திட்ட விவரம்

தேவனுக்கு செவிக்கொடுத்தல்மாதிரி

Listening To God

7 ல் 7 நாள்

நல்ல மேய்ப்பரை அறிவது



"நானே நல்ல மேய்ப்பன்; என்னுடைய ஆடுகளை நான் அறிவேன், என் ஆடுகளும் என்னை அறியும்—" யோவான் 10:14 NIV




உங்கள் கவனத்திற்கென்று இரண்டு கேள்விகளை கேட்கிறேன்.




உங்கள் பரம பிதாவோடு நேரம் செலவளிக்கும்போது எவ்வாறு உணருகிறீர்கள்?

அவரோடு பேசுவது எப்படி இருக்கிறது?




சிறிது நேரம் செலவழித்து இந்த அனுபவங்களை விவரியுங்கள்.




நான் இங்கு குறிப்பிட விரும்புவது ஜெபம் என்னும் தலைப்புதான். இந்த அதிகமாக பயன்யடுத்தப்படும் "ஜெபம்" என்னும் வார்த்தையில் அநேக மக்கள் சிக்கிக்கொள்ளுகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். நாம் அதை "அதிக-ஆவிக்குரியதாக" மாற்றுகிறோம். தேவன் நாம் வெறும் மனிதர்கள் என்று அறிந்திருக்கிறார், ஆனாலும் நாம் "நல்ல" ஜெபம் செய்து அவரை கவர முயலுகிறோம். பின்னர், நாம் கவன குறைவாகி, அந்த பழக்கத்தை கைவிட்டு பின் ஒருமுறை "முயற்சிப்பேன்" என்று சொல்லுகிறோம். இப்படி செய்வதன்மூலம், ஜெபம் என்னவாக இருக்க வேண்டுமோ, அதை முற்றிலும் மறந்துபோகிறோம்!




ஜெபம் நாம் தேவனோடு தொடர்பு கொள்ளும் எளிமையான முறைமைதான். நாம் அவரோடு உறவு கொள்ளும் முறைமை. தேவன் நாம் ஜெபத்தில் எவ்வாறு அவரிடம் வர வேண்டும் என்று நினைக்கிறார்? அவருடைய பெரிய வாஞ்சை என்னவென்றால், நம்முடைய முழு இருதயத்தையும், முழு ஆத்துமாவையும், முழுப் பலத்தையும் தனக்கென கொள்ளுவதே. இதை உபாகமம் 6:5 வாசிக்கின்றோம், அல்லவா?




முதலாவது, நாம் அவரில் சந்தோஷப்பட வேண்டும் என்று நினைக்கிறார்.அவரில் கவனம் வைக்கவேண்டும், நம்முடைய "ஜெபத்தில்" அல்ல.




நாம் நாமாகவே அவரிடம் வந்து, நிர்பந்தமான, தகுதியற்ற, ஆனாலும் முழுமையாக நேசிக்கப்படும் நம்மை, எல்லாம் வல்ல, எல்லா மகிமையையும் உடைய, அதிக இரக்கமுடைய பிதாவிடம் கொடுக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்யும்போது, அவருடைய நிரம்பிவழியும் பெலன், மறுசீரமைப்பு, ஞானம், சமாதானம், நீதி மற்றும் சந்தோஷத்தை பெற்றுக்கொள்வோம். அவர் சமூகத்தில் பரிபூரண ஜீவன் உண்டு. அவரே ஜீவ தண்ணீரும் ஜீவ அப்பமுமானவர்.




நாம் ஜெபிக்கும்போது, நாம் பேசுவது மட்டுமல்லாமல் கவனித்து கேட்கவும் வேண்டும். அவருடைய நன்மையான பாதைகளை கேட்டு பின்பற்றவேண்டும். களிகூர்ந்தோ, விளையாட்டுத்தனமாகவோ, வியாகுலத்தோடோ, சந்தேகத்தோடோ, அல்லது பயத்தோடோ நீ வா. மரண பள்ளத்தாக்கின் இருளிலும் நீ அவரிடம் வா. அவரிடம் கிட்ட சேர்ந்து அவரின் ஜீவன் மற்றும் நம்பிக்கை அளிக்கும் அரவணைக்கும் வார்த்தைகளை கேள்.




ஆகவே, களைப்பான சூழ்நிலையிலும் மற்ற எல்லா சூழ்நிலையிலும்-நாம் அவரிடம் தொடர்ந்து வர வேண்டும். நாம் அவ்வாறு செய்யும்போது, நம்முடைய மேய்ப்பரை அறிய துவங்குகிறோம். உண்மையில் அறிய துவங்குகிறோம்.




எனக்கு, என்னுடைய அமைதலான ஜெப நேரம் என்னுடைய நெருங்கிய நண்பர்களோடு அமர்ந்து தேநீர் பருகுவதுபோன்றது. அது அற்புதமானது. இல்லையா? பால்.ஈ.மில்லர் அவருடைய புத்தகம் ஜெபிக்கும் ஜீவியம், இல் சொல்வதுபோல "நீ தேவனை தானாக அறிந்துகொள்ள முடியாது. நீ நெருக்கத்தை அவரிடம் உருவாக்கமுடியாது, அதற்கு இடம் தான் தரமுடியும்."




இந்த கடந்த ஏழு நாட்கள் தேவ சத்தத்தை கேட்பதைக் குறித்த உங்கள் விளங்கிக்கொள்ளுதலை ஆழப்படுத்தி இருக்கிறது என்று நான் ஜெபிக்கிறேன். நாம் அதிக வேளை நினைப்பதுபோல அது குழப்பமானது அல்ல. அது பொய்யை கேட்காமல் நம் காதுகளை மூடுவது, இருதயத்தை திறப்பது, அமைதியாய் இருப்பது, நம்முடைய நல்ல மேய்ப்பனை பேச அனுமதிப்பது என்ற சுலபமான காரியம் அது.




தேவனுக்கு செவிகொடுப்பது எப்போதும் நம் நல்ல மேய்ப்பரை அறிந்துகொள்வது தான் என்று நீங்கள் ஆழமான புரிந்துகொள்ளுதலை பெற்றிருப்பீர்கள் என்று நான் ஜெபிக்கிறேன்.




பிதாவிடம் சொல்லுங்கள்: இன்று, நான் உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும், மனதோடும், பெலத்தோடும் தேடுவேன். இப்போதே நான் துவங்குகிறேன், உண்மையான நானாக, உண்மையான உமக்கு முன்பாக வருகிறேன். ஒவ்வொரு நாளும் இன்னும் அதிகமாக உம்மை அறிந்துக்கொள்ளவும் உம் சத்தத்தைக் கேட்கவும் விரும்புகிறேன்.




இன்றைய ஆராதனை பாடல் பரிந்துரை: “Touch the Sky” by Hillsong United



நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Listening To God

ஏமி க்ரோஷெல் எழுதிய இந்த ஏழு நாள் வேதாகம திட்டம், நம் அன்பு பிதாவின் இருதயத்திலிருந்து நேராக உங்களுக்கு எழுதப்பட்டுருக்கிறது என்று நம்புகிறோம். அவர்களுடய ஜெபம், நீங்கள் எல்லா எதிர் சத்தங்களையும் தவிர்த்து அவரது குரலில் க...

More

இந்த திட்டத்தை வழங்கும் Life.Church க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.life.church க்கு செல்லவும்.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்