திட்ட விவரம்

எனக்குத் தேவையான அனைத்தும்மாதிரி

Everything I Need

3 ல் 1 நாள்

எனக்கு தேவையான அனைத்தும்: என் பங்கு






“நான் ஏன் கவலைப்பட வேண்டும், ஏன் என் வாழ்க்கை இருளாக வேண்டும்,

ஏன் என் இருதயம் தனிமையாக உணர வேண்டும், பரத்திற்கும் வீட்டிற்கும் வாஞ்சிக்க வேண்டும்;

இயேசு என் பங்காக இருக்கும்போது, என் நித்தியா நண்பனாக இருக்கும்போது.

அவர் கண்கள் சிட்டுக்குருவியின் மேல் உள்ளது, என்னையும் நோக்கிப்பார்ப்பார் என்று நான் அறிவேன்.

நான் சந்தோஷமாக சுயாதீனமாக இருப்பதால் பாடுகிறேன்.

அவர் கண்கள் சிட்டுக்குருவியின் மேல் உள்ளது, என்னையும் நோக்கிப்பார்ப்பார் என்று நான் அறிவேன்.”

-Civilla D. Martin, 1905




உங்களை பற்றி எனக்கு தெரியாது ஆனால் பங்கு என்னும் வார்த்தை நான் பார்த்த ஒரு விளம்பரத்தால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. அநேக ஆண்டுகளாக நான் பங்கு என்றால் உணவு, உணவுமுறை என்று தவறாக புரிந்து கொண்டேன். அதற்கு தடை என்றும், என்னையே நான் அந்த பிடித்த உணவில் இருந்து என்னை தடை செய்வது என்றே புரிந்து கொள்ளப்பட்டது. எனக்கு என்ன வேண்டும் என்பதிலிருந்து என்னை தடுத்து என்னை திருப்திப்படுத்தாத ஒரு வார்த்தையாக உணரப்பட்டது.



நான் "பங்கு" என்ற வார்த்தையை சொன்னால்... கட்டுப்பாடு என்றே புரிந்துகொள்கிறோம்!



சிவிலியா மார்ட்டின் இந்த அழகான வரிகளை பாடலாக்கிய போது பங்கு என்ற வார்த்தைக்கு இந்த அர்த்தத்தை தான் மனதில் கொண்டிருந்தாரா என்று யோசிக்கிறேன். (சில சுவாரஸ்யமான பின்னணிபாடல் கதை பற்றி பாருங்கள்!) இந்த பாடல் ஒரு கிறிஸ்துவ தம்பதி, அநேக உடல்ரீதியான சுகவீனங்கள் மத்தியில், விசுவாசம் நிறைந்த சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்ததை குறித்து எழுதப்பட்டது. நிச்சயம் இந்த பாடலில் கட்டுப்பாட்டை மனதில் வைத்து எழுதவில்லை என்று நான் நம்புகிறேன், நாம் இந்த காலத்தில் சர்க்கரை மற்றும் உணவு பொருட்களை கட்டுப்படுத்தி உண்பதை போல. இந்த உணவுமுறை மற்றும் கட்டுப்பாடுகள் சமீபத்திய நாட்களில் உண்டான வார்த்தைகள் தான்.



இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், நாம் சாப்பிடும் தின்பண்டங்கள் உண்டாயிருக்கவில்லை. உணவு இவ்வாறு சமைக்கப்படவில்லை, எந்த ஒரு உணவும் தயாராக செய்யப்பட்டு கவரில் அடைக்கப்பட்டு விற்கப்படவும் இல்லை. இந்த நாட்களில் நாம் ஒரு கடைக்கு சென்று 30 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில், இஷ்டமானதை வாங்கி சாப்பிடமுடிகிறது!



பங்கு என்னும் வார்த்தைக்கு அளவு என்று அர்த்தம் அல்ல. ஒரு பரிபூரண அளவு, ஒரு குறைவான அளவு அல்ல. உனக்கென்றே செய்யப்பட்ட அளவு... மற்ற யாருக்கும் பொருந்தாத அளவு. நமக்கு தேவையான சரி சமமான அளவு. பங்கு என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் "ஒரு நபருக்கு வந்து சேரவேண்டிய ஒரு பொருளின் அளவு: உதாரணத்திற்கு ஒரு ஈவு அல்லது சொத்து.”



ஒரு ஈவு, அல்லது பரம்பரை சொத்து - நாம் சொந்தமாக சம்பாதிக்க கூடாத ஒன்று, தேவனுடைய ராஜ்யத்திற்குள் ஒரு குமாரனாக அல்லது குமாரத்தியாக தத்தெடுக்க படும்போது நாம் பெறக்கூடிய கணம். இயேசுவே நம் பங்கு. நம்முடைய நல்ல பங்கு. குமாரன் குமாரத்தி என்று பட்டம்பெற்று அதற்கு கூட கொடுக்கப்படும் பரம்பரை சொத்து.



சங்கீதம் 16:5 [AMP] சொல்கிறது, “கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர்." நமக்கு நல்ல பங்கு உண்டு ஏனென்றால் தேவன் நல்லவராக இருக்கிறார். நமக்கு ஒரு பரிபூரண பங்கு இருக்கிறது, நமக்கு ஒதுக்கப்பட்டு நம்மை பாதுக்காத்து, உயர்த்தி, நம்மை எல்லா புயல்கள் யுத்தங்கள் மத்தியிலும் பறக்க செய்யும் ஒரு பங்கு. அவருடைய பங்கு நமக்கு ஒரு பரிபூரண ஈவாக நம்முடைய ஜீவியத்திற்கு மிகவும் தேவையாக இருக்கிறது.






பிரதிபலிக்க:




  • பங்கு என்னும் வார்த்தையை யோசிக்கும்போது, போதுமான ஒன்றா, அல்லது குறைவான ஒன்றா மனதில் தோணுகிறது? முழுமையாக இந்த நேரம் உணருகிறீர்களா? ஏன் அவ்வாறு உணருகிறீர்கள்?

  • உங்கள் பங்கு என்ன என்று தேவனிடம் நீங்கள் கேட்டதுண்டா? இல்லையென்றால், சிறிது நேரம் ஒதுக்கி அவரிடம் கேளுங்கள். அந்த பங்கை தடுத்து நிறுத்தும் எந்த ஒரு காரியம் இருந்தாலும் அதை உங்களுக்கு காட்ட கேளுங்கள். தைரியப்படுங்கள். தேவன் உண்மையுள்ளவர்!

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Everything I Need

தேவன் நமக்கு முன்பு சென்று நம்மை பின்னிருந்து பாதுகாத்திருக்கிறார். அவர் நம்முடைய யுத்தங்கள் அனைத்தையும் ஏற்கனவே கையாழ்ந்திருக்கிறார். நாம் காணக்கூடாதவைகளை சரிசெய்து இருக்கிறார். திடீர் திருப்பங்களை கண்டு அவர் அஞ்சுவதில்...

More

இந்த திட்டத்தை வழங்குவதற்காக ஹாலி மஃனுசன்-க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, செல்க: http://www.hollymagnusonco.com/

சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்