திட்ட விவரம்

கிருபையின் கீதம்மாதிரி

கிருபையின் கீதம்

5 ல் 3 நாள்

வாழ்க்கை கஷ்ட்டமாக இருக்கும்போது கடவுள் எங்கே இருக்கிறார்?

என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருந்தால், நீங்கள் தனியாக இல்லை. நானும் அதே கேள்வியை கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு மனிதனுக்கும் அப்படித்தான் இருக்கும். உங்க வாழ்க்கையின் அடித்தளம் சரியும்போது - எல்லாப் பக்கங்களிலிருந்தும் சவால்களை எதிர்கொள்கிறீர்கள் என்று தோன்றும்போது - "கடவுளே நீர் எங்கே இருக்கிறீர்?" என்று கத்துவது நமது இயல்பான உள்ளுணர்வு.

நீங்கள் கேட்கும் மிகப்பெரிய விஷயங்களில் ஒன்று, கொடுக்கப்பட்ட பதில்.

ரோமர் 8:38-39 சொல்கிறது,

"மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்."

சரி, இந்த வசனத்தின் அடிப்படையில், வாழ்க்கை கஷ்டமாக இருக்கும்போது கடவுள் எங்கே இருக்கிறார்? உங்கள் நண்பர்கள் உங்களை விட்டு போகும்போது அவர் எங்கே இருக்கிறார்? அல்லது உங்கள் குடும்பம் பிரிந்து போகும் போது? அல்லது உங்கள் கனவுகள் நொறுங்கும் போது?

உங்கள் வேதனையில் தேவன் உங்களோடு கூட இருக்கிறார் - எல்லாவற்றிலும் உங்களை நேசிக்கிறார் என்று வேதம் சொல்கிறது.

"இது அற்புதம்... ஆனால் ஏன் அவர் என் வேதனையைப் போக்கவில்லை?"என்று இப்போது, ஒருவேளை நினைத்துக்கொண்டிருக்கலாம்.

அருமையான கேள்வி. இதுவும் நிறைய பேர் கேட்ட இன்னொரு விஷயம். மேற்கண்ட வசனத்தை எழுதிய அப்போஸ்தலனாகிய பவுலைப் போலவே.

பவுல் அநேக வேளையில் பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்நாளில் அனுபவிப்பதைவிட அதிகமான மன வேதனையையும் கஷ்டத்தையும் அனுபவித்தார். தாக்கப்பட்டார், அவமதிக்கப்பட்டார், கப்பல் உடைந்து, சிறையில் அடைக்கப்பட்டார். மரணத்தில் சிநேகிதர்களை இழந்தார், தனிமையை எதிர்கொண்டார், மனசோர்வோடு போராடினார். கடைசியில், பவுல் இயேசுவைப் பின்பற்றியதால் கொல்லவும்பட்டார்.

ஒரு கட்டத்தில் பவுல் தன்னுடைய கஷ்டகாலத்தை கடந்து கொண்டிருந்தார். அது என்னவென்று தெரியாது, ஆனால் அவர் அதை தனது மாம்சத்தில் ஒரு முள் என்று விவரிக்கிறார். ஒருவேளை அது வியாதியாகவோ, மனநோயாகவோ அல்லது நாள்பட்ட வலியாகவோ இருக்கலாம். அது எதுவாக இருந்தாலும், அவரால் அதை அசைக்க முடியவில்லை, அதை எடுத்து போடும்படி தேவனிடம் கெஞ்சினார்.

தேவன் இப்படி பதில் கொடுத்தார்…

"அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார்." (2 கொரிந்தியர் 12:9)

இதற்கு என்ன அர்த்தம், கடவுளே? பவுலின் கஷ்டங்களை அவர் போக்கவில்லையா?

நிச்சயமாக அவர் போக்கினார். உங்கள் வாழ்வில் உண்டாகும் வேதனையை குறித்து அவர் கவலைப்படுவது போல. ஏசாயா 53:3 சொல்வது போல், இயேசு "வேதனையை நன்கு அறிந்தவர்" என்பதை மறந்துவிடாதீர்கள். அவருக்கு நம் வேதனை தெரியும். அவர் நம்மைப் புரிந்துகொண்டவர். அவர் உங்களை நேசிக்கிறார்.

இந்த உலகத்திற்கும், உங்களுக்கும், எனக்கும் மிகவும் அவசியமானது - சூழ்நிலைகளில் மாற்றம் அல்ல, மாறாக உள்ளத்தின் மாற்றம்.

இயேசு உங்கள் வாழ்க்கையில் வரும்போது இதைத்தான் செய்கிறார். அவர் உங்களை காயத்திலிருந்து மீட்பதற்குப் பதிலாக அதன் ஊடாக உங்களை கொண்டு செல்லும்போது, அதுவே உங்கள் வாழ்க்கையில் அவர் காட்டும் நம்பிக்கையாக இருக்கிறது.

"இதன் மூலம் நான் உன்னைப் பார்க்கப் போகிறேன். இதன் மூலம் உன்னை வடிவமைக்கப் போகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக எனக்கு தேவைப்படும் உலகத்திற்கு என் கிருபையை காட்ட நான் உன்னைப் பயன்படுத்துவேன் என்று அவர் சொல்கிறார்.

ஆகவே இன்று நீங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், மனவேதனைகள் அல்லது காயங்கள் எதுவாக இருந்தாலும், அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தில் சமாதானத்தை காண்பீர்கள், இயேசுவின் அன்பிலிருந்து எதுவும் உங்களைப் பிரிக்காது, உங்களுக்குத் தேவையானது அவருடைய கிருபைதான். ஆகவே நம்பிக்கையுடன் பாட முடியும்....

பேராபத்து, பயங்கரம்

கடந்து வந்தேன் நான்

கிருபை என்னை நடத்திற்று

தொடர்ந்து நடத்தும்.

வாழ்த்துக்கள்,

- நிக் ஹால்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

கிருபையின் கீதம்

இந்த கிருபையின் பக்தி கீதத்தின் மூலம் கடவுள் உங்கள் மீதான அன்பின் ஆழத்தைக் கண்டறியவும். சுவிசேஷகர் நிக் ஹால், உங்கள் மீது பாடப்பட்ட கடவுளின் கிருபையின் கீதத்தில் சேர உங்களை அழைக்கும் சக்திவாய்ந்த 5 நாள் பக்தி மூலம் உங்கள...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக PULSE Outreachக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://anthemofgrace.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்