திட்ட விவரம்

இருதயத்தின் எதிரிகள்மாதிரி

Enemies Of The Heart

5 ல் 4 நாள்

ஆண்டி ஸ்டான்லி: இருதயத்தின் எதிரிகள்


தியானம் நாள் 4


பேராசையை குறித்த எச்சரிக்கை.


வேதப்பகுதி: லூக்கா 12:13-21


இருதயத்தின் மூன்றாம் எதிரி பேராசை. என் தகுதிக்கு எனக்கு மேன்மேலும் செல்வமும் பொருட்களும் சேரவேண்டும் என்ற எண்ணமே பேராசை. பேராசை "நான் எனக்கே கடன்பட்டிருக்கிறேன்" என்று சொல்கிறது.


இயேசு கிறிஸ்து "பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" என்று கூறினார். ஏன்? ஏனெனில் நாம் பார்க்கும் நான்கு எதிரிகளில் பேராசையே மிக நுட்பமானது. நாம் அறியாமலேயே நம் இருதயத்தில் பேராசை பல வருடங்களாகக் குடிகொண்டிருக்கலாம். பாதுகாக்கப்படாத இருதயமே இந்த பலவீனப்படுத்தும் நோயால் எளிதில் பாதிக்கப்படத்தக்கதாய் இருக்கிறது. இதைக் கண்டறிவது கடினம், நம்மை நாமே பரிசோதித்துக் கண்டறிவது மேலும் கடினம்.


இயேசு கிறிஸ்து பேராசை உண்டாகும் பொய்யைக் கண்டறிந்து உணர்த்தினார் "ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல" என்றார். ஆனால் நம் அனைவர்க்கும் அது தெரியாதா என்ன? மனிதர்கள் தங்கள் ஜீவனின் மதிப்பு தங்கள் ஆஸ்தியைப் பொறுத்தது என்றா நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? அதற்கு நாம் ஆம் என்றும் பதில் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். இல்லை அனைவருக்கும் இந்த உண்மை தெரிவதில்லை. ஆம் பலரும் தங்கள் ஜீவனின் மதிப்பு தாங்கள் வைத்துள்ள பொருட்களின் கூட்டுத்தொகை என்றே நம்புகிறார்கள். நாம் எதிர்பார்ப்பதை விட மிக அதிகமானோர் இந்த எண்ணத்திலேயே வாழ்கிறார்கள்.


ஒரு உவமையைக் கூறிய பிறகு இயேசு கிறிஸ்து பேராசை கொண்ட மனிதனை இப்படி விளக்குகிறார் "தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன்." "தேவனிடத்தில் ஐசுவரியவான்" என்றால் இயேசு கிறிஸ்துவின் பாஷையில் தேவையில் இருப்பவர்களுக்குத் தாராளமாய் கொடுப்பவன் என்று பொருள். பேராசை கொண்ட மனிதனோ துரிதமாய் சேமித்து மிகக் குறைவாய் கொடுக்கிறவன்.


தாராளமாய் கொடுத்தல் பேராசையின் பிடியைத் தகர்த்தெறியக் கூடியதாயிருக்கிறது. எனவே உங்களிடம் கூடுதலாக இருக்கிறது என்று நீங்கள் கருதினாலும் கருதாவிட்டாலும் தாராளமாய் கொடுங்கள். உங்கள் வாழ்க்கை முறை மாறும் சூழ்நிலை வரும் வரை நீங்கள் தாராளமாகக் கொடுக்கவேண்டும். அந்த அளவிற்குக் கொடுக்க நீங்கள் மனதில்லாமல் இருந்தால் இயேசு கிறிஸ்துவைப் பொறுத்தவரை நீங்கள் பேராசை கொண்டவரே. பிறர்க்குக் கொடுக்க எதுவும் இல்லாத அளவு நீங்கப் பயன்படுத்தியும் சேமித்தும் வைப்பீர்களானால் நீங்கள் பேராசை கொண்டவரே.


இது சற்று கடினமான காரியம் என்று எனக்குத் தெரிகிறது.


ஆனால் இது உண்மையே.


பேராசையின் வலிமையைத் தாராளமாய் கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டு தகர்த்தெறிவோம். ஒரு பழக்கமே அனைத்தையும் மாற்றக் கூடியது.


கடந்த பன்னிரண்டு மாதங்களாக நீங்கள் கொடுத்தவற்றில் உங்கள் தாராளத்துவத்தின் அளவை மதிப்பிடுங்கள். நீங்கள் உதாரத்துவமாகச் செய்த உதவிகள் உங்கள் இருதயத்தைக் குறித்து என்ன சொல்கின்றன? தாராளமாகக் கொடுத்தலில் ஒரு புதிய அளவை வரும் பன்னிரண்டு மாதங்களில் நீங்கள் அடைய ஜெபம் பண்ணுங்கள்.


வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Enemies Of The Heart

எப்படி ஒரு ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களுடைய சரீரத்தைப் பாதிக்க முடியுமோ, அப்படியே உணர்வு மற்றும் ஆவிக்குரிய ரீதியாக ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களையும், உங்கள் உறவுகளையும் பாதிக்க முடியும். அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு...

More

ஆண்டி ஸ்டான்லி மற்றும் மல்ட்னோமா அவர்களுக்கு இத்திட்டத்தினை வழங்கியமைக்காக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய bit.ly/2gNB92i க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்