திட்ட விவரம்

நேசம்மாதிரி

நேசம்

5 ல் 3 நாள்

உமது நாமம்

உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள். உன்னதப்பாட்டு 1:3
உமது நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம். உமது நாமத்தை சொல்லும்போதே மனதெல்லாம் இனிக்கிறது.உமது நாமத்தைத் தியானித்துக் கொண்டேஇருந்தால் இந்த உலகம் எல்லாம் மறந்து விடுகிறது.உமது நாமத்தின் வாசனைமிகவும் மனதுக்கு மகிழ்ச்சியைதருகிறது.

இயேசு என்ற இந்த நாமம் என்னுடைய இரத்தத்திலே கலந்து விட்டது.இயேசு என்னும் நாமம் என்னுடைய தசையிலே,சதைகளிலே கலந்து விட்டது.இயேசு என்னும் நாமம் என்னுடைய இருதயத்திலே சிங்காசனம் போட்டு அமர்ந்துவிட்டது. என் இருதயத்தை களிகூரபண்ணுகிறது.

இயேசு என்னும் நாமம் என்னுடைய எலும்புகளை புஷ்டியும் பசுமையாக மாற்றிவிட்டது. இயேசு என்னும் நாமம் என் சிந்தனைகளை கவர்ந்து விட்டது.இயேசு என்னும் நாமம் என் நினைவுகளை ஆக்ரமித்து விட்டது.என் நாவு உமது துதியையும், நீதியையும் சொல்லிக் கொண்டிருக்கும்.என் உதடுகள் இயேசு, இயேசுஎன்று உம் துதி பாடிக் கொண்டே இருக்கும். இயேசு என்னும் நாமம் என் வாழ்க்கையில உள்ள பாவ பிரசன்னத்தை,பாவத்தின் வல்லமையை, பாவத்தின் கொடூரத்தை முற்றிலுமாக என்னை விட்டு ஓட ஓட விரட்டிவிட்டது. இயேசு என்னும் நாமம்பரிசுத்த பிரசன்னத்தை, பரிசுத்த வல்லமையை, பரிசுத்தத்தின் இனிமையை எனக்குள்ளேநிரந்தரமாக கொண்டு வந்துவிட்டது.ஆகையால் இயேசுவே உம்மை அதிகமாக நேசிக்கிறேன்.

உமக்கே மகிமை!!

ஆமென் ஆமென்!!

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

நேசம்

நம்முடைய ஆத்தும மணவாளனாகிய நேசருடைய நேசத்தைக் குறித்து பார்க்கிறோம். கர்த்தருடைய நேசம்,அவருடைய நாமம்,கர்த்தருடைய சத்தம், நம்முடைய ஆத்தும நேசர் மற்ற நேசரைப் பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்தவர் என்று வாசிக்கப்போகிறோம். ...

More

https://indiarevivalministries.org/

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்