திட்ட விவரம்

மீட்பைத் தெரிவு செய்யுங்கள் மாதிரி

மீட்பைத் தெரிவு செய்யுங்கள்

5 ல் 3 நாள்

மீட்பு என்பது தேவனுடைய செய்கை – இருப்பினும் நாம் அதில் முனைப்புடன் பங்கேற்க வேண்டும்

பல நேரங்களில் நம் வாழ்க்கையில் மீட்பின் கிரியையை நாம்தான் தொடங்கி நடத்த வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறோம். இந்த உலகம் சுய-பராமரிப்புக்கும்,சுகத்திற்கும் சகல விதமான சிகிச்சைகளையும்,முறைகளையும் வழங்குகிறது,ஆனால் துரதிஷ்டவசமாக அவை நீடித்து நிலைப்பதில்லை. தேவனே நம்மை மீட்பவர்,அவர் நம்மை மீட்கும்போது நம் வாழ்க்கை எண்ணற்ற வழிகளில் சிறப்பானதாக மாறுகிறது. இருப்பினும்,தேவன் நம்மை மீட்பதற்கு நம் பங்கையும் உண்மையாகச் செய்ய வேண்டும். அதற்கு செய்ய வேண்டிய மூன்று காரியங்கள் பின்வருமாறு:

1. இயேசுவே நம் மேய்ப்பர் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்

ஒரு மேய்ப்பன் எந்தப் புல்வெளிகள் தன் மந்தைக்கு சிறந்தது என்பதை அறிந்திருப்பது போல, இயேசு நம்மை மிகுந்த அக்கறையுடனும் மனதுருக்கத்துடனும் நடத்துகிறார். மேய்ப்பன் தன் நம்பிக்கைக்குரிய கோலினாலும்,தடியினாலும் தன் மந்தையை காட்டு மிருகங்களிடமிருந்து பாதுகாக்கிறான். பிசாசு மற்றும் அவனுடைய சக்திகளால் நாம் தாக்கப்படும்போது இயேசுவே நம் பயங்கரமான பாதுகாவலராக இருக்கிறார். நம்முடைய தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப வேறு யாரும் நம்மை உண்மையாக போஷிக்கவோ,எல்லா நேரங்களிலும் நம்மை நடத்தவோ அல்லது ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கவோ முடியாது. இயேசுவே மெய்யான நல் மேய்ப்பராக இருக்கிறார்.

2. பிதாவின் அன்பில் இளைப்பாறுங்கள்

23ம் சங்கீதம் 2ம் வசனத்தை “அவர் தம் அளவற்ற அன்பில் எனக்கு இளைப்பாற ஒரு இடம் தருகிறார்” என்று பாஷன் மொழிபெயர்ப்பு குறிப்பிடுகிறது.

நாம் தேவனுடைய அன்பில் இளைப்பாறுவது இன்றியமையாதது,ஏனென்றால் சிலநேரங்களில் வாழ்க்கை உங்கள் பயணத்தில் புயல் வீசச் செய்யலாம் அல்லது உங்களைத் தரையில் விழத் தள்ளலாம். நல்ல தேவன் உங்கள் மீது கொண்டிருக்கும் அன்பு மட்டும் உங்கள் நினைவுக்கு வரவில்லை என்றால்,நீங்கள் விரக்தியில் அல்லது ஏமாற்றத்தில் விழுந்து கிடக்கக் காண்பீர்கள்.

3. பரிசுத்த ஆவியானவரின் தொடர்ச்சியான அபிஷேகத்தை அனுபவியுங்கள்

பாஷன் மொழிபெயர்ப்பு 5ம் வசனத்தை “என் எதிரிகள் என்னை எதிர்க்கத் துணிந்தாலும்,நீரே என் அறுசுவை விருந்தாகிறீர். உம்முடைய பரிசுத்த ஆவியின் சுகந்த வாசனையினால் என்னை அபிஷேகிக்கிறீர்;என் பாத்திரம் நிரம்பி வழியும்வரை என்னால் பருக முடிந்த அனைத்தையும் எனக்கு அருளுகிறீர்” என்று மொழிபெயர்க்கிறது.

பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டால் ஒழிய தனிப்பட்ட மீட்பை நம்மால் அனுபவிக்க முடியாது. சுகம் தேவை என்று நீங்கள் அறியாத ஆழமான வழிகளில் அவர் உங்களை சுகமாக்குவார். நீங்கள் செல்லுமிடமெங்கும் கிறிஸ்துவின் வாசனையை வீசும்படிச் செய்வார்,அதனால் இனி நீங்கள் தோல்வி, நோக்கமின்மை,நிராகரிப்பு அல்லது கசப்பு என்னும் நாற்றத்தை வீசிக் கொண்டிருக்கமாட்டீர்கள்!

சிந்தனைக்கு:

உங்கள் மீட்புக்கும்,வழிநடத்தலுக்கும்,பிழைப்புக்கும் யாரை நோக்கிப் பார்க்கிறீர்கள்?அவர்களால் உங்கள் தேவைகளை நிறைவேற்ற முடிந்ததா?

ஜெபிக்க:

இயேசு உங்கள் நல்ல மேய்ப்பராக இருக்கும்படி கேளுங்கள்,பிதா உங்கள் மீது கொண்டிருக்கும் அன்பில் இளைப்பாற உங்களை விட்டுக்கொடுங்கள் மற்றும் பரிசுத்த ஆவியானவர் உங்களைப் புதிதாக அபிஷேகிக்கும்படி அவரை அழையுங்கள்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

மீட்பைத் தெரிவு செய்யுங்கள்

இயேசுவைப் போல மாறும்படிக்கு நாம் அனுதினம் புதிதாக்கப்படுவதிலும், மறுரூபமடைவதிலும் தேவனுடைய ஆவியானவர் ஈடுபாடு கொண்டிருக்கிறார். இந்தப் புதிதாக்கும் செயலின் அங்கமாகிய மீட்பு என்பது கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியா...

More

இந்தத் திட்டத்தை வழங்கியதற்காக Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/christinegershom

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்