திட்ட விவரம்

கிருபையின் கீதம்மாதிரி

கிருபையின் கீதம்

5 ல் 1 நாள்

"யாராவது என்னை நேசிக்க முடியுமா?"

நீங்க எப்போதாவது இப்படி நினைத்திருக்கிறீங்களா? நான் நினைத்திருக்கிறேன்.

சின்ன வயசிலிருந்தே, எனக்கு அநேக குறைகள் உண்டு. நான் இன்னமும் அப்படித்தான். வாலிப வயதில், நிறைய குற்ற உணர்ச்சியையும் அவமானத்தையும் சுமந்தேன். "தேவன் உன்னை நேசிக்கிறார்" "உங்க வாழ்க்கைக்கு அவர் நல்ல நோக்கங்களை வைத்திருக்கிறார்" என்று இப்படி அநேகர் என்னிடம் சொல்வார்கள். உங்களை நீங்கள் ரொம்பவும் தகுதியில்லாதவனாக... ரொம்பவும் அன்பற்றவனாக உணரும்போது இதுபோன்ற ஒன்றை ஏற்றுக்கொள்வது கஷ்டம்.

அதனால்தான் "பேராச்சரியம் மீண்டேன் நான்" பாடலின் கதை எனக்கு மிகவும் பிடிக்கும்.

பேராச்சரியம் மீண்டேன் நான்

என்னென்று சொல்லுவேன்!

பாவி என்னை மீட்டீர் கிறிஸ்து

செத்த நான் பிழைத்தேன்.

நீங்க ஆலயத்திற்கு போனாலும் போகாவிட்டாலும், இந்தப் பாடல் உஙக்ளுக்கு தெரிந்திருக்கும். வரலாற்றில் அதிகம் பதிவுசெய்யப்பட்ட பாடல்களில் ஒன்றாக, எல்விஸ், அரேதா பிராங்க்ளின் மற்றும் போனோ ஆகியோரால்"பேராச்சரியம் மீண்டேன் நான்" பாடல் பதிக்கப்பட்டு இருக்கு. இது நெல்சன் மண்டேலா தலைமைப் பொறுப்பை ஏற்றபோது பாடப்பட்ட பாடல் மற்றும் சிம்ப்சன்ஸ் நிகழ்ச்சியில் கூட இடம்பெற்றது!

ஆனால் "பேராச்சரியம் மீண்டேன் நான்" பதினெட்டாம் நூற்றாண்டின் அடிமை கப்பல் கேப்டன் ஜான் நியூட்டனால் எழுதப்பட்டதுங்கிறது உங்களுக்குத் தெரியாது.

மாறாக, நம்மில் பலரை ஒப்பிட்டுப் பார்த்தால் நியூட்டனின் நற்பெயருக்கு அடுத்தபடியாக களங்கமற்றவர்களாக இருப்போம். தவறு செய்துவிட்டேன் என்று நீங்க நினைக்கிறீங்களா? அல்லது அசுத்தமாக இருப்பதாக நினைக்கிறீங்களா? நியூட்டனின் கைகள் லாபத்திற்காக மனித உயிர்களை விற்ற குற்றத்தை சுமந்திருந்தது.

அப்படியும் தேவன் தன்னை எவ்வளவாய் நேசித்தார் என்பதைக் கொண்டாட ஒரு பாடலை இவரால் எப்படி எழுத முடிந்தது?

பதில்: கிருபை.

இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி, நீங்களும் நானும் தேவனால் நேசிக்கப்படுவதற்கு போதுமான அளவு நம்மை பரிசுத்தம் பண்ணி கொள்ள முடியும் என்பதல்ல. மாறாக நம்மை குறித்து மோசமான விஷயங்களை அறிந்திருந்தாலும், தேவன் நம் பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க அன்போடு நாடி வருகிறார்என்பதுதான்.

ரோமர் 5:8 இப்படி சொல்கிறது, “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.

ஜான் நியூட்டன் தேவகிருபையை அவமதித்து கிண்டல் செய்து பல ஆண்டுகள் கழித்திருக்கிறார். தேவஅன்பை குறித்து நான் கேள்விப்பட்ட அதே விஷயங்களை அவரும் கேள்விப்பட்டிருந்தார். ஒருவேளை நீங்கள் கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அவரால் அதை நம்ப முடியவில்லை... நம்ப மறுத்துவிட்டார்.

ஒருநாள் இரவு ஒரு பயங்கரமான புயலில் தனது அடிமைக் கப்பலில் போகும்போது, அவர் இரக்கத்திற்காக தேவனிடம் கெஞ்சினார். அவரது கப்பல் பாதுகாப்பாக வந்தடைந்தபோது, ​​முடிவில் அவர் இயேசுவில் நம்பிக்கை வைத்து, முன்பு அநேக நாட்களாக மறுத்த கிருபையை ஏற்றுக்கொண்டார்.

பிறகு கிரேட் பிரிட்டனில் அடிமை வர்த்தகத்தை முடிவுக்கு கொண்டுவர நியூட்டன் பங்கு வகித்தார். பிறகு ஒரு போதகர் ஆனார், ஏழைகள் மீது அக்கறை கொண்டவராக, பல்வேறு பின்னணியில் இருந்து மக்களை ஒன்றிணைக்கும் ஒரு போதகராக தன்னை ஒரு நற்பெயரோடு நிலைநிறுத்திக் கொண்டார்.

தேவ கிருபை நியூட்டனை இரட்சித்தது மட்டுமல்லாமல், அவரை முற்றிலும் மாற்றியது.

ஆனால் நியூட்டன் தேவனுடனான ஐக்கியத்தில் எவ்வளவோ வளர்ந்தாலும், அதற்கெல்லாம் கிருபையே காரணம் என்பதை அவர் மறக்கவில்லை. பாவம் நியாயந்தீர்க்கப்பட வேண்டியதுதான். நம்முடையபாவங்களும் அப்படித்தான். ஆனால் சிலுவையில் நம்முடைய இடத்தை தானாக மனமுவந்து ஏற்றுக்கொண்ட இயேசுவின் மீது அந்த நியாயத்தீர்ப்பைக் கொட்டுவதற்கு தேவஅன்பு அவரை வழிநடத்தியது. அதுதான் அற்புதமான கிருபை.

வாழ்க்கையின் பிற்காலத்தில் நியூட்டன் சொன்னது ...

"எனக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகமிருக்கு: ஒன்று நான் ஒரு பெரிய பாவி - இரண்டு கிறிஸ்து ஒரு பெரிய இரட்சகர்!"

அப்படியானால், செய்தக் குற்றமும் அவமானமும் என்ன? செய்த தவறுகள்தான் என்ன? நீங்கள் செய்த அல்லது பாவத்திலிருந்து மனந்திரும்பின விஷயங்கள் என்ன? நேசிக்க முடியாதவனாக உங்களை பார்கிறீங்களா? தேவ கிருபை உங்கள் பாவத்தை மறைக்க போதுமானதா?

இன்றே நியூட்டனிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம், தேவஅன்பு நம் மதிப்பைச் சார்ந்தது அல்ல, என்னைப் போன்ற ஒரு கேடுகெட்டவனை இரட்சிக்க அவருடைய கிருபை அதிகம்.

வாழ்த்துக்கள்,

-நிக் ஹால்

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

கிருபையின் கீதம்

இந்த கிருபையின் பக்தி கீதத்தின் மூலம் கடவுள் உங்கள் மீதான அன்பின் ஆழத்தைக் கண்டறியவும். சுவிசேஷகர் நிக் ஹால், உங்கள் மீது பாடப்பட்ட கடவுளின் கிருபையின் கீதத்தில் சேர உங்களை அழைக்கும் சக்திவாய்ந்த 5 நாள் பக்தி மூலம் உங்கள...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக PULSE Outreachக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://anthemofgrace.com/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்