கிறிஸ்துமஸ் கதைமாதிரி

நாங்கள் அவரை தொழுது கொள்வோம்
இயேசுவின் பிறப்பைக் கொண்டாடி மகிழ, கடவுள் இரண்டு விதமான குழுக்களை அழைக்கிறார். இரண்டுமே வியப்பை தருகிறது. இருவரும் கடவுளைப் பற்றி சில செய்திகளை நமக்குச் சொல்கிறார்கள்.
முதலாவது சில உள்ளூர் மேய்ப்பர்களை கடவுள் அழைக்கிறார். அவர்களுக்கு ஒரு தேவ தூதன் தோன்றி நற்செய்தி கூறுகிறார். அதை தொடர்ந்து அந்த மேய்ப்பர்கள் இயேசுவை வணங்கச் செல்கிறார்கள்.
இரண்டாவது அழைப்பு ஒரு உலக குழுவிற்கு செல்கிறது. இயேசுவின் பிறப்பின் போது, பெத்லகேமில் ஒரு நட்சத்திரம் உதயமானது. உலகின் வேறொரு பகுதியைச் சேர்ந்த அக்குழுவினர், அந்த நட்சத்திரத்தைப் பார்த்து, அதைப் பின்தொடர்ந்தனர். அவர்களைப் பற்றி குறிப்புகளோ, அல்லது எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்கிற விவரங்கள் நமக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் இயேசுவைக் கண்டுபிடித்து அவருக்குப் பரிசுகள் அளித்து வணங்கினார்கள்.
இந்த இரண்டு பார்வையாளர்களும் கிறிஸ்மஸ் நிகழ்வின் ஒரு பகுதியாக இருப்பதால், இவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? இயேசுவானவர், இப்படி எல்லா வகையான மக்களையும் ஒன்று சேர்க்கிறார் என்பதை இது காட்டுகிறது.
அந்த மேய்ப்பர்கள், மரியா மற்றும் யோசேப்பைப் போல எளிய மக்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த சாதாரண மனிதர்கள். குறைந்த வருமானம் கொண்ட வேலைகள் செய்து வாழ்பவர்கள்.
ஆனால், வெளி தேசத்திலிருந்து வந்த ஞானிகள் இவர்களிலிருந்து வேறுபட்டவர்கள். அவர்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வித்தியாசமான நம்பிக்கைகளைக் கொண்டிருந்திருக்கலாம். மரியாளுக்கும், யோசேப்புக்கும் இல்லாத செல்வமும், செல்வாக்கும் அவர்களிடம் இருந்ததாகத் தெரிகிறது.
பொதுவாக வேறுபாடுகள் மக்களைப் பிரிக்கும் என்பதை நாம் அறிவோம். நம் தனிப்பட்ட உறவுகளிலும் மற்றவர்களின் வாழ்க்கையிலும் நாம் அதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கிறிஸ்மஸ் நிகழ்வுகள் அனைத்து மக்களுக்கும் இடையில் தொடர்பை உருவாக்குகிறது. கடவுள் தனது குடும்பத்தில் அனைவரையும் சேர்க்க விரும்புகிறார். எனவே, அருகில் உள்ளவர்களையும், தொலைவில் இருப்பவர்களையும் இயேசுவைக் கண்டு மகிழ்ந்து கொண்டாட கடவுள் அழைக்கிறார்.
இயேசுவின் பிறப்பு பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்கிறது. கிறிஸ்மஸ் கதையில் இதை பார்க்கிறோம், ஆனால் இது இயேசுவின் வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நிகழும் மையக் கருத்து. அவர் மிகவும் மாறுபட்ட பின்னணியில் உள்ள மக்களுடன் உறவுகளை உருவாக்கினார். அந்த இணைப்புகள் மூலம், நம்மைப் பிரிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தடைகளை உடைக்க உதவினார்.
கடவுள் ஒரு உலகளாவிய குடும்பத்தைக் கட்டியெழுப்புகிறார் - எனவே "நமக்கு எதிரானவர்கள் அவர்கள்" என்ற மனநிலையை விட்டுவிட அவர் நம்மை வழிநடத்துகிறார். கிறிஸ்மஸில் நாம் கொண்டாடும் விஷயங்களில் இதுவும் ஒன்று: இயேசு நமக்கு பணிவு, இணைப்பு மற்றும் பச்சாதாபம் ஆகியவற்றைக் காட்டுகிறார்.
பிரார்த்தனை: அன்புள்ள கடவுளே, உமது உலகளாவிய குடும்பத்தின் ஒரு அங்கமாக இருக்க என்னை அழைத்ததற்கு நன்றி. என்னிடமிருந்து வேறுபட்டவர்களுடன் எவ்வாறு தொடர்புகளை உருவாக்க முடியும் என்பதை சிந்தித்து செயல்பட எனக்கு உதவும். நான் எவருடன் இணைந்து உம்மை தொழுது கொள்ளவும், உமது உறவில் வளர இயலும் என்பதைக் காண்பியும். இயேசுவின் பெயரில், ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஒவ்வொரு நல்ல கதைக்கும் ஒரு திருப்பம் இருக்கும்— அந்த எதிர்பாராத தருணம் எல்லாவற்றையும் மாற்றும். வேதாகமத்தின் மிகப்பெரிய திருப்பங்களில் ஒன்று கிறிஸ்து பிறப்பு. அடுத்த ஐந்து நாட்களில், இந்த ஒரு நிகழ்வு உலகை எப்படி மாற்றியது மற்றும் இன்று உங்கள் வாழ்க்கையை எப்படி இக்கதை மாற்றும் என்பதை ஆராய்வோம்.
More