திட்ட விவரம்

இருதயத்தின் எதிரிகள்மாதிரி

Enemies Of The Heart

5 ல் 2 நாள்

ஆண்டி ஸ்டான்லி: இருதயத்தின் எதிரிகள்


தியானம் நாள் 2


அறிக்கையிடுதல்


வேதப்பகுதி: 1 யோவான் 1:5-10


இருதயத்தின் முதல் எதிரி குற்றஉணர்ச்சி. குற்றவுணர்ச்சி என்பது நாம் தவறு என்று கருதும் ஒரு செயலை செய்ததின் விளைவு. குற்றவுணர்ச்சியால் உந்தப்பட்ட இருதயம், "நான் கடன்பட்டிருக்கிறேன்" என்ற சுமையை ஏந்திக்கொண்டே இருக்கும்


உதாரணமாக தன் மனைவியையும் குழந்தையையும் விட்டுச் சென்ற ஒரு மனிதனை எடுத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் அவனை அறியாமலே அவன் அந்த குடும்பத்தின் ஒவ்வொரு நபரிடமுமிருந்து ஏதோ ஒன்றைத் திருடிச் செல்கிறான். தன் மனைவியிடமிருந்து அவள் எதிர்காலத்தையும், அவள் பொருளாதார பாதுகாப்பையும், சமுதாயத்தில் அவளுக்கு இருக்கும் மதிப்பையும் திருடிச் செல்கிறான். தன் குழந்தைகளிடமிருந்து அவர்களது பண்டிகை நாட்களையும், உணர்ச்சிப்பூர்வமான பாதுகாப்பையும், பொருளாதார பாதுகாப்பையும், குடும்பமாய் அமர்ந்து உண்ணும் உணவு வேலைகளையும் திருடிச் செல்கிறான்.


தொடக்கத்தில் அந்த மனிதனின் இருதயம் அவன் எதையெல்லாம் மற்றவரிடம் இருந்து பறித்துக்கொண்டான் என்று யோசிப்பதில்லை, அவன் எதையெல்லாம் பெற்றுக்கொண்டான் என்றே யோசிப்பதாயிருக்கிறது. ஆனால் ஒரு நாள் அவன் குழந்தை "நீங்கள் ஏன் என் அம்மாவை நேசிக்கவில்லை" என்று கேட்கும்போது அவன் இருதயம் கலங்கும். அப்போது குற்றவுணர்ச்சி அவனை மேற்கொள்ளும். அவன் கடன்பட்டவனாகிறான்.


அந்த கடனை முழுவதுமாக கொடுத்துத் தீரும் மட்டும் கடன்பட்ட அவன் இருதயத்திற்கு வேறொன்றும் ஆறுதல் அளிப்பதில்லை. பலர் குற்றவுணர்ச்சியை வேலை செய்தோ, சேவை செய்தோ, பொருள் கொடுத்தோ ஏன் ஜெபம் செய்தோ மேற்கொண்டுவிடலாம் என்று எண்ணுவார்கள். ஆனால் அநேக நல்ல காரியங்களும், பொதுச் சேவைகளும், தாராளமாய் கொடுத்தலும், ஞாயிறு ஆராதனைகளும் அதை மேற்கொள்வதில்லை. அது ஒரு கடன். குற்றவுணர்ச்சியால் சுமைப்பட்ட இருதயத்திற்கு அதை முழுவதுமாக கொடுத்தாலோ அல்லது அதை ரத்துசெய்தலோ தான் ஆறுதல் கிடைக்கும்.


குற்றவுணர்ச்சியை எப்படி ரத்து செய்வது? அதற்கான விடை நான் என் சிறுவயதிலே மனப்பாடம் செய்த முதல் வசனத்தில் இருக்கிறது: 1 யோவான் 1:9. " நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்."


அறிக்கையிடுதல், பாவத்தின் சுழற்சியை முறித்துப்போடும் வல்லமைகொண்டது. பல மருந்துகள் போலச் சரியான முறையில் பயன்படுத்தினால் அது சரியாக வேலை செய்யும். சரியான முறை எதுவென்றால் நம் பாவத்தைத் தேவனிடம் மட்டும் அறிக்கையிடாமல் நாம் யாருக்கு எதிராகப் பாவம் செய்தோமோ அவர்களிடமும் அறிக்கையிடுவதே


குற்றவுணர்ச்சியுடைய பலர் அவர்கள் செய்த அதே தவறை மீண்டும் மீண்டும் செய்கிறவர்களாய் இருக்கிறார்கள். ஒரு ரகசியத்தை நம் இருதயத்தில் சுமந்துகொண்டு, தேவனிடம் மட்டும் சென்று நாம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இருப்போமானால் நாம் திரும்ப அதே தவறைச் செய்ய வழிவகுத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் தவறிழைத்தவரிடம் பாவத்தை அறிக்கையிடத் தொடங்கினோமென்றால் ஒருவேளை நாம் அதே தவறைத் திரும்ப சென்று செய்யாமல் இருப்போம்.


தேவனிடமும் மற்றவர்களிடமும் அறிக்கை செய்து மன்னிப்பு கோருங்கள் அப்பொழுது இருதயத்தின் இந்த எதிரியை அழித்துப்போடுவீர்கள்.


எதைக் குறித்து குற்றவுணர்வுடன் இருக்கிறீர்கள்? தேவனிடமும் உங்களால் பாதிக்கப்பட்டவரிடத்திலும் உங்கள் பாவத்தை அறிக்கையிடுங்கள். அதை இன்றே செய்யுங்கள்


வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Enemies Of The Heart

எப்படி ஒரு ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களுடைய சரீரத்தைப் பாதிக்க முடியுமோ, அப்படியே உணர்வு மற்றும் ஆவிக்குரிய ரீதியாக ஆரோக்கியமில்லாத இருதயம் உங்களையும், உங்கள் உறவுகளையும் பாதிக்க முடியும். அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு...

More

ஆண்டி ஸ்டான்லி மற்றும் மல்ட்னோமா அவர்களுக்கு இத்திட்டத்தினை வழங்கியமைக்காக எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய bit.ly/2gNB92i க்கு செல்லவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்