திட்ட விவரம்

இயேசுவைபோல நேசியுங்கள்மாதிரி

Love Like Jesus

13 ல் 13 நாள்

இயேசுவை போல் நேசிப்பது இயேசுவை நேசிப்பதே.

எங்கள் குடும்பம் வறுமையில் வளர்ப்பு பராமரிப்பு திட்டத்திற்குள்ளாக இணைந்தபோது, நாங்கள் சென்றிராத ஒரு சபைக்கு கிறிஸ்துமஸ் விருந்திற்காக அழைக்கப்பட்டோம். அந்த இரண்டு மணிநேரம் என் கண்ணீரை தடுத்து நிறுத்த நான் அதிக சிரமப்பட்டேன். எங்கு பார்த்தாலும் அந்த கூட்டத்தில் என்னால் இயேசுவின் முகத்தையே பார்க்க முடிந்தது.


நாங்கள் எங்கள் பிள்ளைகளோடு உள்ளே செல்வதற்குமுன்பே, எங்களுக்கு அழைப்பு கொடுத்த அந்த நண்பனில் இயேசுவைக் கண்டோம். அவர் ஒரு போதை மருந்திற்கு பிறந்ததிலிருந்தே அடிமையான ஒரு சிறு பெண்ணாக அவள் கையில் தாங்கப் பட்டவராக வந்தார். உள்ளே சென்றவுடன், கதவின் அருகில் நின்று வரவழைத்த நபரில் திரும்பவும் இயேசுவைக் கண்டோம். கிறிஸ்துமஸிற்கு முந்தைய நாளை கடையில் பொருட்களை வாங்குவதில் செலவிடாமல் அந்த தன்னார்வலர்கள் எங்களை உற்சாகமாக உள்ளே வரவழைத்து, எங்களுக்கு உதவுவதில் மும்முரமாக இருந்தார்கள், அவர்களிலும் இயேசுவைக் கண்டோம். எங்களுக்கு ஆடைகளையும், பெயர் பொறிக்கப்பட்ட குறிப்பேட்டையும் தந்தார்கள். அங்கும் இயேசு இருந்தார். ஒரு தகப்பனாக, தாயாக, நம்பமாட்டீர்கள், ஆனால் ஆறு பள்ளி செல்லும் குழந்தைகளை தாங்கிக் கொண்டிருந்தார். அநேக பிள்ளைகள் சோடா பாட்டில் கண்ணாடி அணிந்தும், காலிற்கு காலுறை தளைப்பட்டைகள் அணிந்தும் இருந்தனர், ஆனால் சுத்தமான ஆடைகள் அணிந்து சந்தோஷமாக சிரித்துக்கொண்டிருந்தனர். ஒரு சிறுவன் அவனுக்கு யார் கொடுத்ததென்று கூட அறியாமல் அவனுடைய விளையாட்டு பரிசை பெருமையாக எல்லோருக்கும் காட்டிக்கொண்டிருந்தான். அங்கு இயேசு ஒரு தகப்பனாக ஒரு சக்கர நாற்காலியில் இருந்த பையனின் எச்சிலை துடைத்துக்கொண்டிருந்தார். அந்த பையனால் திரும்பி அந்த தகப்பனை பார்க்க மட்டுமே முடிந்தது. இயேசு ஒரு சிறிய குழந்தையை கையில் ஏந்தி, பேசிக்கொண்டிருந்த தாயாக இருந்தார். அவரே அந்த தாயாரின் கால்களைப் பிடித்துக்கொண்டிருந்த மற்றொரு குழந்தையாகவும் இருந்தார். இன்னும் ஒரு வயதான ஸ்திரி செவிக்கருவிகள் அணிந்திருந்த பிள்ளைகளுக்காக ஒரு காதின் வழியே பாடிக்கொண்டிருந்தார். சிறுபிள்ளைகளை மகிழ்விப்பதற்காக ஒரு முதியவர் கிறிஸ்துமஸ் தாத்தாவை தொப்பி அணிந்து சிறுவருக்கான கிறிஸ்மஸ் பாட்டுகளை பாடி அவர்களை சாந்தப் படுத்திக் கொண்டிருந்தார். அநேக பரிசுகளையும் வீட்டு மளிகைப் பொருட்களையும் பெற்றுக்கொண்டு அன்று நாங்கள் வீடு திரும்பினோம். அன்று எங்களோடு வீட்டிற்கு வந்த அந்த இரண்டு சகோதரிகளை இயேசுவாகக் கண்டோம். இயேசு என்னுடைய குடும்பமாகவே இருந்தார். ஒரே நேரத்தில் நாங்கள் இயேசுவாக இருந்தும் இயேசுவை நேசித்துக்கொண்டும் இருந்தோம். நான் எங்கு பார்த்தாலும் இயேசுவையே காணமுடிந்தது, நேசிப்பவர்களிலும் நேசிக்கப்பட்டவர்களிலும்.


இன்றைய தியானப் பகுதியில், பவுல் சபையை எடுத்துக்காட்டாக இருக்கும்படி அழைக்கிறார். அங்கு சமத்துவம் இருக்கவேண்டும் என்று. நாம் அனைவரும் ஒன்றாக இந்த சபையில் இருக்கிறோம் என்று. அவருடைய கால்களாகவும் பாதங்களாகவும் மாத்திரமல்ல, அவருடைய முகமாகவும் இருக்கும்படியாக. அவருடைய உறுதியான காணக்கூடிய சரீரமாக. ஆனால் நாம் நம்மை சுற்றிலும் இருக்கக்கூடிய துக்கம், தேவை, வலி, தரித்திரம், உடைந்த தன்மை மற்றும் தனிமையில் நம்மை முழுவதும் மூள்கடிக்காவிட்டால் நாம் அதை உணர முடியாது. அப்படி இருக்கும்போது உங்களை சுற்றிலும் கிறிஸ்மஸ் அன்று குடும்பம் இல்லாமல் தனிமையில் வாடும் பிள்ளைகள் உங்கள் இதயத்தை உடைக்காது, ஏனென்றால் அவர்கள் பெயர் கூட உங்களுக்கு தெரியாது. அவர்களுடைய கண்களினூடே நீங்கள் பார்த்தால் ஒழிய இயேசுவின் முகத்தை இந்த உலகிலேயே காணும் சந்தோஷத்தை நீங்கள் அறிய மாட்டீர்கள்.


ஆனால் அதன் மதிப்பு உரியதே, அவர் முகம் மிக அழகானது. அவர் சர்வ வல்லமை படைத்தவர், மகிமையானவர். அதுவே இயேசுவை நேசிக்க எல்லா காரணங்களுக்கும் மேலானது—நம்மில் உள்ள எல்லாவற்றையும் கொண்டு.


கென்ரா கோல்டென்
Life.Church Creative Media Team


வேதவசனங்கள்

நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

Love Like Jesus

நாம் இயேசுவை முதலாவது நேசிக்காமல் அவரைப்போல வாழ எப்படி கற்றுக்கொள்ளமுடியும்? Life.Church ஊழியர்கள் மற்றும் அவர்கள் தம்பதிகளோடு சேர்ந்து வாசியுங்கள். இதன்மூலம் இயேசுவைபோல் வாழவும் நேசிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் வேதவசனங...

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்