்க ஆரம்பிக்கலாம்: அது ஆண்டவருடைய வல்லமை. உண்மையை சொல்லப்போனால், ஆதியாகமம் புத்தகத்தில், ஆண்டவர் தம்மை சர்வவல்லமையுள்ளவர் என்று எவ்வாறு அறிமுகப்படுத்துகிறார் என்பதை நாம் வாசிக்கலாம்.

"ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார்." (ஆதியாகமம் 17:1-2)

தமது வல்லமையைக் காட்டுவதற்கு ஆண்டவருக்குப் பிடித்த வழிகளில் ஒன்று, “குறைபாடுள்ள” மனிதர்களை பெரிய காரியங்களைச் செய்வதற்குப் பயன்படுத்துவதாகும்.

அந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் ஆபிரகாம். அவரது மனைவியாகிய சாராளுக்கு கர்ப்பம் தரிக்க முடியவில்லை, ஆனால் ஆண்டவர் ஆபிரகாமை பல தேசங்களுக்குத் தகப்பனாக்கினார். சர்வவல்லமையுள்ள தேவனால் மட்டுமே இது சாத்தியம்! ஆபிரகாமுக்கு மட்டும் இப்படி நடக்கவில்லை:

நோவா குடித்து வெறித்திருந்தான்.

யோசேப்பு ஒரு அடிமையாக இருந்தான்.

மோசே ஒரு கொலைகாரனும் திக்குவாயனுமாக இருந்தான்.

கிதியோன் பயப்படுகிறவனாக இருந்தான்.

ராகாப் ஒரு வேசியாக இருந்தாள்.

தாவீது ஒரு கொலைகாரனும் விபச்சாரம் பண்ணினவனுமாய் இருந்தான்.

எலியா சாக விரும்பினான்.

ஏசாயா ஆடையின்றி பிரசங்கித்தான்.

யோனா ஆண்டவரிடமிருந்து விலகி ஓடினான்.

ரூத் ஒரு விதவையாக இருந்தாள்.

பேதுரு கிறிஸ்துவை மறுதலித்தான்.

சீஷர்கள் ஜெபம் செய்யும் நேரத்தில் தூங்கினார்கள்.

சகேயு குட்டையான நபராக இருந்தான்.

சவுல் (பவுல்) கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தினான்.

மற்றும் லாசரு மரித்துப்போனவனாய் இருந்தான்!

இவர்கள் அனைவரும் ஆண்டவரால் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டனர். தாம் ஒரு மனிதனல்ல என்பதை வெளிப்படுத்தும்படியாகவும், ஆண்டவர் மகிமைப்படும்படியாகவும், அவருடைய பலம் அவர்களுடைய பலவீனங்களில் பெலன் தந்தது.

“எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்." (1 கொரிந்தியர் 1:26-27,29)

ஆண்டவரால் அவர்களைப் பயன்படுத்த முடியுமானால், உங்களையும் பயன்படுத்த முடியும்!

உங்கள் மூலம் தம்மை மகிமைப்படுத்த விரும்பும் ஆண்டவரின் வல்லமையைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கு ஆயத்தமாகுங்கள். ஆபிரகாமைப் போலவே, வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பாருங்கள், ஆண்டவரால் கூடாதது எதுவும் இல்லை என்பதை நினைவுகூருங்கள்.

நீங்கள் ஒரு அதிசயம்.

Cameron Mendes

இந்த திட்டத்தின் உரைகள் "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற தினசரி ஊக்க மின்னஞ்சல்களிலிருந்து இங்கே வழங்கப்பட்டுள்ளது. "அனுதினமும் ஒரு அதிசயம்" என்ற ஊக்கமளிக்கும் தினசரி மின்னஞ்சலை இலவசமாக பெறுவதற்கு இங்கே பதிவு செய்யலாம்.

இந்த திட்டத்தைப் பற்றி

ஆண்டவர் சர்வவல்லவர்

இந்த 7 நாள் வாசிப்புத் திட்டத்தில் உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் எவ்வாறெல்லாம் தம்முடைய வல்லமையை வெளிப்படுத்த விரும்புகிறார் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும், ஆண்டவரின் வல்லமையின் வெவ்வேறு அம்சத்தைப் பற்றி சிந்தித்து, உங்கள் விசுவாசத்தை மேலும் வளர்த்துக்கொள்ள இந்த திட்டம் உங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-God-is-powerful