ஜெபத்தில் தேவனோடு பேசுதல்மாதிரி

Encouraging a Prayer Habit in Your Kids

4 ல் 3 நாள்

மன்னிப்பை பெற்றுக்கொள்ளுதல்

தேவனோடு பேசுதல்
நீங்கள் மற்றவர்களைப் புண்படுத்தும்படியாகச் செய்த தவறுகளை அமைதியாக அறிக்கை செய்யுங்கள். தேவனிடம் மன்னிப்பு கேளுங்கள். பிறகு மன்னித்ததற்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள்.

உள்ளே மூழ்குதல்
அடுத்த முறை குடும்பமாய் சாப்பிடும் நேரத்தில் ஒவ்வொருவரும் தலையணைகளை (இயர்போனஸ்) அல்லது செவிச்செருகிகளை (இயர்பிளக்ஸ்) அணிந்துகொண்டு, நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று மற்றவர்கள் கேட்பதற்கு ஒருவருக்கொருவர் உதவிசெய்யாமல் வழக்கம்போல் பேசுங்கள். அவற்றை அணிந்துகொண்டே மேசையை குடும்பமாய் சுத்தம்செய்யுங்கள்.

ஆழமாய் செல்லுதல்
மன்னிப்புக்காக தேவனிடம் வராத பட்சத்தில் நாம் அவர் சொல்வதைக் கேட்க மறுக்கிறோம் என கருதப்படும். குடும்பத்தினர் சொல்வதை நன்றாக கேட்க முடியாமல் போனதுபோல தேவனுக்கு செவிகொடுக்காததினால் நாம் தேவனிடத்திலிருந்து நம்மை பிரித்துக் கொள்கிறோம்.
நீங்கள் மன்னிப்பு கேட்கும்போது, தேவன் உங்களை மன்னிக்கிறார். இது நாம் அணிந்திருக்கும் தலையணைகளை அகற்றிவிட்டு அவர் சத்தத்தை நாம் மறுபடியும் கேட்பதற்கு ஒப்பாயிருக்கிறது.

ஒருவரோடு ஒருவர் பேசுதல்
-நீங்கள் செய்த தவறு ஏதாவதை இரகசியமாய் வைத்துள்ளீர்களா? அப்படியானால் இந்த ரகசியத்தை மறைக்க முயலும்போது எப்படி உணர்ந்தீர்கள்?
-தேவனிடம் போவதற்கும், உங்கள் பாவத்தை அறிக்கையிடுவதற்கும் எது தடையாக இருக்கிறது?
-நீங்கள் ஒருவருக்கு செய்த தவறை அவர் மன்னிக்கும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Encouraging a Prayer Habit in Your Kids

குடும்ப வாழ்க்கையின் ஓயாத வேலைகளால் நாம் ஜெபம் செய்வதற்கு நேரம் செலவழிக்காமல், நம் பிள்ளைகளுக்கும் தேவனை தங்கள் நாளின் ஒரு பங்காக சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க நாம் உதவிசெய்ய நினைப்பதில்லை. இந்த திட்டத்தின் மூலம், உங்கள் குடும்பம் தேவன் எவ்வளவாய் உங்கள் கூப்பிடத்தலை கேட்க விரும்புகிறார் என்பதையும், ஜெபமானது தேவனோடு உள்ள உறவையும், நாம் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள உறவையும் எவ்வளவாய் பலப்படுத்துகிறது என்பதையும் காண்பீர்கள். ஒவ்வொரு நாளுக்கும் உரிய திட்டத்தில் ஒரு ஜெப வழிமுறை, சுருக்கமான விளக்கவுரையுடன் கூடிய வேத வாசிப்பு, செய்முறைகள் மற்றும் விவாத கேள்விகள் ஆகியவை அடங்கியுள்ளன.

More

இந்த திட்டத்தை வழங்கும் Focus on the Family-க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.FocusontheFamily.com - க்கு செல்லவும்.