திட்ட விவரம்

இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி

Love Like Jesus

13 ல் 9 நாள்

ஒரு சரீரம் பல அங்கங்கள்


நான் நினைக்க அல்லது கேட்க எதிர்பார்க்காத செய்தியை என் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் கேட்டேன் - என் சகோதரர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் எனக்குத் தேவைப்படும் காலங்களில் நான் செல்லக் கூடிய நபர். நல்லது அல்லது கெட்டது எது நடந்தாலும், நான் அழைக்கும் முதல் நபர் அவர்தான்.


அதிர்ஷ்டவசமாக, என் வாழ்க்கையில் என்னை சுற்றி ஒரு சமூகம் இருந்தது. நான் எனது ஜெபக்குழுத் தலைவரை அழைத்தேன், ஒரு மணி நேரத்திற்குள், நான்கு நண்பர்கள் என் அருகில் இருக்கும்படி என் வீட்டுக்கு வந்தார்கள். அடுத்த வாரங்கள் மற்றும் மாதங்களில் நடந்தவை நம்பமுடியாதவை. சிலர் என் இடத்திற்கு வந்து நான் அழ உதவினார்கள். மற்றவர்கள் என்னை வெளியே அழைத்துச் சென்று சிரிக்க வைத்தார்கள். சிலர் உணவு வழங்கினர். மற்றவர்கள் என் சகோதரனின் மரியாதைக்காக தொண்டு நன்கொடைகளை வழங்கினர். சிலர் இரவு முழுவதும் பயணம் செய்து என்னை ஆதரிப்பதற்காக என் சகோதரரின் நினைவு ஆராதனையில் பங்கேற்றனர். என் கடினமான பயணத்திலிருந்து என்னை வரவேற்க மற்றவர்கள் கிறிஸ்மஸுக்காக என் வசிக்கும் இடத்தை அலங்கரித்தனர். என் நண்பர்கள் ஒவ்வொருவரும் என்னைக் கவனித்துக்கொள்வதற்கு கர்த்தர் அவரவருக்கு குறித்ததை செய்தார்கள்.


முதல் கொரிந்தியர் 12, நாம் பல அங்கங்களைக் கொண்ட ஒரு சரீரம் என்று போதிக்கிறது. கர்த்தர் நம் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான தாலந்துகளையும், திறமைகளையும், ஆசைகளையும் மற்றவர்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தும்படி கொடுத்திருக்கிறார். என் துக்க நேரத்தில் எனக்கு சேவை செய்வதற்கு தங்களிடம் இருந்தவற்றை பயன்படுத்திய எனது நண்பர்களுக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். மற்றவர்களுக்கு அதிகமாக தேவைப்படும் காலத்தில் சேவை செய்து இயேசுவைப் போல் நேசிக்க உங்களுக்குத் தேவையானது உங்களிடம் உள்ளது என்பதை இன்று உங்களுக்கு நினைவூட்டி உங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன்.


அமன்டா டேவிஸ்
Life.Church Tulsa


வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

Love Like Jesus

நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங...

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்