திட்ட விவரம்

முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள்மாதிரி

Make Space for What Matters: 5 Spiritual Habits for Lent

7 ல் 3 நாள்

ஆவிக்குரிய பழக்கங்கள்: தியானம்



வேலை. பள்ளி. உறவுகள். உடல்நலப் பிரச்சினைகள். பில்கள். உலகளாவிய பெருந்தொற்று. நம் வாழ்வில் பலதும் நடப்பதால், நம் வாழ்வு உண்மையில் எதை பற்றி இருக்க வேண்டும் என்பதில் இருந்து கவனம் சிதறுவது எளிது.



எனவே ஒரு கணம் இடைநிறுத்தி ஆழமாக சுவாசம் எடுங்கள். நீங்கள் மூச்சை வெளியேற்றும்போது, உங்கள் கவனத்திற்கு போட்டியிடும் கவலைகள் அல்லது கவனச்சிதறல்கள் அனைத்தையும் கீழே போடுவதை கற்பனை செய்து பாருங்கள். பின்னர், இந்த வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள்:



தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார், சர்வவல்லமையுள்ளவரின் சுவாசம் எனக்கு உயிர் கொடுக்கிறது.
யோபு 33:4



அந்த வசனத்தை பற்றி ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். மெதுவாக மீண்டும் படித்து ஒவ்வொரு வார்த்தையிலும் கவனம் செலுத்துங்கள்.



அந்த பத்தியை நீங்கள் சிந்திக்கும்போது, இதைக் கவனியுங்கள்: உங்கள் சுவாசம் உங்களை உயிர்ப்பித்தவரால் நிலைநிறுத்தப்படுகிறது. வாழ்க்கை சில சமயங்களில் சமாளிக்க முடியாதவாறு உணரப்பட்டாலும், உங்களைப் படைத்து உங்களைப் பெயர் சொல்லி அழைத்த கடவுளை விட்டு நீங்கள் ஒருபோதும் தொலைவில் இல்லை.



மீண்டும் இடைநிறுத்துங்கள்.



நீங்கள் இப்போது நடந்துகொண்டது வேத தியானத்தின் எளிய உதாரணம். பைபிளில் தியானம் என்பது கடவுளைப் பின்பற்றுபவர்கள் அவருடைய வார்த்தைகளில் கவனம் செலுத்துவதற்கும் பிரதிபலிப்பதற்கும் ஒரு வழியாக பலமுறை குறிப்பிடப்படுகிறது.


தியானம் என்பது நமது சொந்த பலத்தில் செய்யக்கூடிய ஒன்றல்ல. இது தேவனிடம் நெருங்கி வருவதையும், அவருடைய எண்ணங்களையும் வழிகளையும் நமக்குத் தெரியப்படுத்தும்படி அவரிடம் கேட்பதையும் உள்ளடக்குகிறது.


விவிலிய தியானம் நமது சூழ்நிலைகளை பரிசுத்த கண்ணோட்டத்தில் பார்க்க உதவுகிறது, ஏனென்றால் பரிசுத்தமான ஒன்றை நமது நோக்கத்தின் மேல் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கிறோம். வேதாகமத்தை தியானிக்க நாம் நேரத்தை ஒதுக்க தேர்ந்தெடுக்கும் போது நம்மையும் நம் உலகத்தையும் விட்டு நம் கவனத்தை தேவன் மீதும் அவருடைய வார்த்தையின் மீதும் கவனம் திருப்ப, தேர்ந்தெடுக்கின்றோம். தேவன் நம் எண்ணங்களை மாற்றவும், நமது உலகக் கண்ணோட்டத்தை உருமாற்றவும் அனுமதிக்கிறோம்


எனவே நீங்கள் வரவிருக்கும் வாரங்களுக்குத் தயாராகும்போது, ஒவ்வொரு நாளும் தேவன் மற்றும் அவருடைய வார்த்தையின் மீது வேண்டுமென்றே உங்கள் மனதை நிலைநிறுத்த முயற்சிக்கவும்.



நடவடிக்கை எடுங்கள்: தவக்காலத்தில் ஒவ்வொரு நாளின் வசனங்களையும் மனப்பாடம் செய்வதன் மூலம் தேவனின் வார்த்தையை உங்களுக்குள் கொண்டு வாருங்கள். நீங்கள் இதைச் செய்யும்போது, ​​உங்களுக்குத் தனித்து நிற்கும் எந்த வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களுக்கு கவனம் செலுத்துங்கள், மேலும் அந்த வசனத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை தெளிவுபடுத்தும்படி தேவனிடம் கேளுங்கள்.


நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Make Space for What Matters: 5 Spiritual Habits for Lent

தவக்காலம்: சிந்தனை மற்றும் மனந்திரும்புதல் இவற்றிக்கான 40 நாட்காலம். இது ஒரு நல்ல சிந்தனை, ஆனால் தவக்காலத்தை கடைபிடிப்பது உண்மையில் எப்படி இருக்கும்? அடுத்த ஏழு நாட்கள் உங்கள் இதயத்தைத் உயிர்த்தெழுதல் ஞாயிறு மற்றும் அதன்...

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்