திட்ட விவரம்

முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள்மாதிரி

Make Space for What Matters: 5 Spiritual Habits for Lent

7 ல் 5 நாள்

ஆவிக்குரிய பழக்கங்கள்: நிலையமைதி



நீங்கள் தனியாக ஒரு மலையில் நிற்கிறீர்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். உங்கள் பக்கத்தில் ஒரு நீரோடை ஓடுகிறது பறவைகள் உங்களுக்கு மேலே மகிழ்ச்சியுடன் கீச்சிட்டு கொண்டிருக்கின்றன.. சூரியன் உங்கள் முகத்தில் அடிக்கையில் ஒரு மெல்லிய காற்றும் வீசுகிறது. அனைத்தும் நிசப்தமாகவும் அமைதியாகவும் தெரிகிறது - ஆனால் நீங்கள் செய்யாமல் விட்ட பணிகள், உங்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் மற்றும் உங்களால் சரிசெய்ய முடியாத முறிவுகள் ஆகியவற்றின் பட்டியலை உங்கள் மனம் ஓட்டிக்கொண்டிருக்கிறது. நீங்கள் அமைதியான இடத்தில் இருந்தாலும், உங்கள் சொந்த எண்ணங்களின் சத்தம் உங்களைச் சுற்றி நடப்பதை ரசிக்கவிடாமல் தடுக்கிறது.



இடைநிறுத்தப்பட்டு, சத்தத்தை அடக்கி, அமைதியாக இருக்க உங்களுக்கு என்ன தேவைபடும்?



அமைதியின் மூலம், தேவன் நம்மிலும் நம்மைச் சுற்றியும் என்ன செய்கிறார் என்பதைக் கவனிக்க கற்றுக்கொள்கிறோம். ஆனால் அமைதி ஆற்றுமை மற்றும் செயலற்றதால் ஆகியது. நம் பார்வையை மற்றும் செவிகளை மீண்டும் ஒருமுகப்படுத்த தேவனை அனுமதிப்பது அதே சமயம் நமக்குள் இருக்கும் சத்தத்தை அவருக்கு வழங்குவதும் இதில் அடங்கும். அதே சமயம் நம் கவலைகள், கவலைகள் மற்றும் பிரச்சனைகளை தேவனிடம் ஒப்படைப்பது தேவைப்படுகிறது.



இந்த ஆவிக்குரியப் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்கும்போது, நம் வாழ்வில் தேவன் ஏற்கனவே என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை நாம் கவனிக்கத் தொடங்குவதால், நம் வாழ்வில் தேவனுடைய வல்லமைக்காக மகிமைப்படுத்துவதற்கு நாம் மிகவும் தயாராகிவிடுகிறோம்.



நடவடிக்கை படி:
இந்த வாரம் சில மணிநேரங்கள் விலகி, மனதில் தோன்றும் கவலைகளை தேவனுக்குக் கொடுக்கப் பழகுங்கள். நீங்கள் இதை திரும்ப திரும்ப சிறிது நேரம் செய்ய நேரிட்டாலும் பரவாயில்லை. உங்களுக்குள் இருக்கும் இரைச்சலை அமைதிப்படுத்தவும், தேவனின் குரலைக் கேட்க இடத்தை உருவாக்கவும் இந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள்.


நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Make Space for What Matters: 5 Spiritual Habits for Lent

தவக்காலம்: சிந்தனை மற்றும் மனந்திரும்புதல் இவற்றிக்கான 40 நாட்காலம். இது ஒரு நல்ல சிந்தனை, ஆனால் தவக்காலத்தை கடைபிடிப்பது உண்மையில் எப்படி இருக்கும்? அடுத்த ஏழு நாட்கள் உங்கள் இதயத்தைத் உயிர்த்தெழுதல் ஞாயிறு மற்றும் அதன்...

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்