திட்ட விவரம்

முக்கியமான விஷயங்களுக்கு இடத்தை உருவாக்குங்கள்: தவக்காலத்திற்கான 5 ஆன்மீகப் பழக்கங்கள்மாதிரி

Make Space for What Matters: 5 Spiritual Habits for Lent

7 ல் 2 நாள்

ஆவிக்குரிய பழக்கங்கள்: ஜெபம்


தேவனுடன் தொடர்ந்து பேசுவதைத் தடுக்கும் ஏதேனும் உள்ளதா?



ஜெபம் என்பது தேவனிடம் பேசுவதும், பிறகு அவருக்கு செவிசாய்ப்பதும் ஆகும். மேலும், “நீங்கள் ஜெபிக்கும்போது…” என்று இயேசு பலமுறை கூறியதால், நாமும் ஜெபிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார் என்பதை நாம் அறிவோம்.



ஜெபம் செய்வதில் வசதியாக இருப்பதற்கு பயிற்சி தேவைப்படலாம், ஆனால் அது அவருடன் நம்பிக்கையுடன் நெருக்கத்தைத் தொடர்வதிலிருந்து உங்களைத் தடுக்க வேண்டியதில்லை.



தேவன் எப்பொழுதும் உங்களிடம் நெருங்கி வரக் காத்திருக்கிறார், நீங்கள் அவரிடம் சொல்லும் எதுவும் அவர் உங்களை நேசிப்பதைத் தடுக்க முடியாது.



ஜெபத்தை தினசரி பழக்கமாக மாற்றுவதற்கு தவக்காலம் ஒரு சிறந்த நேரம். நீங்கள் தேவனைச் சுற்றி உங்கள் வாழ்க்கையை கட்டமைக்க முயற்சித்தாலும், அவருடன் பேச நேரம் ஒதுக்காமல் இருந்தால், உங்கள் வாழ்க்கையை கடவுளின் மீது கவனம் செலுத்துவது சாத்தியமில்லை.



உங்கள் வளர்ச்சியைப் பற்றி நீங்கள் தேவனிடம் நேர்மையாக இருக்கும்போது ஆவிக்குரிய ரீதியில் வளர எளிதானது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றி நீங்கள் தேவனிடம் பேசும்போது, ​​தேவன் உண்மையிலேயே உங்களுடன் இருக்கிறார் என்பதையும், அவர் உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறார் என்பதையும் அது உங்களுக்கு நினைவூட்டத் தொடங்கும். எனவே இன்று, தேவனிடம் நேர்மையாக உரையாட சிறிது நேரம் ஒதுக்குங்கள்.



நடவடிக்கை எடுங்கள்: எதைப் பற்றி ஜெபிப்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், கர்த்தரின் ஜெபத்தின் மூலம் ஜெபித்து, அதை உங்களுடையதாக ஆக்குங்கள்.



பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே,



உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.



உம்முடைய ராஜ்யம் வருவதாக.



உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல,



பூமியிலேயும் செய்யப்படுவதாக.



எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்,



எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல,



எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்



எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல்.



தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும்,



ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே.



மத்தேயு 6:9-13


நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Make Space for What Matters: 5 Spiritual Habits for Lent

தவக்காலம்: சிந்தனை மற்றும் மனந்திரும்புதல் இவற்றிக்கான 40 நாட்காலம். இது ஒரு நல்ல சிந்தனை, ஆனால் தவக்காலத்தை கடைபிடிப்பது உண்மையில் எப்படி இருக்கும்? அடுத்த ஏழு நாட்கள் உங்கள் இதயத்தைத் உயிர்த்தெழுதல் ஞாயிறு மற்றும் அதன்...

More

இந்த வேதாகம திட்டம் YouVersion ஆல் உருவாக்கம் பெற்று வழங்கப்பட்டது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்