திட்ட விவரம்

மீட்பைத் தெரிவு செய்யுங்கள் மாதிரி

மீட்பைத் தெரிவு செய்யுங்கள்

5 ல் 5 நாள்

நாம் ஏன் மீட்பை ஊக்கமாக வாஞ்சிக்க வேண்டும் – இயேசு வாக்குப்பண்ணின பரிபூரண வாழ்வை அனுபவிப்பதற்காக

யோவான் 10ம் அதிகாரத்தில், இயேசு தம்மை “நல்ல மேய்ப்பன்” என்றும்,தம்முடைய ஆடுகளாகிய நமக்காகத் தம் ஜீவனைக் கொடுப்பதாகவும் கூறுகிறார். அதோடு,தம்முடைய ஆடுகள் தம் சத்தத்தைக் கேட்டுத் தம்மைப் பின்தொடரும் என்றும் சொல்கிறார். பின்னர்,தமக்கும்,திருடனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை முன்வைக்கிறார். நமக்குத் தெரிந்தபடி,திருடன் திருடவும்,கொல்லவும்,அழிக்கவுமேயன்றி வேறொன்றுக்கும் வரான்;கிறிஸ்துவோ பரிபூரண ஜீவனைக் கொடுக்க வருகிறார்.

மீட்கப்பட்ட ஒரு கிறிஸ்தவர் எழுச்சியுடன் இருப்பார் என்பதால் சத்துரு எல்லா வழிகளிலும் மீட்பைத் தடுக்கப்பார்ப்பான்!

சாத்தான் உணர்வுபூர்வமான ஆரோக்கியம் உங்களுக்கு அவசியமில்லை என்று உங்களை ஒப்புக்கொள்ள வைப்பான். உங்களை விட அதிகமான பிரச்சனைகள் உள்ளவர்கள் உண்டு என்று சொல்லி,உங்கள் பிரச்சனை ஒன்றுமேயில்லை என்று நம்ப வைத்து,அமைதியாக இருந்துவிடும்படி உங்களை உற்சாகப்படுத்துவான். நீடித்து நிலைக்கும் மகிழ்ச்சியை நீங்கள் இழக்கும் விதத்தில் குறுகிய-கால மகிழ்ச்சியைக் கொடுத்து உங்கள் கண்ணை மறைப்பான்.

பரிபூரண ஜீவனால் நம்முடைய ஆத்துமா வாழும் – அதனால், எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்,எல்லா வேதனைகளும் நீங்கிவிடும் அல்லது பிரச்சனையே இருக்காது என்று அர்த்தமல்ல. மாறாக,அந்த வாழ்க்கையில் நம் உள்ளான மனிதன் தேவ ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டும்,மீட்கப்பட்டும் இருக்கும்,அதனால் மரண இருளின் பள்ளத்தாக்காக இருந்தாலும்,சத்துருவின் பலத்த தாக்குதலாக இருந்தாலும் நம்மால் சமாளிக்க முடியும்.

எல்லாம் உங்கள் கையில்தான் இருக்கிறது.

உங்களுக்கு பரிபூரண ஜீவன் தேவை என்றால்,உங்களை உள்ளிருந்து புறமாக மீட்கும்படி தேவனுக்கு இடமளிக்க வேண்டும். சத்துரு உங்கள் பரிபூரணத்தை திருடவும்,உங்கள் சந்தோஷத்தைக் கொல்லவும்,உங்கள் சமாதானத்தை அழிக்கவுமே நாடுவான். நல்ல மேய்ப்பராகிய இயேசுகிறிஸ்துவோ அவையனைத்தையும் மீட்பதோடு,அதைவிட மேலானவற்றைச் செய்ய தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வார்.

சிந்தனைக்கு:

உங்களுக்கென்று வைக்கப்பட்டிருக்கும் பரிபூரண வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கிறீர்களா?மகிழவிடாமல் உங்களைத் தடுப்பது எது?

ஜெபிக்க:

கிறிஸ்துவுக்குள் உங்களுக்கு பரிபூரண ஜீவன் உண்டு என்று விசுவாசித்து ஜெபியுங்கள். உங்களிடமிருந்து சத்துரு திருடிக் கொண்ட வருடங்களை மீட்டுக்கொடுக்குமாறு தேவனிடம் கேளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

மீட்பைத் தெரிவு செய்யுங்கள்

இயேசுவைப் போல மாறும்படிக்கு நாம் அனுதினம் புதிதாக்கப்படுவதிலும், மறுரூபமடைவதிலும் தேவனுடைய ஆவியானவர் ஈடுபாடு கொண்டிருக்கிறார். இந்தப் புதிதாக்கும் செயலின் அங்கமாகிய மீட்பு என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியா...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்